ரகசிய காதலன் - 30

307 22 5
                                    

அறைக்கு சென்ற இளமாறன் நிலையில்லா மனதை ஆற்ற சிகெரெட்டை எடுத்து பற்ற வைத்தான். அப்பொழுது அவன் கைப்பேசிக்கு அழைப்பு வரவே அழைப்பை ஏற்றான்.

"சொல்லு" என்று இளா கூற மறுபுறம் என்ன செய்தியோ "யாருக்கும் சந்தேகம் வரல இல்லை ... இங்க ராகவி தான் என்னை குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தா நம்ம விஷயம் வேற தெரிஞ்சி வச்சிருக்கா" என்று இளமாறன் கூறி நிறுத்தினான்.

"எனக்கும் பதட்டமா தான் இருக்கு அதுக்காக எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க ... நா என்னை உன்னை ஏமாத்திட்டனா இல்லை இல்லை அப்பறம் என்ன" என்று இளமாறன் சாந்தமான குரலில் கூறினான். அடுத்து அங்கு என்ன கூறப்பட்டதோ இளமாறனிற்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

"ஹேய் என்ன என்னவோ நா மட்டுமே தப்பு பன்ன மாதிரி மொத்த தப்பையும் என் மேலையே போட்ர நீ எந்த தப்பும் பன்னலையா ... சரி நான் தான் தப்பு பன்னன்னா நீ யோக்கியமா இருந்தா என்னை தடுக்க வேண்டியது தான எதுக்கு அமைதியா படுத்து கிடந்த" என்று இளமாறன் கூறவும் ராகவி உள்ளே சென்று அவன் கையில் இருந்த சிகெரெட்டை பிடுங்கி எறிந்து அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.

இளமாறன் அடிப்பட்ட கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கைப்பேசியை காதில் இருந்து இறக்காமல் ராகவியை பார்த்தான். "அவ உனக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்தான்னா உன் மேல அவளுக்கு அவ்வளவு நம்பிக்கைன்னு அர்த்தம் ... அதை புரிஞ்சிக்காம அவளை குறை சொல்ர ... இப்ப அவ உன்னை குறை சொல்ரான்னா தப்பு உன் மேல தான் இருக்கனும்" என்று ராகவி கோபமாக கூறினாள்.

"ராகவி நாங்க" என்று இளமாறன் தொடங்கும் போதே "உன் முகரகட்டைய கீழ பாத்ததுமே புரிஞ்சி போச்சி நீ ஏதோ தப்பா பன்னிட்டு வந்திருக்கன்னு ... அறிவில்லையா இளா உனக்கு ... சின்ன பிள்ளை அவ ... அவளை முதல்ல எதுக்காக நீ வெளில கூட்டிட்டு போன" என்று ராகவி கேட்க இளமாறன் தலையை குனிந்துக் கொண்டான்.

ராகவி கைப்பேசியை வாங்கி "ஹலோ" என்க மறுபுறம் "என் மேலையும் தப்பிருக்கு அக்கா" என்று ஒருவளின் விம்மல் குரல் ஒலித்தது. "இப்ப கூட அவனை விட்டு கொடுத்ராத ... அவன் தான் கூப்ட்டான்னா நீ அவன் கூட போவியா ... என் கிட்டையாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா" என்று ராகவி கேட்க "நான்தான் சொல்ல வேணான்னு" என்று இளமாறன் இழுத்தான்.

ரகசிய காதலன்Where stories live. Discover now