The flash back 2

101 18 9
                                    

"Third meeting நான் isla contoy island கு போக plan பண்ணினேன். Mexico கு வந்ததுக்கு அங்கு சரி போவோம் என்று! But harbour ல உங்க நால்வரையும் கண்டேன்.

நீங்க நால்வரும் Boat corner கு வந்தப்போ பட்டாசு ஒன்றை உங்க Boat ல வெடிக்க வைத்து பயங்காட்ட idea பண்ணேன். அதற்காக பட்டாசு ஒன்றை பற்ற வைத்து Boat அருகில வர கால் தடுக்கி உங்க Boat ல விழுந்துட்டேன். பட்டாசு கடல் ல விழுந்துறிச்சு! எழும்பி பார்க்கறப்ப boat harbour ல இருந்து கொஞ்சம் தூரம் போய்றிச்சு! இனி என்ன பண்ண? உங்க Boat ல ஒளிந்து இருந்தேன்.

சிறிது நேரத்தில gwen நான் இருக்கிற இடத்தை pass பண்ணி போனாள். நானும் அவள்ட மேல் plastic snake ஒன்றை போட்டு பயம் காட்ட பார்த்தேன். எங்க பயம் காட்ட அது தான் danish வந்து plan அ சொதப்பிடிட்டானே! " என கதையை முடிக்க முதல் danish இடைமறித்து " gwen lady!  நான் உன்னை 2 தடவையும் காப்பாற்றி இருக்கேன்! So hero level கு என்னை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை! Just small treat தா!" என gwen இடம் treat கேட்டு கொண்டிருந்தான்.

" என் பின்னால் யாரோ வந்ததாக சொல்ல! அடிக்கிற வெயிலில உச்சி மண்டை கலங்கி இருக்கும்னு சொல்லிட்டு இப்ப treat கேட்குற?" என gwen முறைத்து கொண்டு கூற danish விடுவதாக இல்லை. Gwen உம் தொல்லை தாங்க முடியாமல் அருகில் உள்ள மரங்களின் இலைகளை கொண்டு வந்து நீட்டினாள். " இது என்ன? இலைகுலைகளை சாப்பிட நான் என்ன மாடா?" என கேட்க " இல்ல எருமை மாடு! " என்றாள் gwen.

இருவருக்கும் இடையே யுத்தம் ஆரம்பிக்க மற்ற மூவரும் சிரித்து கொண்டிருந்தனர்.

Henry தொடர்ந்தான். " உங்கள கடத்தல்காரர்கள் பெட்டியில் வைத்து மூடும் போதே கண்டேன். பிறகு ஒளிந்திருந்து island வந்த போது யாருக்கும் தெரியாமல் தப்பி island குள்ள ஓடினேன். இடையில தான் உங்கள கண்டுபிடிச்சேன்..." என முழு flash back யும் கூறி முடித்தான்.

" ok guys நாம rest எடுத்தது போதும், let's move !" என robin  கூற அனைவரும் எழுந்து நடக்க தொடங்கினர். Henry எழும் போது அவனது மடியில் இருந்து batch கீழே விழுந்ததை யாரும் அவதானிக்கவில்லை.

நடந்து கொண்டு செல்ல செல்ல மீண்டும் காட்டின் அடர்த்தி கூடிக்கொண்டே சென்றது. அத்துடன் சூரிய ஒளியும் குறைவாக ஊடுருவியதால் இருட்டாகவே இருந்தது.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now