ரகசிய காதலன்

1K 26 6
                                    

"அம்மா சீக்கிரம் ம்மா பஸ்க்கு டைம் ஆச்சி" என்று தன் விரிந்திருந்த கூந்தலை கோதி விட்டவாறே அறைக்குள் இருந்து குதித்தோடி வந்த ராகவி சமையலறையில் தன் சாப்பாட்டு மதிய சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்த இந்திராவின் கையில் இருந்த பாக்ஸை பிடுங்கிக் கொண்டு "நா கிளம்பறன்" என்று கூறி விட்டு சிட்டாய் பறந்து விட்டாள்.

"அப்படி என்ன தான் அவசரமோ இவளுக்கு" என்று இந்திரா தன்னை தானே நொந்துக் கொண்டு தன் வேலையை கவனிக்க தொடங்கினார்.

"அவ யாரையாவது சைட் அடிக்க போவா" என்று கூறியவாறே ராகவியின் அக்கா திவ்யா கையில் கைப்பேசியுமாய் காதில் ஹெட்போனுமாய் வந்து சோபாவில் அமர்ந்தாள்.

"காலையிலே செவுட்டு மிஷின்ன மாட்டிகிட்டு அப்படி என்ன தான் டி கேக்கற ... ஒத்த ஆளா எல்லா வேலையையும் செய்றனே ... வந்து கொஞ்சம் ஒத்தாசை பன்னலாம் இல்லை" என்று இந்திரா பாத்திரங்களை துலக்கியபடி கேட்டார்.

அதெல்லாம் அவள் காதில் விழுந்தால் தானே அவள் தான் எப்பொழுதோ பாடலை கைப்பேசியில் ஒலிக்கவிட்டு காலை சோபா அருகில் இருந்த நாற்காலியில் தூக்கி போட்டுக் கொண்டு கண்களை மூடி பாட்டை முனுமுனுக்க தொடங்கி இருந்தாள்.

பதிலே வராததால் இந்திரா எட்டி பார்த்து "இதெல்லாம் வாங்கி கொடுத்த அவ அப்பாவ அடிக்கனும்" என்று புலம்பியவர் வேலையில் கவனம் செலுத்தினார்.

வரதராஜன் மற்றும் இந்திரா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் திவ்யா இளையவள் ராகவி. திவ்யா ஒரு டிகிரி முடித்தவுடனே மேலும் படிக்காமல் வேலைக்கு செல்லவும் விரும்பாமல் வீட்டிலே இருக்கிறாள். ராகவி விஸ்.காம் முடித்து விட்டு ஒரு ப்ரொடொக்ஷன் கம்பனியில் எடிட்டராக வேலை செய்துக் கொண்டிருக்கிறாள்.

வரதராஜனுக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம் வேலைக்காக சென்னை வந்தவர் இங்கேயே தங்கி விட்டார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இல்லை விஷேஷங்களுக்காக மட்டும் ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவர்.

ரகசிய காதலன்Where stories live. Discover now