ரகசிய காதலன் - 26

320 25 4
                                    

ஆதனும் அவனுடைய நண்பனும் கீழே ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ராகவி அவர்கள் கண்ணில் படாமல் மறைந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்டாள்.

"நீ ஏன்டா இங்க வந்த" என்று ஆதன் கேட்க "கால்ல அடிபட்டு இருந்தப்போவும் உன்னையும் ராகவியையும் புருஷன் பொண்டாட்டியா பாக்கனுன்னு ஆசைப்பட்டு வந்தவன் கிட்ட ஏன்டா வந்தன்னு கேக்கறியே உனக்கே இது நியாயமா படுதா" என்று அவன் கேட்டான்.

"ராகவி என்ன உன்னை மாதிரி அறிவில்லாதவன்னு நினைச்சியா ... அவ உன் பாடி எடையும் உன் கால்ல கட்டையும் பாத்தாலே நீ தான் நைட் திவ்யாவ தூக்க வந்தவன்னு கண்டு பிடிச்சிருவா" என்று ஆதன் கூற ராகவி அதிர்ந்து வாய் மேல் கை வைத்தாள்.

"நீயே சொல்லிடுவ போலவே" என்று அவன் கூற "ஏற்கனவே அவ அன்னைக்கு நகைய பறிச்சதும் நேத்து அக்காவ கடத்த ட்ரை பன்னதும் ஒரே ஆள்ன்ற வரைக்கும் கண்டு பிடிச்சி ஜெகன் கிட்ட சொல்லி இருக்கா ... இப்ப உன்னை பாத்தா கன்பார்ம் பன்னிடுவா ... அதும் நீ என் ப்ரண்ட்ன்னு தெரிஞ்சது மாஸ்ட்டர் ப்ளானே நான்தான்னு தெரிஞ்சிரும்" என்று ஆதன் கூற ராகவி கண்கள் கலங்கி போனது. ஆதனின் வார்த்தை ஒவ்வொன்றும் அவளுக்கு வலித்தது.

அவளை ஏமாற்றி அவள் குடும்பத்தை ஏமாற்றி அவள் அக்காவின் வாழ்க்கையை கெடுத்து தன்னை திட்டமிட்டு திருமணம் செய்துள்ள ஆதன் மீது கோபம் கோபமாக அவளிற்கு வந்தது. இதற்கு மேல் எதையும் கேட்க பிடிக்காமல் அங்கிருந்து வேகமாக அறைக்கு ஓடி விட்டாள். கேட்டிருந்தால் இருவருக்குமான பிரிவு இல்லாமல் போய் இருக்கும்.

"தெரிஞ்சா என்ன டா ... நீ என்ன வேணுன்னா பன்ன இல்லை தப்பு பன்னியா ... அவளை கல்யாணம் பன்னிக்க அவ காதல்ல தக்க வச்சிக்க தான பன்ன .. அத கூட புரிஞ்சிக்க மாட்டாங்களா" என்று அவன் கேட்டான்.

"அவளை பத்தி உனக்கு தெரியல ... அவ எப்படி யோசிப்பான்னு எனக்கு தான் தெரியும் ... இப்போ இந்த உண்மை எல்லாம் அவளுக்கு தெரிஞ்சா அவளையும் அவ அக்காவையும் நா ஏமாத்தனவனா தான் நா தெரிவன் ... கொஞ்ச நேரத்துல எனக்காக தான் எல்லாம் ஆதன் பன்னான்னு நிம்மதி ஆவா ஆனா அதோட சேர்த்து என்னால அவ அக்கா வாழ்க்கை பாதிச்சிருச்சேன்னு கோவப்படுவா ... அத சமாளிக்கவும் அவளை சமாதானம் பன்னவும் எனக்கு தெரியும் ... ஆனா அவ என்னை அப்படி நினைச்சிடவே கூடாதுன்னு நா நினைக்கிறன்" என்று ஆதன் கூறினான்.

ரகசிய காதலன்Where stories live. Discover now