ரகசிய காதலன் - 7

347 25 6
                                    

ராகவியின் அருகில் "ஹாய்" என்ற புன்னகையுடன் சென்று அவன் நிற்க ராகவி தன் வலியை மறைத்துக் கொண்டு புன்னகைத்தவள் "ஹாய் ... உட்காருங்க" என்று கூறினாள்.

அவள் கனவில் கண்டது போலவே இருவருக்கும் இடையில் சிறு இடைவெளி விட்டு அவன் அமரவும் ராகவி புன்னகைத்தாள். "கை ரொம்ப வலிக்குதா" என்று அவன் கேட்க "இல்லைங்க லைட்டா தான்" என்று கூறிய பின் தான் அவனுக்கு எவ்வாறு தெரியும் என்ற கேள்வி அவளுக்கு தோன்றியது.

"உங்களுக்கு எப்படி" என்று ராகவி அதிர்ச்சியாக கேட்க "பால் வர்ரத நா பாத்துட்டன் ... வேகமா உங்க கிட்ட வர்ரதுக்குள்ள பால் உங்க மேல விழுந்துருச்சி" என்று அவன் கூறினான். "ஓஓஓ" என்று கண்கள் சுருக்கி வலியை பற்களை கடித்து கட்டுப்படுத்தியவளை பார்த்தவன் அவள் வலியை புரிந்துக் கொண்டான்.

"வாங்க ஹாஸ்பிடல் போலாம்" என்று அவன் அழைக்க "இல்லைங்க பரவால்ல நீங்க சொல்லுங்க என்ன பேசனும்" என்று ராகவி கேட்க "முதல்ல என் கூட வாங்க நீங்க... என் கண் முன்ன வலில கஷ்டப்பட்டுட்டு இருக்க உங்களை விட நா பேச வந்தது முக்கியம் இல்லை" என்று அவன் கூறினான்.

"ஐய்யோ பரவால்லங்க நீங்க சொல்லுங்க நா போற வலில மெடிக்கல் போய்ட்டு போறன்" என்று ராகவி கூறினாள். "ம்ச் சொன்னா கேக்க மாட்ட வா என் கூட" என்று அவன் எழுந்து அவள் மறு கையை பிடித்து இழுத்தான். ராகவியும் அவன் ஸ்பரிசம் கொடுத்த மயக்கத்திலே அவனுடன் எழுந்து நடந்தாள்.

இருவரும் வெளியில் வந்ததும் அவன் வண்டியை எடுக்க அவள் தயங்கியவாறு நின்றாள். "என்ன யோசனை ஏறு" என்று கூறியவன் ஹெல்மெட்டை அவளிடம் நீட்டினான். அவள் கையை பார்த்து விட்டு அவனிடம் "என்னால போட்டுக்க முடியாதுங்க கைய தூக்க முடியல நீங்க தான வண்டி ஓட்ட போறிங்க நீங்க போட்டுக்கோங்க" என்று கூறினாள் ராகவி.

அவன் வண்டியில் இருந்து இறங்கி அவனே ராகவி தலையில் தலைகவசத்தை மாட்டி விட்டு வண்டியை உயிர்பித்தவன் ராகவியை பார்த்தான். ராகவியும் அவனுடன் பயணம் செய்ய போகும் நிமிடங்களை எண்ணி பூரித்தவாறே பின்னால் ஏறினாள்.

ரகசிய காதலன்Where stories live. Discover now