ரகசிய காதலன் - 23

310 23 5
                                    

ஆதன் மன உலைச்சலின் காரணமாக கடைசியாக ராகவியிடம் அமர்ந்து பேசிய இடத்திற்கு சென்று வருவோம் என்று அருகில் இருந்த பார்க்கிற்கு சென்றான். ஆனால் அங்கு ஆதனிற்கு முன்பு ராகவி அந்த பென்ஞ்சில் அமர்ந்து அதை தன் கையால் அழுகையுடன் குத்திக் கொண்டிருந்தாள்.

அவள் கை முஷ்டிகள் காயம் பட்டு இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. அதையும் பொறுட்படுத்தாமல் ராகவி அழுதவாறே மீண்டும் மீண்டும் தன் கையை காயப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் மனதில் நிறைந்திருந்த வலிகளின் வெளிப்பாடே தற்பொழுது அவள் கைகளில் இரத்தமாய் கசிந்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவோ அவளும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க தான் முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஆனால் திருமணம் நெருங்க நெருங்க ராகவியின் மனதில் தான் விரும்பிய தான் மனதை தொலைத்த ஆடவனுக்கும் தன் அக்காவிற்கும் திருமணம் என்னும் எண்ணத்தின் கஷ்டமும் அவளாகவே விட்டு கொடுத்து விட்டு நிற்கதியாய் நிற்கும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமலும் ஆதன் போன்றதொரு ஒரு நல்லவனை தன்னை மட்டுமே உயிராய் நேசிக்கும் ஒருவனை இழக்க போவதையும் நினைத்து மனம் நொந்து தன்னை தானே தாக்கிக் கொண்டிருக்கிறாள்.

ஆதன் அவளின் செயலை கண்டு பதறியவன் வேகமாக ஓடி சென்று "கவி" என்று உருகும் குரலில் அழைத்து அவள் கைகளை பற்றிக் கொண்டான். ராகவி அவனை அங்கு எதிர்பார்க்காததால் அதிர்ந்து விழித்தாள். ஆதன் அவசரமாக தன் கை குட்டையை எடுத்து அவள் கையில் சுற்றி விட்டான். "என்ன கவி இது ... ஏன் இப்படி பன்ற ... வா ஹாஸ்பிடல் போலாம்" என்று ஆதன் அழைத்தான்.

அப்பொழுது தான் அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராகவி தன் கையை ஆதனின் கையில் இருந்து எடுத்துக் கொண்டு "அதெல்லாம் வேண்டா சின்ன காயம் தான்" என்று கூறி அங்கிருந்து எழுந்தாள்.

ஆதன் ராகவியின் மணிகட்டை பிடித்து அவளை நிறுத்தி "நான் தான் உன் விருப்பப்படி உன் அக்காவ கல்யாணம் பன்னிக்க சம்மதிச்சிட்டனே ... நாளைக்கு கல்யாணம் வேற ... இன்னைக்கு ஒரு நாளாவது நீ என் கவியா என் கூட கொஞ்ச நேரம் இருப்பியா ப்லீஸ்" என்று கெஞ்சலுடன் கேட்டான்.

ரகசிய காதலன்Where stories live. Discover now