தீமையிலும் நன்மை உண்டு

178 23 3
                                    


பாகம் 54

கடையில் குமரேசன் அவர்களும் மூர்த்தியும்..

குமரேசன் : என்ன..மூர்த்தி நேற்று எங்கே போன....

மூர்த்தி : வீராவை டாக்டர்கிட்ட கொண்டு போகனும் என்று மகா போன் பண்ணி சொன்னா..அதான் காலையிலே கிளம்பிட்டேன்...

குமரேசன் : என்கிட்ட..சொல்லிவிட்டு போக வேண்டி தானே...ஜீவா வேற அண்ணா எங்கே என்று..கேட்டு கிட்டே இருந்தான்..

மூர்த்தி : அதை ஏன் மாமா கேகிரிங்க...நேற்று கதிர் ப்ரெண்ட் என்னை
மகா,வீரா .ரெண்டு பேர் கூடவும் பார்த்து விட்டு கதிற்கிட்ட சொல்லிட்டான்.. கதிர் என்னை கேள்வி மேல..கேள்வி கேட்டான்...கடைசி வரை நான் மட்டும்
வாயை திறக்கலை...என் போனை வேற தனம் எடுக்க அதில் மகா வேற பேசி இருக்கா...தனம் என் மேல கொஞ்சம் வருத்தமா...இருக்கிற மாதிரி தான் தெரியுது...

குமரேசன் : இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி அங்கேயும்
இங்கேயும்...மா...அலைந்து கொண்டு இருப்ப....

மூர்த்தி : இது எங்கே போய் முடியும் என்று எனக்கும் தெரியல மாமா...

கவின் காருடன் கதிர் வீட்டுக்கு வந்தார்.

கதிர் : வாடா...கவின்..வா..வா...சாப்பிடு..

கவின் : இல்ல.. மாப்பிளை... நான் சாப்பிட்டு தான் டா வந்தேன், நீ வா
இப்படி உட்க்காரு...நேற்று என்ன...தான் டா..நடந்தது...கதிர் நேற்று நடந்த அனைத்தையும் சொன்னார்.

முல்லை : வாங்க ...கவின்..

கவின் : என்ன...முல்லை..இப்பதான்..உன் முகத்தில் சந்தோஷமே வருது..

முல்லை : சிரித்த படி கவின் இருங்க உங்களுக்கு சாப்பிட எதாவ்து
கொண்டு வரேன்.

கவின் : முல்லை எனக்கு ஒண்ணும் வேண்டாம் ..
நம்ம..கிளம்பலாமா...கதிர்.

கதிர் : இரு கண்ணா கிளம்பி விட்டானா...என்று பார்க்கிறேன்.

கவின் : எங்கே முல்லை...அண்ணி,அம்மா ஜீவா wife யாரையும் காணோம்..

முல்லை : அக்கா கோவிலுக்கு போய் இருக்காங்க..அம்மா,மீனா உள்ளே தூங்கிட்டு இருக்காங்க..

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now