முதல் தீண்டல்

1K 58 13
                                    


Épisode 1

காலையில் மூர்த்திக்கு முல்லை அப்பாவிடம் இருந்து போன் வந்தது.
தனம் தான் அந்த போனை எடுத்து சொல்லுங்க சித்தப்பா மாமா குளிக்கிறாரு ...என்ன இவ்வளவு காலையில கூப்பிட்டு இருக்கீங்களே எதுவும் பிரட்சனையா என்றாள்

இல்லை மா பார்வதிக்கு கொஞ்சம் உடல் நலம் சரியில்லை அதான்
2,3 நாளைக்கு முல்லை வந்து பார்த்து கிட்டா நல்லா இருக்கும் என்றார் முருகன் ....
.
ஐயோ சித்திக்கு என்ன ரொம்ப முடியலையா என்றால் தனம் ...
ஆமாம் மா முல்லை வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் என்று முருகன் சொன்னதும் ...சரி சித்தப்பா நான் மாமகிட்ட
சொல்லி முல்லைய அங்கே அனுப்பி வைக்கிறோம். சித்திய பார்த்துக்கோங்க என்று சொன்ன தனம் போனை பேசி முடிக்க...
தனம் மூர்த்தி வந்துடன் விஷயத்தை சொல்கிறாள்.....
மூர்த்தியும் முல்லையை
அழைத்து கதிர் எங்கே என்று கேட்க்க...அவுங்களுக்கு கடைக் சரக்கு வந்து இருக்குன்னு போன் வந்தது டீ குடிச்சிட்டு கிளம்பிட்டாங்கானு முல்லை சொன்னாள்....
சரி பா நீ
சாப்பிட்டு கிளம்பு அத்தைக்கு உடம்பு சரி இல்லையாம் நீ ஒரு 2நாள் அங்கே இருந்து அவங்கள பார்த்திட்டு வா பான்னு மூர்த்தி சொல்ல.

முல்லை: அம்மாக்கு என்ன ?

என்று பதறினாள்.

தனம்: இல்லை முல்ல..நானும் சித்தப்பா கிட்ட கேட்டேன் நீ வந்தா சித்தி சந்தோஷப்படும்ன்னு சொன்னார்.

மூர்த்தி : கடைக்கு போகும் போது நானே உன்னை மாமா வீட்ல விட்டுறேன்.

தனம் : மாமா முல்லை கிளம்பட்டும் நீங்க அதுக்குள்ள சாப்பிடுங்க.

முல்லை: நம்ம அம்மா வீட்டுக்கு போவதை இவகளுக்கு எப்படி சொல்லுவது சரி போன் பண்ணுவோம்.....

போன் மணி அடித்தது... குமரேசன் மாமா போனை
அட்டென் பன்றதர்க்குள் போன் கிழே விழுந்து ஸ்விட்ச் ஆஃப் ஆனது... .
முல்லை சரி கடைக்கு அழைக்கலாம் என்று நினைப்பதற்குள்... மூர்த்தி கிளம்பிட்டியா பா
என்றார்....

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now