வேண்டும்....

ஜீவா : கதிர் உனக்கு மிக்க நன்றிடா.... ஒரு நிமிடம் எனக்கு உயிரே

போய்விட்டது....

கதிர் : அண்ணா என்ன விளையாடுறியா.... நமக்குள் இந்த நன்றி எல்லாம்

தேவையில்லை ...என்ன ஒன்று... இந்த விஷயத்தை நீ முன்பே என்னிடம்

சொல்லியிருந்தால்.... நீயும் பயந்து அவர்களையும்(மீனா ) பயமுறுத்தாமல்

இருந்திருக்கலாம்....

மீனா : (கதிரிடம்) இல்லை, ஜீவா உங்களிடம் அப்பவே சொல்கிறேன் என்று

தான் சொன்னார்.... நான் தான் வேண்டாம் என்று சொன்னேன்.... நான்

மீண்டும் மீண்டும் அதே தவறை தான் செய்கிறேன் ....என்னை அனைவரும்

மன்னியுங்கள்.... இனி என்னால் இந்த குடும்பத்தில் எந்த ஒரு

பிரச்சனையும் வராது....

லட்சுமி : சற்று நேரத்தில் எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும்... நல்லதா

போச்சு... எல்லாம் நன்மையாகவே முடிந்துவிட்டது... சரி வாருங்கள்....

அனைவரும் வீட்டிற்குள் போகலாம்...

மறுபக்கம் கைபேசி வாயிலாக ...கண்ணாயிரம் விக்டரை அழைக்க

கண்ணாயிரம் : தம்பி நீங்கள் நினைப்பது போல் அந்த குடும்பத்தை

அவ்வளவு சீக்கிரமாக நடுதெருவுக்கெளாம்... கொண்டு வர முடியாது

...நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் .....என்பதை உங்களுக்கு முன்பே....

அந்த கதிர் பயல் யோசித்து வைத்து இருக்கிறான்...

விக்டர் : நீ ....என்னுடைய ஆளா... இல்லை, அந்த கதிரின் கையாளா ...?.நான்

என்ன கேட்கிறேன்... நீ என்ன பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறாய்

....அங்கு போன விஷயம் என்ன ஆச்சு ...? அப்போ ஜீவாவை கைது செய்ய

வில்லையா...?

கண்ணாயிரம் : இல்லை தம்பி.. நான் அவனை கைது செய்வதற்கு முன்பே

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now