என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன்.

Start from the beginning
                                    

கதிர்: அத்தைக்கு எதுக்கு நன்றி ,

பாப்பா: அத்தை தான் எனக்கு wats up ல கதையை பேசி அனுப்பினார்கள், நான் அதை அப்படியே என் ஸ்கூல் ல சொல்லி முதல் பரிசு வாங்கினேன், அத்தை யோட குரல் ரொம்ப அழகா இருந்தது , நான் அதை என் friends ,டீச்சர் முன்னாடி தான் போட்டு கேட்டேன் , என் ப்ரெண்ட்ஸ் , டீச்சர் எல்லாம் அத்தை voice V.J.சித்ரா மாதிரி இருக்குன்னு சொன்னாங்க, இருங்க அம்மாகிட்ட தரேன்.

கதிரின் அக்கா: கதிரு.... எப்படி டா இருக்க..... நேத்து நைட்டு இவ துங்கவே இல்ல டா உன்கிட்ட இருந்து போன் வரும்ன்னு ஒரே புலம்பல்.

கதிர்: இல்ல அக்கா நேற்று எனக்கு தல வலி அதான் தூங்கிட்டேன்,நீ
எப்படி இருக்க...

அக்கா: நல்லா இருக்கேன் டா ,சரிடா இவளிடம் தந்தால் பேசிக்கிட்டு
இருப்பா நான் அப்புறம் போன் பண்றேன், முல்லைக்கு ரொம்ப நன்றி
சொல்லு ,அங்கே எல்லாரையும் கேட்டதாவும் சொல்லு. கதிரின் அக்கா போனை வைத்தார்

முல்லை : எங்கே போனிங்கா காலையில .

கதிர்: கோவிலுக்கு போனேன்,அதை விடு பாப்பா எப்போ போன் பன்னா

முல்லை: நேற்று இரவே கூப்பிட்டா, ஐயோ .....அவுங்களை அவள்,

இவள் சொல்லக் கூடாது அவுங்க இவுங்க nnu தான் சொல்லனுமா,

கதிர் : ஏன் ....?

முல்லை: அவுங்க தான் சொன்னாங்க, இல்லன்னா உங்க கிட்ட சொல்லி என்னை அடி வாங்க வைப்பங்களாம்,குட்டி பொண்ணு இருக்கே என்ன வாய்,

கதிர்: அப்போ நேற்று இரவு பாப்பா தான் போன் பன்னதா

முல்லை: ஆமா, உங்க கிட்ட சொல்லி பேச சொல்வதற்குள்

நீங்க தலை வலின்னு துங்கிட்டிங்க

கதிர் மனசுக்குள்: பாப்பா போன் பன்னதை கவிண்ணிடம் தான் முல்லை பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று நாம் அவளை கேட்டு இருந்தால் நேற்று நம்ம கண்ட கனவு பலித்து இருக்கும், வேண்டாம் கதிர் இனியும் உனக்கு இந்த புத்தி சத்தியமாக வரக்கூடாது, இல்லை வரவே... வராது..என்றபடி தனக்குள் பேசிக்கொண்டு இருந்தார் .

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now