ரகசிய காதலன் - 22

298 24 16
                                    

ஆதன் "நா ராகவிய காதலிக்கிறன்" என்று வீடே அதிருமாறு கத்தவும் ஆதனின் தந்தையும் இளமாறனும் அதிர்ந்தனர். "ஆதன்" என்று ஆதனின் தந்தை கத்தவும் ஆதன் "நீங்க கேட்டிங்க நா சொன்னன் ... என் மனசுல கவி மட்டும் தான் இருக்கா ... உங்களுக்கு திவ்யா தான் எனக்கு கரெக்ட்ன்னு தோனுனா அதுக்கு நா பொறுப்பில்லை ... எனக்கு ராகவிய தான் பிடிச்சிருக்கு ... திவ்யா வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ராகவி வாழ்க்கையும் வீணா போக நீங்க மட்டும் தான் காரணம்" என்று கூறினான்.

"அண்ணா" என்று இளமாறன் ஆதனின் தந்தையிடம் ஆதன் எதிர்த்து பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அழைத்தான். "நீ சும்மா இரு இளா குறுக்க பேசாத" என்று ஆதன் இளமாறனை அடக்கி விட்டான்.

"அவ உனக்கு சரி வர மாட்டா ஆதன்" என்று ஆதனின் தந்தை கூற "எத வச்சிப்பா அவ எனக்கு சரிவர மாட்டான்னு நீங்க சொல்ரிங்க ... திவ்யாவ விட பொறுப்பானவ ராகவி தான் ... அந்த குடும்பத்தோட பாதி சுமைய தாங்கறவ ராகவி தான் ... அவ எனக்கு சரி வருவா வரமாட்டான்னு மட்டும் பாக்கறிங்களே எனக்கு பிடிச்சிருக்கான்னு பாத்திங்களா" என்று ஆதன் கேட்டான்.

"இப்போ நீ திவ்யாவ கல்யாணம் பன்னிப்பியா மாட்டியா" என்று ஆதனின் தந்தை கேட்க ஆதன் "திவ்யாவ தான் கல்யாணம் பன்னிக்கனுன்னு நீங்க சத்தியம் வாங்கிட்டு இப்ப இந்த கேள்விய கேக்றிங்க ... ராகவி கிட்ட சொன்னத உங்க கிட்டையும் சொல்ரன் கேட்டுக்கோங்க ... என் மனசுல கவி தான் இருக்கா ... அவளை தவிற வேற ஒருத்தி என் மனசுல இடம் பிடிக்கவும் முடியாது ... இடம் புடிக்கவும் அனுமதிக்க மாட்டன் ... திவ்யா கழுத்துல நா தாலி கட்னாலும் என் மனசுல ராகவி தான் இருப்பா ... திவ்யா இந்த வீட்டுக்கும் உங்களுக்கும் எவ்வளவு நல்ல மருமகளா இருந்தாலும் நா அவளை என் மனைவியா ஏத்துக்கவே மாட்டன் ... என் நிழல் கூட அவ மேல விழாது" என்று கூறிய ஆதன் அங்கிருந்து வெளியில் சென்று விட்டான்.

ஆதனின் தந்தை மனமுடைந்து போனார். இளமாறன் அவரை ஆறுதல் படுத்த முயன்றான். "நா அவன் நல்லதுக்கு தான இளா இதெல்லாம் செய்றன் ... அவன் ஏன் அதை புரிஞ்சிக்க மாட்டின்றான்" என்று ஆதனின் தந்தை ஆதங்கமாக கேட்டார். "நம்ம கடவுள் முடிச்ச மாத்த முடியாதுப்பா" என்று இளமாறன் கூற ஆதனின் தந்தை அவனை குழப்பமாக பார்த்தார்.

ரகசிய காதலன்Where stories live. Discover now