ரகசிய காதலன் - 6

339 21 7
                                    

திவ்யா தன்னை பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையை அவன் இவன் என மரியாதை இன்றி பேசவும் கோபமானவன் திவ்யாவை அடிக்க கை ஓங்கினான்.

ராகவி வேகமாக அவன் கையை பிடித்து தடுத்து அவனை தள்ளி விட்டாள். "நானும் பாத்துட்டே இருக்கன் ஓவரா சவுண்ட் கொடுக்கற ... என் அக்கா மேல கை வைக்க வர்ர ... அவ தான் உனக்கு மனைவின்னு ஆகறதுக்கு முன்னவே அவளுக்கு தம்பி ஸ்தானத்துல இருக்கவன் கூட தப்பா யோசிக்கிற ... இப்படி ஒரு கேடு கெட்ட எண்ணத்தை உனக்குள்ள வச்சிகிட்டு என் அக்காவ அடிக்க போற ... ஒழுங்கு மரியாதைய இடத்தை காலி பன்னுங்க இல்லை இங்க நடக்கறதே வேற" என்று ராகவி கோபமாக கூறினாள்.

"ச்சீ குடும்பமா இது வாடா" என்று மாப்பிள்ளை வீட்டார் இஷ்டத்துக்கும் முனங்கியவாறு கிளம்பினர். "என்ன காரியம் டி இரண்டு பேரும் பன்னிட்டிங்க" என்று இந்திரா அழுகையுடனே தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.

"என்னடாம்மா .. அவன் அப்படி பேசிட்டான்னு இப்படியா பன்னுவிங்க ... அவன் வெளில போய் நம்ம குடும்பத்தை பத்தி தப்பா இரண்டு பேர் கிட்ட சொன்னா போதும் அது ஊருக்கே பரவி உங்க வாழ்க்கைய பாதிக்காதா" என்று வரதராஜன் சோகமாக கேட்டார்.

"என்னை புரிஞ்சிக்கிறவன் என்னை கட்டிகிட்டா போதும்" என்று திவ்யாவும் ராகவியும் ஒரே குரலில் கூறினர். வரதராஜன் அவர்களிடம் இதில் ஒன்றிலாவது ஒற்றுமை இருக்கிறதே என்று புன்னகைக்க இந்திரா "இதுல மட்டும் கோரஸ்ஸா பாடுங்க டி" என்று அலுத்துக் கொண்டார்.

"எல்லாம் என்னால தான்" என்று ஜெகன் சோகமாக கூற "உன்னால தான் அவன் கேரக்டர் நமக்கு தெரிய வந்துச்சி விடு டா" என்று ராகவி கூறினாள்.

"ஆமா வரும் போதே கத்திட்டு வந்தியா எதுக்கு" என்று திவ்யா கேட்க "அதுவா ஜனனியோட அண்ணா வந்து வீட்ல பேசனாரு ... அம்மாவும் அப்பாவும் நல்ல நாள் பாத்து பொண்ணு பாக்க வர்ரதா சொல்லி அனுப்பி இருக்காங்க அத சொல்ல தான் சந்தோஷமா வந்தன் என்னால இப்படி ஆகி போச்சி" என்று சோகமாக கூறினான் ஜெகன்.

ரகசிய காதலன்Where stories live. Discover now