Escaped

94 20 19
                                    

ஐவரினதும் முகத்தில் மயக்க புகையை அடிக்க அந்த கணமே ஐவரும் மயங்கி விழுந்தனர்.

பின் Mr & Mrs Paul லிடம் வேலை செய்கின்ற அடியாட்கள் பலர் இவர்களை அந்த பெரிய பலகை பெட்டியில் போட்டு மூடி விட்டனர்.

அடியாட்கள் 5 பேர் கப்பலில் அதே பெட்டியில் மறைந்து இருந்தனர். அதனாலே robin ன் கேட்டதற்கு Mr Paul திக்குமுக்காடினார்.

20 min பயணத்தின் பின் இவர்கள் அனைவரும் ஒரு island கு வந்து சேர்ந்தனர். ஐவரும் அடைக்கப்பட்ட பெட்டியுடன் 3 பெட்டிகளையும் island கு trolley ஒன்றின் உதவியுடன் இறக்கினர்.

பெட்டி ஆடும் போது danish ன் மண்டை robin முகத்தில் வந்து அடிக்க robin கு வலியால் சுயநினைவுக்கு வந்தான். தலைவலியுடன் கண்ணை திறந்து பார்க்க அப்போதே உணர்ந்தான் ஐவரும் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்டு இருப்பதை!

Robin ன் backpack ல் இருக்கும் கத்தியை கொண்டு பலகையில் சிறிய துளை ஒன்று போட்டு தாங்கள் எங்கு இருக்கிறோம் என்று பார்த்தான். உடனே தன்னிடமிருந்த water bottle ஐ அனைவரினதும் முகத்தில் தெறித்து மயக்கத்தில் இருந்து எழும்ப செய்தான்.

Danish " mom இன்னும் 5 min தூங்குறேன்..." என முணுமுணுக்க "டேய் கும்பகர்ணன் எழுந்திரி! நம்மல கடத்தி இருக்கிறாங்க... நீ இன்னும் தூங்கிட்டு இருக்கிற!!! " என அவனை அதட்டி எழுப்பினான் robin.

"Guys நம்மல ஏதோ ஒரு island கு கொண்டு வந்து இருக்கிறாங்க! " என robin கூற " எப்படி இதுல இருந்து தப்பிக்கிறது? " என loral வினவினாள்.

"இந்த box திறக்க try பண்ணேன் but முடியல்ல. As i think lock போட்டு இருக்கிறாங்க போல. எங்கட box ஓட சேர்ந்து 3 box இறக்குறாங்க! " என robin தான் கண்டவைகளை கூற " தப்பிக்க ஏதாவது வழி இருக்கனும்..." என Mr Volter உம் யோசித்து கொண்டே கூறினார். அனைவரும் தப்பிக்க வழி தேடிக் கொண்டு இருக்க திடீரென இவர்கள் ஏற்றப்பட்ட trolley ன் சில்லு பாரம் கூடி கழன்று போக பெட்டியும் கீழே விழுந்தது.

"டேய் ஒழுங்கா இறக்குங்கடா box அ! இதுக்கா நான் உங்களுக்கு கூலி தார...box ல அடைச்சு வச்சு இருக்குறவங்க நமக்கு ரொம்ப தேவைப்பட்டவங்க! " என Mr Paul ஏச " sorry Sir, trolley பாரம் தாங்காம தான் சில்லு கழன்று இருக்கும். பெட்டி பாரம் ஆக இருக்கு sir... நான் ஆள்கள கூட்டிக் கொண்டு வந்து பெட்டிய தூங்குறேன். " என அடியாள் ஒருவர் கூறிக் கொண்டு மற்ற நால்வரையும் கூட்டி வர சென்றான்.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now