light & the Stone horses

98 19 43
                                    

"Hey guys!" என robin முன்னால் காட்ட முன்னாலிருந்த சுவரில் சூரியன் வடிவில் செதுக்கப்பட்ட சிறிய நாணயம் ஒன்று பொறிக்கப்பட்டு இருந்தது.

"சூரியனோட symbol இருக்கு என்றால்???" என யோசித்து கொண்டே நாலாபுறமும் நோட்டமிட்டனாள் gwen.

"Guys அங்கு பாருங்க!" என நாணயத்திற்கு 45 பாகையில் இருக்கும் சுவரின் மீதுள்ள துளையை காட்டி "சூரிய வெளிச்சம் அங்கிருந்து நாணயத்துல பட வைக்கனும் போல!" என gwen தன் கூற்றை கூறினாள்.

"இது சூரிய ஒளியை தெறிப்படைய செய்யுற தெறியி ( reflector) தானே!" என danish ஒரு reflector ஐ காட்டி கூற அதன் அருகில் இருந்த 3 reflectors உடைந்திருந்தன. "Reflectors 4 தேவைப்படும் என்று நினைக்கிறேன்! " என்றார் Mr Benjamin.

"இப்போ போதியளவு சூரிய வெளிச்சம் உள்ள இல்லையே! " என Henry கூற robin தனது backpack ஐ திறந்து அதில் ஒளிராத torch ஐ எடுத்தான். பின் அதில் இருந்த battery ஐ கழற்றி நன்கு தேய்க்க அது ஒருவாறு சற்று பிரகாசத்துடன் ஒளிர்ந்தது  " I have an idea! நான் சொல்லுற படி செய்யுங்க! Henry நீ இந்த torch அ கொண்டு போய் துளைக்கு முன்னால் நேராக பிடி! அந்த Light ஐ Mr Benjamin உடையாத reflector முலம் பெற்று gwen கு கொடுங்க! அதுக்கு பிறகு நான் சொல்ற படி செய்யுங்க! " என idea ஐ கூறினான்.

அதன் படியே செய்ய "gwen உன் முகம் பார்க்குற கண்ணாடியால் loral ன் கண்ணாடிக்கு reflect பண்ணு!" என robin கூறியதும் அவ்வாறே செய்ய முக்கால்வாசி தூரத்தை ஒளி கதிர்கள் பூர்த்தி செய்து நாணயத்தை நெருங்கியது. ஆனால் இன்னும் ஒரு reflector தேவைப்பட்டது.

Robin யோசித்து கொண்டிருக்க ஏதோ நினைவுக்கு வந்து "danish நீ வரும் போது கொண்டு வந்த அந்த cartoon cd ஐ தாவேன்!" என கேட்க danish கோ தலைகால் புரியவில்லை.

ஆனாலும் backpack ஐ திறந்து cd ஐ எடுத்தான். " robin, finding the dory cd தான் என்கிட்ட இருக்கு. அது சின்ன புள்ள Cartoon. உனக்கு வேணும்னா incredible மாதிரி Cartoon cd தாறேன் டா!" என எதுக்கு robin கேட்டான் என்று தெரியாமல் பேசிக் கொண்டே போனான்.

"டேய் எந்த Cartoon என்றாலும் பரவாயில்லை முதல்ல cd ஐ தா டா!" என danish ன் பதிலையும் எதிர்பார்க்காது அதனை பறித்து loral reflect பண்ணிய ஒளியை cd ல் பெற்று cd மூலம் மீண்டும் அதனை Reflect பண்ணி நாணயத்தில் விழ செய்தான்.

The golden cat🐱 (Completed)Место, где живут истории. Откройте их для себя