ரகசிய காதலன் - 4

368 26 7
                                    

ராகவியும் ஜெகனும் ஜனனியின் அண்ணனை காண சென்றனர். காபி ஷாப் முன் நின்ற ராகவி "நீ போய் பாரு நா வெளில இருக்கன்" என்று கூறினாள்.

"நா மட்டுமா" என்று ஜெகன் பதட்டத்துடன் கேட்க "நீ தான் வேற யார் போவா ... நீ தான லவ் பன்ற நீதான் சால்வ் பன்னனும் போ" என்று ராகவி கூறினாள். "எனக்கு பயமா இருக்கு ராகவி ... கொஞ்சம் கூடவாவது வாயேன்" என்று ஜெகன் கூற "முடியாது லவ் பன்ன தெரியுது இல்லை போ" என்று ராகவி ஜெகனை உள்ளே துரத்தி விட்டாள்.

ஜெகன் படபடப்புடனே உள்ளே நுழைந்து ஜனனியை  தேடினான். கடைசி டேபிளில் அமர்ந்திருந்த ஜனனியையும் அவள் அருகில் அமர்ந்திருந்த அவனையும் கண்டதும் ஜெகன் அதிர்ந்தான். 'இவர் எங்க இங்க ... ஏற்கனவே இரண்டு முறை வாங்கிட்டன் இன்னைக்கு கண்டிப்பா என்னை பொதைக்க குழியே தோண்டனும் போலையே' என்று நினைத்தவன் கை கால்கள் அவன் அனுமதியின்றி நடுங்க தொடங்கியது.

அப்படியே வந்த வழியே திரும்பி வெளியில் ஓடி வந்து விட்டான். உள்ளே சென்றதுமே வெளியில் வரும் தன் நண்பனை கண்டதும் ராகவி "என்னடா அதுக்குள்ள பேசிட்டியா ஒத்துகிட்டாரா" என்று ஆர்வமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்டாள்.

"இல்லை உள்ள உள்ள" என்று ஜெகன் பயத்தில் உலறிக் கொண்டிருந்தான். "உள்ள என்ன டா பேயா" என்று ராகவி கேட்க "இல்லை உன் ஆளு" என்று ஜெகன் பாவமாக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கூறினான்.

"ஐஐ ... நீ போய் ஜனனி அண்ணன் கிட்ட பேசு நா என் ஆள பாக்க போறன்" என்று உள்ளே செல்ல போனவளிடம் "உன் ஆள் தான் அவ அண்ணன்" என்று ஜெகன் கூறியதும் ஏறிய படிகளில் இருந்து ஸ்லோ மோஷனில் இறங்கி ஜெகனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள்.

அவளின் கால்களும் நடுங்க தொடங்கியது. "என்னடா சொல்ர" என்று ராகவி தான் கேட்டது உண்மை தானா என்னும் ரேன்ஜில் கேட்க "ஆமா ஜனனி கூட உன் ஆள் தான் உட்காந்திருக்காரு ... அவ சொன்னதெல்லாம் உன் ஆளுக்கு கரெக்ட்டா பொறுந்தும்" என்று ஜெகன் கூற ராகவி "இப்ப என்ன டா பன்றது" என்று கைகளை பிசைந்தவாறு கேட்டாள்.

ரகசிய காதலன்Onde histórias criam vida. Descubra agora