ரகசிய காதலன் - 18

288 25 7
                                    

ஆதனின் தந்தை ஆதனிற்கு உணவு எடுத்து வைக்குமாறு யாரையோ அழைக்க ஆதனும் ராகவியும் வேலையாள் என நினைத்து அமர்ந்திருந்த நேரம் சமையலறையில் இருந்து வந்த திவ்யாவை கண்டதும் இருவரும் அதிர்ந்தனர்.

ஆதன் தன் தந்தையை முறைப்புடன் பார்த்தான். "அப்பா என்னப்பா இது" என்று மெல்லமாக கேட்ட ஆதனின் வார்த்தையை கருத்தில் கொள்ளாமல் "வாம்மா சாப்பாடு எடுத்து வை" என்று கூறினார்.

"நா சாப்பிட்டு வந்துட்டன் ... எனக்கு வேணா ஜனனிக்கும் ஜெகன்க்கும் எடுத்து வைங்க" என்று ஆதன் கூறினான். "ஐய்யோ மாமா நாங்க இப்ப தான் வீட்ல சாப்பிட்டோம் மதியம் சாப்ட்றோம்" என்று ஜெகன் மறுத்து விட்டான்.

"அப்போ நா கிளம்பறன் ... வரன் அங்கிள்" என்று ராகவி ஆதனின் தந்தையிடம் கூறியவாறு எழுந்துக் கொள்ள ஜெகன் "ராகவி இரு நா உன்னை ட்ராப் பன்றன் ... நா அவளை விட்டு வரன் மாமா" என்று கூறி அங்கிருந்து கிளம்பினான்.

ஆதன் பாவமாக ராகவியை பார்த்தான். ஆதன் அவ்வாறு தான் பார்ப்பான் என்று யூகித்த ராகவி அவனை ஏறிட்டு பார்க்காமலே அங்கிருந்து கிளம்பினாள். இருவரும் அங்கிருந்து வெளியில் சென்றதும் ஆதன் அவன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

ராகவியுடன் வெளியில் சென்ற ஜெகன் ராகவியிடம் "ராகவி என்ன நடக்குது இங்க இரண்டு நாள்ல திவ்யா தான் இந்த வீட்டு மருமகன்னு முடிவாகற வரைக்கும் நீ என்ன பன்னிட்டு இருந்த ஏன் அமைதியா இருக்க ... உன் லவ்வ மாமா கிட்ட சொன்னியா இல்லையா" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டான்.

"இந்த வாசல்லே நின்னு பேசனுமா" என்று ராகவி கேட்கவும் ஜெகன் வண்டியை எடுத்தான். இருவரும் ஒரு உணவகத்தில் எதிர் எதிரில் அமர்ந்திருந்தனர். "இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே அமைதியா இருக்க போற நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ராகவி" என்று ஜெகன் பொறுமையை இழந்து கேட்டான்.

"நா தான் அவனை லவ் பன்றன் அவனுக்கு என் அக்காவ தான் பிடிச்சிருக்கு ... அதான் நா அமைதியா இருக்கன்" என்று ராகவி கூறினாள். "பொய் சொல்லாத ராகவி ... உன் மனசு இப்போ எவ்வளவு ரணம் ஆகி இருக்குன்னு எனக்கு தெரியும் ... அதே மாதிரி மாமா மனசு எந்த அளவுக்கு கொந்தலிச்சிட்டு இருக்குன்னும் தெரியும்" என்று ஜெகன் கூறினான்.

ரகசிய காதலன்Where stories live. Discover now