ரகசிய காதலன் - 3

392 23 4
                                    

ஜெகனை தேடி வரதராஜனும் ராகவியும் கிளம்பி அந்த நாலு வழி சாலையில் நின்றனர். ஜெகன் ஒரு ஓரமாக அமர்ந்து அழுதவாறு புலம்பிக் கொண்டிருந்தான்.

"ஜே" என்று கத்திக் கொண்டு ஜெகனிடம் ஓடிய ராகவி அவன் கை பிடித்து தூக்கி நிறுத்தினாள். "பைத்தியமா டா நீ வா வீட்டுக்கு போலாம்" என்று ராகவி அழைக்க "ம்ஹும் மாட்டன் எனக்கு லவ் பெயிலியர் நா சாக தான் போறன்" என்று கூறிய ஜெகன் "கடைசியா உன்னையும் பாத்துட்டன் ... இனி நா திருப்தியா சாவன்" என்று திட்டின் மேல் ஏற போனவனை இழுத்து நிறுத்தினாள்.

வரதராஜன் "ஜெகன் என்னப்பா இதெல்லாம் முதல்ல வா வீட்டுக்கு போலாம் எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்" என்று ஜெகனின் மறு கையை பிடித்துக் கொண்டு கூறினார்.

"இல்லை அங்கிள் இனி நா வாழ்றதுல அர்த்தமே இல்லை நீங்க ராகவிய கூட்டிட்டு கிளம்புங்க அங்கிள்" என்று ஜெகன் வரதராஜனின் கையை தட்டி விட்டு கூறியவன் போதையில் பின்னால் சாய்ந்து கீழே விழச் சென்றான். ராகவி அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

ப்ரிஜ்ஜில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தவனை பதறிய வரதராஜன் ஜெகனின் மறு கையை பிடித்தார். "என்னை விட்ருங்க அங்கிள் நீங்க போங்க" என்று ஜெகன் கூற ராகவி "வாய மூடு ஒழுங்கா மேல ஏறி வா" என்று திட்டினாள்.

"என்னால நீங்களும் கீழ விழுந்தர போறிங்க விடுங்க" என்று ஜெகன் தன் கையை அவர்களிடம் இருந்து உறுவினான். "டேய் கைய விடாத டா பிடி" என்று ராகவி தன்னால் இயன்றவரை ஜெகனின் கையை பற்றினாள். ஆனால் ஜெகன் அவன் கையை உறுவிக் கொண்டு கீழே விழ போனவனை மூன்றாவதாக ஓர் கை பிடித்தது.

ஜெகன் கீழே விழுந்து விட்டான் என்று நினைத்து பயத்தில் "ஜே" என்று கத்திய ராகவி அவனை மற்றொரு கை பிடித்திருப்பதை பார்த்து தன் அருகில் பார்த்தான். அவன் தான் . ராகவியின் மனதில் குடியேறி வெளியேறாமல் அடம் பிடித்துக் கொண்டிருப்பவனே தான்.

ராகவி அதிர்ச்சியாக அவனை பார்த்தவள் பின் ஜெகன் நினைவு வந்து ஜெகனை பிடித்து மேலே தூக்க அவனுடன் முயற்சித்தாள். மூவரும் சேர்ந்து ஜெகனை இழுத்து மேலே போட்டனர். "ரொம்ப தாங்க்ஸ்ங்க" என்று ராகவி அவனிடம் கூற அவன் ஜெகனை இழுத்தி நேராக நிற்க வைத்து ஓங்கி ஒன்று கன்னத்தில் வைத்தான்.

ரகசிய காதலன்Where stories live. Discover now