ரகசிய காதலன் - 5

356 26 6
                                    

அவன் கூறிய 'உன் குடும்பத்தை எடுத்து நடத்து' என்பதை கேட்ட ஜெகன் அதிர்ந்து விழித்தான். "என்ன முடியுமா முடியாதா... முடியாதுன்னா இப்பவே சொல்லிட்டு என் தங்கச்சிய விட்டு கிளம்பிடு ... வருத்தமாவது மிஞ்சும் ... என் தங்கச்சியும் உன்னை மறக்க அவகாசம் கிடைக்கும்" என்று அவன் கூற ஜெகன் அவசரமாக "இல்லை இல்லை நா செய்றன்" என்று அவனின் கூற்றை மறுத்து கூறினான்.

"ம்ம்ம் ... சொன்னத செய்யனும் ... நா அப்படியே போய்ட மாட்டன் உன்னை பாத்துட்டே தான் இருப்பன் ... நாளையில இருந்து உன் சேலன்ஜ் ஸ்டார்ட் ... அடுத்த இரண்டு வருஷம் கழிச்சி பாக்கலாம்" என்று அவன் எழுந்துக் கொண்டான். கூடவே ஜனனியும் ஜெகனும் எழுந்தனர்.

"ஜனனி கிட்ட நா பேசிட்டே தான் இருப்பன்" என்று ஜெகன் கூற "பேசலாம் ... ஆனா லிமிட்டா தான்" என்று அவனும் அவர்களுக்கு அனுமதியை கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வெளியில் ராகவியை பார்த்தவன் ஒரு அக்மார்க் மயக்கும் புன்னகையுடன் அங்கிருந்து ஜனனியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். அவன் கிளம்பும் போது ராகவியை பார்த்து தலையாட்டியதை ராகவி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் புன்னகையான தலையசைப்பு தனக்கானது என்று எண்ணுகையிலே ராகவிக்கு குத்தாட்டம் போட வேண்டும் என்றே தோன்றியது.

ஜெகன் வந்து அவளை உலுக்கும் வரையில் சிரித்தவாறு சாலையையே வெறித்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்க காதலின் அவஸ்த்தையும் சந்தோஷமும் இது தான் . தான் காதலிப்பவரின் தனக்குறிய சிறிய அசைவுமே அவர்களுக்கு சொர்கவாசலை கண்டது போன்றதொரு ஆனந்தம் பிறக்கும்.

"வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியாம அப்படி என்னத்த பாத்துட்டு இருக்க" என்று ஜெகன் கேட்கவும் "அவன் எவ்வளவு அழகா சிரிச்சான் தெரியுமா ... ஹப்பப்பா ... செம ஸ்மார்ட்டா இருந்தான்... பஸ்ட் டைம் அவன் சிரிச்சத பாத்ததும் அதும் எனக்காக சிரிச்சத பாத்ததும் எப்படி இருந்தது தெரியுமா" என்று ராகவி உள்ளே அவன் எதிரில் அமர்ந்திருந்த போது சிரித்ததை நினைத்து ரசனையுடன் கூறினாள்.

ரகசிய காதலன்Where stories live. Discover now