Charles L. carolus

86 19 30
                                    

"கொள்ளைகாரர்களின் சின்னம் பொறிக்கப்பட்ட Flag ஏற்றப்பட்டது. பூனையுடன் நெருங்கி பழகும் shisako தலைவரின் வாலிப வயது புதல்வனுக்கு பூனைகளின் மாற்றமான நடத்தைகளால் ஏதோ தப்பாக நடக்க போவதாக விளங்கியது.

தனது தந்தையிடம் இதை பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவன் வந்து; விருந்தினராக வந்தவர்கள் இரும்பு இரும்பாக எதனையோ கப்பலில் இருந்து இறக்குவதாக கூறினான்.

சூழ்ச்சி செய்கிறார்கள் என்று இவர்களுக்கு புலப்பட 4 தங்க பொருட்களையும் தலைவரிடம் காணப்பட்ட விலை மதிக்க முடியாத ஒரு பொருளையும் கொடுத்து அதனை பத்திரமாக ஒளித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தனது 3 நண்பர்களையும் கூட்டிக் கொண்டு தாம் சிறு வயதில் விளையாடிய நான்கு கைவிடப்பட்ட கட்டிடங்களில் 4 பொருட்களையும் ஒளித்து அதனை கெட்டவர்கள் நெருங்காத வண்ணம் பல traps யும் செய்து வைத்திருந்தனர்.

இறுதியாக தலைவர் தந்த பொருளை கொண்டு போய் ஓர் பாதுகாப்பான இடத்தில் ஒளித்தனர். அவ்விடமானது இவ் நால்வரும் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் தங்களின் இரசியங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பயன்படுத்திய இடமாகும்.

இது பாறைகற்களால் ஆன மலை குடையப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு சுரங்கம். ஆனால் வெளியால் பார்க்கும் போது வெறும் கல் மலை தான்!

இதனை வைத்து விட்டு தங்களின் இருப்பிடத்திற்கு வர அங்கு பெரிய பெரிய பீரங்கிகள் மூலமும் துப்பாக்கிகள் மூலமும் மாலுமிகள் மக்களை அழித்து கொண்டிருந்தனர். இப்படி ஒரு attack கு முன்னரே ஆயத்தப்படுத்தி வைக்காமல் இருந்ததால் பலர் உயிர் இழந்தனர்.

தலைவர் தன் மகனை அழைத்து தங்களால் மாலுமிகளை வெற்றி கொள்ள முடியாது எனவும் பெண்களையும் பிள்ளைகளையும் படகு மூலம் வெளியேற உதவுமாறு கூற அவனும் நண்பர்களும் உடனடியாக செயல்பட்டு பலரை வெளியேற்றினர்.

மீண்டும் மகன் தந்தையிடம் வரவும் துப்பாக்கித் தோட்டா ஒன்று தலைவரின் இதயத்தை துளைக்கவும் நேரம் சரியாக இருந்தது.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now