The surprise

106 21 19
                                    

Mr Jay, ஐவரும் the cat island ஐ பற்றி பேசிக் கொண்டிருந்த video ஐ பார்த்து கொண்டு மர்ம புன்னகை விட்டார்.

அடுத்த நாள் காலையில் நால்வரும் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு முன் hall கு வந்தனர். "Good morning children! Today என்ன plan? " என்று gwen ன் அம்மா வினவ " Mr Volter நம்மல கூப்பிடும் வரை town கு போய் வர plan பண்ணினோம் mum! " என்றாள் gwen. "Ok, கவனமா போய் வாங்க" என வழியனுப்பி வைத்தார் gwen ன் அம்மா .

Town கு நால்வரையும் நடையை கட்டினர். "Yesterday night நான் the cat island ஐ பற்றி Internet ல தேடினேன் but ஒரு information உம் கிடைக்கல்ல...உண்மையா அப்படி ஒரு தீவு இருக்குமா? " என robin ஐ பார்த்து loral வினவினாள்.

"அது தான் எனக்கும் புரியல்ல...ஆனால் அந்த Book Mr Jay ட வீட்டுல இருந்தது என்று எனக்கு 100 percent sure..." என Robin உறுதியாக கூறினான்.

"Hey guys, அங்க பாருங்க! " என gwen பல்வேறு வகையான பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் கடை ஒன்றை காட்டினாள். அங்கு Mr Jay பொருட்களை வாங்கி கொண்டிருந்தார்.

அக்கடையின் முன் பகுதி கண்ணாடியால் ஆனதாக இருந்ததால் இவர்களுக்கு உள்ளே நடப்பது என்ன என்று தெரிந்தது ஆனால் பேசுவதை கேட்க முடியவில்லை. கடை அருகே சென்று Mr Jay ஐ அவதானித்து கொண்டிருந்தனர்.

அவரின் பின்புறமே விளங்கியது. அவரோ சில பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். அவர் அரிவாள் ஒன்றை எடுக்க danish ஓ " யாரையாவது குத்தி கொலை பண்ண அரிவாள் வாங்குறாரு..." என்றான்.
அடுத்து அவர் கயிறு வாங்க " யாரையாவது தூக்குல போட்டு கொலை பண்ண idea போல " என danish விளக்கினான்.
அடுத்து அவர் மண்ணை தோண்டும் சவளை எடுக்க " கொன்றவங்கள புதைக்க தான் எடுத்து இருப்பாரு..." என மீண்டும் danish மற்றவர்களுக்கு தனது கருத்துக்களை புரிய வைத்தான்.

இறுதியாக Mr Jay கைக்குட்டை ஒன்றையும் வாங்க; danish சற்று குழம்பி போனான். " கை குட்டைய வைச்சு என்ன பண்ணுவாங்க? " என யோசிக்க; தலைக்கு மேல் bulb பற்றியது. "I got it" என கூறும் போதே மற்ற மூவரும் " மயக்க மருந்தை கை குட்டை ல பூசி மயங்க வைக்க தானே" என கூறினர்.
"என்னை விட பயங்கரமான ஆள்களா இருக்கிறீங்க! " என தனது நண்பர்களை புகழ்ந்தான் danish.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now