ரகசிய காதலன் - 28

333 25 7
                                    

திவ்யா தானாகவே ஆதனை விட்டு கொடுத்து விட்டதாக கூறவும் ராகவியின் மனதில் தன் அக்கா வாழ்வை பறித்துக் கொண்டேன் என்ற நெருடல் இல்லாமல் போனது. அவள் தன் மன குழப்பம் மற்றும் தவிப்பில் இருந்து மீண்டு வந்தாள். ஆதனுடனான தன்னுடைய அடுத்த கட்ட வாழ்வை வாழ கனவு காண தொடங்கினாள்.

இத்தனை நாட்களாய் அவள் காதலை ரகசியமாய் மனதில் பூட்டிக் கொண்டவள் தற்பொழுது ஆதனிடம் அனைத்தையும் கூற வேண்டும் என்று அவள் அறையில் அமர்ந்து ஆதனிற்காக காத்திருந்தாள். ஆதனுக்கு தன்னுடைய காதலை பற்றி தெரியும் என்று ராகவிக்கு தெரிந்திருந்தாலும் தன் வாயால் கூற அவன் கேட்க வேண்டும் என்று எத்தனையோ முறை கெஞ்சி இருக்கிறான். அதை இன்று நிறைவேற்ற வேண்டும் என்று ராகவி ஆசையாய் அமர்ந்திருந்தாள்.

ஆதன் அறைக்குள் வரவும் அமர்ந்திருந்த ராகவி எழுந்து நின்றாள். ஆதன் அவளை மேலும் கீழுமாக பார்த்து விட்டு அமைதியாக கீழே படுக்க போர்வையை எடுத்தான்.

"ஆதன் மேலே படுங்க" என்று ராகவி கூற ஆதன் "வேண்டா நீ மேல படுத்துக்கோ" என்று கூறினான். "நா மேல தான் படுக்க போறன்" என்று ராகவி கூற "அதனால தான் நா கீழ படுக்றன்னு சொன்னன்" என்று ஆதன் கூறினான். ஆதனிற்கு தெரியும் ராகவி தன் மன சஞ்சலத்தில் இருந்து வெளி வந்து தன்னுடன் வாழ விரும்புகிறாள் என்று ஆனால் அவனிற்கு இந்த குழம்பிய ராகவியும் மற்றவருக்காக தன்னை விட்டு கொடுத்த ராகவியையும் பிடிக்கவில்லை. அவள் கழுத்தில் மாங்கல்யம் கட்டி இருந்தாலும் அவன் மனம் அவனை எதிர்பார்ப்பில்லாமல் மனதில் சுமந்த ராகவியே வேண்டும் என்று கேட்டது.

"ஆதன் இரண்டு பேருமே பெட் ஷேர் பன்னிக்கலாம்" என்று ராகவி கூற "வேணாம்மா தாயே ... எனக்கு உன்னை பிடிக்கல கீழ படுன்னு நீ எப்ப வேணா மலை ஏறுவ இந்த ஆட்டத்துக்கு நா வரல" என்று கூறியவன் கீழே படுக்கையை விரித்து படுத்து விட்டான்.

ராகவி எவ்வளவு அழைத்தும் ஆதன் திரும்பி கூட பார்க்க வில்லை. 'ரொம்ப தான் கோவம்' என்று நினைத்த ராகவி கட்டிலில் படுத்துக் கொண்டாள். ஆனால் ராகவிக்கு உறக்கமே வரவில்லை. ஆதனிடம் தன் மனதில் இருப்பதை எல்லாம் கூறும் வரை உறக்கம் வர போவதில்லை என்பதை உணர்ந்த ராகவி எழுந்து ஆதன் அருகில் அமர்ந்தாள்.

ரகசிய காதலன்Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ