என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன்.

Start from the beginning
                                    

மணி 7.00 குளித்து முடித்து விட்டு முல்லை அறைக்குள் வந்தாள்,என்ன இன்னும் இவுகளை காணோம் எங்கே போனார் சொல்லாமல்,

என்றபடி மனசுக்குள் பேசிக்கொண்டே வந்து கட்டில் மேல அமர்ந்தார், கதிர் கோவிலுக்கு போய்ட்டு தன் அறைக்குள் நுழையவும் ,

முல்லைக்கு மீண்டும் போன் அடித்தது,

முல்லை : ஹலோ, சொல்லுங்க... எப்படி இருக்கீங்க....என்னை மன்னித்துடுங்க என்று சொல்லி கொண்டு இருந்த வார்த்தைகளை கேட்ட படி கதிர் அறைக்குள் நுழைந்தார்,

முல்லை: இதோ அவரே வந்துட்டார் இருங்க போனை (loud speaker)
ஸ்பீக்கர் ல போட்டு தருகிறேன்.

கதிர் யாரு என்று கேட்க முல்லை பேசுங்க..நேற்றில் இருந்து
உங்ககிட்ட பேசனும்ன்னு தான் வெயிட் பண்றாங்க என்றாள்

கதிர்:. ஹலோ...எதிர் முனையில் இருந்து வந்த

குரல் : மாமா நான் பாப்பா பேசுகிறேன்,உங்க மேல நான் ரொம்ப
கோவமா இருக்கேன்...

முல்லை: பாருங்க கோவப்படும் அளவுக்கு பெரிய ஆளா
அய்ட்டாங்க madame.

கதிர்: ஏன் செல்லம் என் மேல கோவமா இருக்கு....

பாப்பா: பின்ன .....என்ன மாமா நான் நேற்று அத்தைக்கு போன்
பண்ணேன் அத்தை நீங்க வந்துட்டு மூர்த்தி மாமாவிடம் பேசிட்டு
இருக்கீங்க இன்னும் 10 நிமிடத்தில் பேச சொல்கிறேன் என்றார்கள்,
நான் night எல்லாம் போன் பண்ணி பார்த்தேன் அத்தை போன் எடுக்களை அப்புறம் அம்மா திட்டுன்னாங்க நான் போய் துங்கிட்டேன் ஏன் என்னை நீங்க கூப்பிடல

முல்லை: அது ஓன்னும் இல்லைங்க உங்க மாமா அவரு போனை
கடையில் வைத்துட்டு வந்துட்டார், என் போனை கண்ணன் வைத்து
இருந்தான் ,அப்புறம் நானும் charge போட மறந்துட்டேன். அது மட்டும்
இல்லாமல் உங்க மாமாவுக்கு தலை வலிங்க அதான்
உங்களிடம் பேசவில்லை, கோவப்படாதிங்க ...

பாப்பா: மாமா.... நான் எங்க ஸ்கூல் ல நடந்த கதை போட்டியில் முதல்
பரிசு வாங்கினேன், அதற்க்கு அத்தைக்கு தேங்க்ஸ் சொல்ல தான் போன் பண்ணேன்,

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now