In the forest

119 21 35
                                    

புதர்களில் உள்ள இலைசருகுகள் அசைய ஐவரும் அதனையே பார்த்து கொண்டிருந்தனர். வர வர அசையும் வேகம் அதிகரித்து கொண்டு வந்து திடீரென ஏதோ ஒன்று இவர்களை நோக்கி பாய்ந்தது.

Danish கண்ணை மூடிக் கொண்டு கத்தினான். பாய்ந்தது முயலாக இருக்க, அனைவரும் பெருமூச்சு ஒன்றை விட்டனர்.

முயலை காணாது danish கத்தி கொண்டே இருக்க அவனருகில் இருந்த robin " danish that's just a rabbit! Not a lion " என்றான்.

தன் மானத்தை காப்பாற்ற danish " I know that...சும்மா தான் கத்தி பார்த்தேன். குரல்வளையில இருக்கிற 3 குரல்நாண்களும் work பண்ணுதா என்று test பண்ணினேன்" என சமாளிக்க "உன் புத்தி எங்களுக்கு தெரியாதா!" என gwen கூறி danish ன் தலையில் குட்டு ஒன்று போட்டு பயணத்தை தொடர்ந்தனர் .

முன்னோக்கி நகர நகர காட்டின் அடர்த்தி கூடிக்கொண்டே சென்றது. நடைபாதை ஒற்றையடிப் பாதையாக இருந்தது. 5m வரை உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள் உட்பட புற்புதர்கள் வரை மரம் செடி கொடிகள் அடர்ந்த ஒரு சிறிய rain forest போன்று காட்சியளித்தது.

மரங்களின் அடர்த்தியால் குளிர்ச்சியான சூழலை தந்ததுடன் சூரிய வெளிச்சம் மரங்களுக்கு இடையால் எட்டிப் பார்த்தது. முயல்களும் மான்களும் துள்ளி ஓட வண்ணத்துப்பூச்சிகளும் பல சிறிய பூச்சிகளும் வனத்தை அழகூட்டிக் கொண்டிருந்தது. பறவைகள் கூட்டம் கூட்டமாக உணவு தேடிச் செல்ல அவற்றின் குஞ்சுகளுக்கள் கூட்டில் இருந்து சத்தமிட்டு கொண்டிருந்தன.

இவ்வாறு இயற்கையின் அழகை ரசித்த வண்ணம் சற்று தூரம் சென்று கொண்டிருந்தனர். தூரத்தில் ஒரு பச்சை பாம்பு ஒன்று தன் இரையை மிகவும் துள்ளியமாக வேட்டையாடி கொண்டிருந்தது.

"Guys அதுட பெயர் தான் mamba. மிகவும் விரைவாக இடம்பெயரக்கூடிய பாம்பு இனம்." என பாம்பை பற்றி Mr Volter கூற robin " do you know guys! காட்டில் உள்ள cobra இனம் தான் வேறு இடங்கள்ல உள்ள cobra வ விட நீளத்துல கூடியது " என கூறினான்.

" king snake என்று சில snakes இனத்துக்கு ஏன் சொல்லுறாங்க என்று தெரியுமா? அது மற்ற இன பாம்புகளையும் சாப்பிடும் ஒரு இனம். அந்த பாம்புகள் நச்சு தன்மை என்றாலும் அவற்றை சாப்பிடும்... எனக்கு daddy சொல்லி தந்தாரு" என danish உம் அவன் தெரிந்ததை நண்பர்களுக்கு கூறினான்.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now