ரகசிய காதலன் - 17

294 23 4
                                    

ஆதன் திவ்யாவின் அழைப்பை துண்டித்து விட்டு கீழே சாப்பிட சென்றான். அவன் முகத்தில் முன்பை போல் ஒரு தெளிவும் தெம்பும் இல்லை. குழப்பமும் சோகமும் நிறைந்திருந்தது. இத்தனை வருடங்களாய் அவன் முகத்தில் தெரிந்திடாத உணர்ச்சிகள் இன்று வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆதன் தன் தந்தையிடம் ஒரு மன்னிப்பை கேட்டு விட்டு நலம் விசாரித்தவன் அமைதியாக சாப்பிட அமர்ந்தான். இளமாறன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ராகவிக்கு அழைத்தான். "டேய் சாப்பிடும் போது யார்க்கு கால் பன்ற" என்று ஆதனின் தந்தை அதட்டலாக கேட்டார்.

"ராகவிக்குப்பா ... காலையில இருந்து எங்க போனான்னே தெரியலன்னு அவங்க அப்பா அம்மா சொல்லிட்டு இருந்தாங்க வீட்டுக்கு போய்ட்டாளா இல்லையான்னு நானும் உங்களை டிஸ்சார்ஜ் பன்னதுல கேக்க மறந்துட்டன் அதான்" என்று இளமாறன் கூறினான்.

'அப்படின்னா அவ இங்க வந்து போனது கூட யார்க்குமே தெரியாதா' என்று நினைத்த ஆதன் "ஏன் அத சாப்பிடும் பேது தான் கால் பன்னி கேக்கனுமா சாப்பிட்ட அப்பறம் கேட்டா ஆகாதா ... போன வச்சிட்டு சாப்பிடு" என்று ஆதன் இளமாறன் தனக்கு உரிமையானவளிடம் பேச போகும் பொறாமையில் கோபமாக கூறினான்.

"இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இவ்வளவு கோவம் உங்களுக்கு வச்சிட்டன்" என்று இளமாறன் பாதி அழைப்பிலே கைப்பேசியை அணைத்து விட்டு வைத்தான்.

கைப்பேசி அழைப்பு சத்தம் அறையில் கேட்கவும் ஆதன் தான் அழைப்பான் என்ற ஆசையில் பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்து ஓடி வந்த ராகவியை ஏமாற்றும் வகையில் இளமாறனிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

ராகவிக்கு சாப்பாடு இறங்க மறுக்கிறது தான் ஆனால் சாப்பாடு வேண்டாம் என்றால் வீட்டில் காரணம் கேட்பார்க்கள் எந்த காரணத்தை தான் பாவம் அவளும் கூறுவாள். அதனாலே ராகவி சாப்பிட அமர்ந்தாள். பெயருக்கென்று சிறிது விழுங்க முடியாமல் விழுங்கியவள் கைப்பேசி அழைப்பு சத்தத்தில் போதும் என்று ஓடி வந்து விட்டாள்.

ரகசிய காதலன்Where stories live. Discover now