The end of second day

89 19 24
                                    

Oscar விருது எடுக்குற மாதிரி act பண்ணா இப்படி தான் நடக்கும்! " என்றான் Henry. அடியாளோ loral ஐ கொலை வெறியில் பார்த்தான்.

"Really sorry! அவ கஷ்டத்துல இருக்கிறா அது தான் இப்படி பண்ணிட்டா! மன்னிச்சிருங்க! " என robin கெஞ்ச சரி என்ற பார்வையில் அவன் அருகில் மேசையின் மேல் இருந்த water bottle ஐ கொடுத்தார்.

அதை வாங்காமல் loral இருக்க, வாங்குமாறு செய்கை காட்டினான் அந்த அடியாள். "Loosu oops sorry  Sir,  எங்க கைய பின்னால கட்டி வைச்சு இருந்தா அவ எப்படி water bottle அ எடுப்பா!" என danish கோபத்தை அடக்கி கொண்டு கூறினான்.

ஆமா இல்ல என்று அவன் நினைத்தவாறு நீரை புகட்டி விட்டு ஓட்டம் பிடித்தான். போய் மற்ற அடியாளிடம் " இன்று இரவு சாவபோகுறோம்  என்று ஒரு பயமும் இல்லாத chatter box கூட்டம். தண்ணீர் கொடுக்க போனதுக்குள்ள கலாய்ச்சு முடிச்சுட்டாங்க!" என குறை கூறிக் கொண்டிருந்தான்.

Robin அவர்களுக்கு தெரியாமல் loral உடைத்த கண்ணாடி துண்டுகளை shoe ஆல் கை வரை இழுத்து எடுத்தான். பின் கண்ணாடி துண்டை கயிற்றில் வேகமாக உரசினான்.கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து கையை விலக்கிக் கொண்டான்.

பின் காலில் கட்டப்பட்ட கயிற்றை கழற்ற முயல; பசங்களின் சத்தம் கேட்கவில்லை என ஒரு அடியாள் திரும்பி பார்த்தான். உடனே செயல்பட்ட robin பின்னால் கை கட்டியவாறே வைத்து கொண்டான். 99 ல் தப்பிய robin பெருமூச்சு விட திரும்பி பார்த்த அடியாள் மீண்டும் முன்னோக்கி திரும்பினார்.

இதற்கிடையில் gwen ன் காலருகில் கூடாரத்தின் வெளியே இருந்து யாரோ கூடாரத்தின் கீழால் கத்தியொன்றை உள்நோக்கி போட்டார்.

Mr Benjamin ஆக இருக்க வேண்டும் என எண்ணி அதனை boots ஆல் இழுத்து எடுத்து கயிற்றை வெட்டினாள்.

Robin gwen கயிற்றை கழற்றி கொண்டதை கண்டு திகைக்க பிறகு சொல்கிறேன் என்று கண்ணால் காட்டினாள். இருவரும் சேர்ந்து மற்றவர்களின் கயிற்றை கழற்றினாலும் ஒருவரும் இருக்கும் இடத்தை விட்டு அசையவில்லை.

The golden cat🐱 (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang