ரகசிய காதலன் - 27

328 23 7
                                    

"நீ ஏன் அவ்வளவு கஷ்டப்பட்ற ... நானே உன்னை கொன்னுட்றன்" என்று கூறிய ஆதன் ராகவியின் கழுத்தை பிடித்து நெறித்தான். ராகவி மூச்சுக்கு சிரமப்பட்டு ஆதன் கையை இறுக பற்றினாள். "மாமா ... மாமா என்ன பன்றிங்க ... விடுங்க" என்று ஜெகன் ஆதனின் கையை ராகவி கழுத்தில் இருந்து எடுத்து விட்டான்.

ராகவி மூச்சு வாங்கியபடி ஜெகனை பிடிக்க ஜெகன் அவளை ஒரு பக்கமாக அணைத்துக் கொண்டு ஆதனை முறைத்தான். "என்ன மாமா பன்றிங்க நீங்க ... இதுக்கா நா உங்க கல்யாணம் நடக்க சப்போர்ட் பன்னன்" என்று கோபமாக கேட்டான்.

"புரிஞ்சிக்காம பேசறவள என்ன பன்ன சொல்ர ஜெகன் ... அவ மனச தொட்டு சொல்ல சொல்லு அவ என்னை விரும்பலன்னு ... ஒவ்வொரு தடவையும் அவ என்னை விரும்பல விரும்பலன்னு சொல்லும் போதும் நூறு முறை செத்து போறன் ... எப்ப பாரு அக்கா அக்கா அக்கா ... அவ அக்கா தவிற வேற வேற எதுமே இவளுக்கு பெருசு இல்லை... அந்த முக்கியமான அக்காக்கு தான் நா மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பன்னி வைக்கிறன்னு சொல்ரன் இல்லை அத ஏன் கேக்க மாட்டின்றா" என்று கேட்டான்.

"மாமா பொறுமையா இருங்க நா அவ கிட்ட பேசறன்" என்று ஜெகன் ஆதனை அமைதிப்படுத்த முயல "முடியல ஜெகன் ... தூங்கறவங்களை எழுப்பலாம் நடிக்கிறவங்கள எழுப்ப முடியாது ... இவ நடிக்கிறா ... இவளுக்கு புரிய வைக்க முயற்சி பன்னி முயற்சி பன்னி சோர்ந்து போய்ட்டன் ... இவ இல்லை இப்ப நான் தான் சாகனும்" என்று ஆதன் சோர்ந்து போய் கூறினான்.

"மாமா நீங்களே இப்படி பேசனா எப்படி" என்று ஜெகன் கேட்க "வேற என்ன பன்ன சொல்ர ஜெகன் ... இப்ப என்ன என் கூட இருக்க விருப்பம் இல்லையா கிளம்ப சொல்லு ... அவங்க அக்காவ கல்யாணம் பன்னிக்கனுமா அவ கழுத்துல இருக்க தாலிய கழட்டி கொடுக்க சொல்லு அவ விருப்பபடியே அவ அக்காவ கல்யாணம் பன்னிக்றன்" என்று ஆதன் கூறினான்.

"மாமா அவ தான் கோவத்துல பேசறான்னா நீங்களும் இப்படி பேசறிங்களே" என்று ஜெகன் கூற ராகவி "இப்ப என்ன நா எதுவும் சொல்ல கூடாது அவ்வளவு தான நா வாய மூடிக்கிறன் ... அவரை கூப்ட்டு போய் சாப்பிட வை ... காலையில இருந்து சாப்பிடல" என்று கூறினாள்.

ரகசிய காதலன்Where stories live. Discover now