கேட்கா வரமடா நீ

By kadharasigai

95.6K 3.4K 377

ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள் More

வரம் - 1
வரம் - 2
வரம் -3
வரம் -4
வரம் - 5
வரம் - 6
வரம் - 7
வரம்-8
வரம் - 9
வரம் - 10
வரம் - 11
வரம் - 12
வரம் - 13
வரம் -14
வரம் - 15
வரம் - 16
வரம் - 17
வரம் - 18
வரம் - 19
வரம் - 20
வரம்-21
வரம்-22
வரம்-23
வரம்-24
வரம்-25
வரம்-26
வரம்-27
வரம்-28
வரம்-29
வரம்-30
வரம்-31
வரம்-32
வரம்-33
வரம்-34
வரம்-35
வரம்-36
வரம்-37
வரம்-38
வரம்-40
நன்றி

வரம்-39

2K 73 10
By kadharasigai

விஜய் போன் ஒழிக்க அதை எடுத்தவன் "சொல்லுங்க மேடம்" என்க

"விஜய் இன்னைக்கு கேஸ் ஹியரிங் இருக்கு" என்க

"ஞாபகம் இருக்கு மேடம் அங்க தான் கிளம்பிட்டு இருக்கன்" என்று கூறி போனை கட் செய்தான்.

"நானும் வரன் டா" என்று அருண் கூற

"இல்ல மச்சான் நீ மதி கூடஇரு நானும் தருணும் போறோம் ஆரவ் கார்த்தி ஆப்பிஸ் போட்டும் நா கேஸ் முடிஞ்சதும் உனக்கு கால் பன்னி என்ன நடந்ததுன்னு சொல்றன்" என்று கூறி விஜய் தருணை அழைத்துக் கொண்டு சென்று விட்டனர்.

அங்கு ரேஷ்மாவிற்க்கு எதிராக கேமராவில் அவள் மீராவை தள்ளி விட்டது பதிவாகி இருந்ததால் கொலை முயற்சி செய்ததாக கூறி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை குடுத்து கேஸ்ஸை முடித்தார் நீதிபதி. லாரி ட்ரைவர் எவ்வளவு கேட்டும் மிரட்டியும் தெரியாமல் இடித்து விட்டதாக கூறி விட்டார்.

விஜய் வெளியில் வந்து அருணிற்க்கு கால் செய்து நடந்ததை கூற வக்கிலும் வந்து விட அவரிடம் நன்றி கூறினான்.

அப்பொழுது அங்கு வந்த ரேஷ்மா "இப்ப சந்தோஷமா இருப்பிங்களே" என்று கேட்க

"உன்ன பார்க்கவும் பேசவும் எனக்கு விருப்பம் இல்ல கிளம்பு" என்று விஜய் கோவமாக பேச

"நா உங்க கிட்ட பேசல இதோ நிக்கிராங்களே வக்கில் அவங்க கிட்ட பேசரன் பாருங்க நீங்க வாங்கி குடுத்த தண்டனை என் கையில விளங்கு உங்களுக்கு சந்தோஷம் தான"

"நீ பன்ன வேலைக்கு இந்த தண்டனை கம்மி"

"பெத்த பொண்ணுக்கே ஜெய்ல் தண்டனை வாங்கி குடுத்து நீதி நேர்மமைன்னு அதையே கட்டின்னு அழுங்க" என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

விஜய் அதிர்ச்சியாக வக்கிலை பார்க்க அவர் கண்கள் கலங்கி இருந்தது. "மேம் ரேஷ்மா" என்று தடுமாற

"என் பொண்ணு தான் ஒழுங்கா அவள நாங்க வளர்கள" என்று அழுதுக் கொண்டே சென்று விட்டார். விஜயும் தருணும் வீடு வந்து நடந்ததை கூற அனைவரும் அதிர்ந்தனர். பின் அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர்.

காலம் மூன்று மாதங்கள் ஓடிவிட்டது  . மதியை அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு கவணித்துக் கொண்டனர். "போதும் என் பொண்டாட்டிய நா கொஞ்சம் கவனிக்க விடுங்க பா" என்று அருண் சலித்துக் கொள்ளும் அளவிற்க்கு அவர்கள் கவனிப்பு இருந்தது. மீரா மட்டும் எந்த அசைவும் காட்ட வில்லை அனைவரும் சோர்ந்து போயினர் அதை போக்கவே அந்த நாள் அமைந்தது.

"ஸ்ரீ மா உனக்கு என்ன வேணும் கேளு" என்று அருண் கேட்க

"என்ன கேட்டாலும் செய்வியா மாமா" என்று மதி புதிராக கேட்க

அதை புரியாமல் அருணும் "என் பொண்டாட்டி என்ன கேட்டாலும் செய்வன்" என்று அவள் கன்னம் கிள்ள அதை தட்டி விட்டவள்.

"அப்போ என் மேல ப்ராமிஸ் பன்னு" என்று மதி அவள் கையை நீட்ட

"என்ன டி ப்ராமிஸ் எல்லாம் கேட்கற அப்படி என்ன பெருசா கேட்க  போற" என்று அருண் கேட்க

"ப்ராமிஸ் பன்னுவியா மாட்டியா" என்று மதி கோவமாக கேட்க

"சரி சரி டி கோவ படாத உன் ஹெல்த்துக்கு நல்லது இல்ல ப்ராமிஸ் நீ என்ன கேட்டாலும் செய்வன்" என்று அருண் மதி கை மேல் கை வைக்க மதி புன்னகைத்து விட்டு "என் ஸ்வீட் மாமா உம்மா" என்று முத்தம் தருவது போல் உதட்டை குவித்து காண்பிக்க

"செல்லம் அப்படி இல்ல டி இப்ப மாமா பன்றன் பாரு உம்மா" என்று மதி கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்தான்.

"சீ மாமா என் கன்னத்த அழுக்கு பன்னாத" என்று மதி அவன் முத்தம் பதித்த இடத்தை துடைக்க

"அடியே என்ன டி துடைக்கற உன்ன" என்று அவளை அடிப்பது போல் கையை உயர்த்த அருண் மீண்டும் அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

"போ மாமா பீ சீரியஸ் இப்ப நீ ப்ராமிஸ் பன்னி இருக்க நா சொல்ரத செய்யனும் சரியா" என்று கேட்க

"சரிங்க மகாராணி சொல்லுங்க" என்று அருண் அவளை அணைத்தவாறு கேட்க

மதி அவன் சட்டை பட்டனுடன் விளையாடிக் கொண்டே "நீ மீரா கிட்ட பேசனும்" என்க

அருண் சட்டென அவளை விடுவித்து விட்டு தள்ளி நிற்க மதி அவன் முன் சென்று அருண் முன்பு அனைத்தவாறு அவள் இடையில் அருண் கையை எடுத்து வைத்தவள் அவளும் அவன் கழுத்தோடு சேர்த்து அனைத்தவாறு பேச தொடங்கினாள் "மாமா இவ்வளவு நாள் நாங்க எல்லாரும் போய் அவ கிட்ட பேசனோம் ஆனா அவ ரெஸ்பான்ஸ் பன்னவே இல்ல அப்படினா என்ன அர்த்தம் உன் குரலுக்காக தான் அவ காத்துட்டு இருக்கா நீ போய் பேசி பாரு அவ நிஜமா கண் விழிப்பா" என்று மதி கூற

சற்று யோசித்தவன் "இல்ல ஸ்ரீ அவ எழுந்து வரட்டும்" என்று கூற

இம்முறை மதி அவனை விட்டு விலகி வந்து கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள். "நா என்ன சொன்னாலும் செய்வன்னு சொன்னது எல்லாம் பொய் தான" என்று முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்.

அவளை கண்டவன் அவள் முகத்தை கையில் ஏந்தி "சரி டி நா பேசனா என் அம்மு எழுந்து வருவான்னா நா கண்டிப்பா பேசறன்" என்று கூற மதி தாங்க்ஸ் மாமா என்று கூறி அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து ஓட

"ஏய் மெதுவா போ டி" என்று அருண் கத்த "சரி மாமா" என்று  மதி குரல் மட்டும் கேட்டது.

அருண் சிறிது நேர யோசனைக்கு பிறகு மீரா அறைக்கு செல்ல அங்கு விஜய் அவன் கைக்குள் மீரா கையை பிடித்துக் கொண்டு அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அருண் விஜய் தோலில் கை வைக்க விஜய் திரும்பி அருணை பார்த்தான். விஜய் கண்கள் கலங்கி இருக்க

"என்ன டா" என்று அருண் கேட்க

"இன்னும் எத்தன நாளைக்கு டா என் மீரு இப்படி இருப்பா அவள எழுந்து பேச சொல்லு டா அவ இப்படி இருக்கறத பார்க்க பார்க்க எனக்கு அழுக தான் டா வருது" என்று கண்ணீர் மல்க கூற மீரா கை அசைந்தது அதை இருவருமே கவனிக்கவில்லை.

"சரி டா நா பேசரன்" என்று அருண் கூற

விஜய் அவனை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்க்க அதை புரிந்துக் கொண்டவன் "ஒரு வேல நா பேசனா அம்மு கண் விழிக்கலாம் இல்ல அத தான் ஸ்ரீ எனக்கு புரிய வச்சா" என்று கூற விஜய் எழுந்துக் கொள்ள அருண் அந்த நார்காலியில் அமர்ந்துக் கொண்டு ஒரு கையால் மீரா கையும் மறு கையால் அவளை தலையை கோதியவாறும் பேச தொடங்கினான்.

"அம்மு உனக்கு ஒன்னு தெரியுமா நீ பொறந்ததும் உன்ன கொண்டு வந்து என் மடி மேல தான் போட்டாங்க நீ அப்போ எப்படி இருந்த தெரியுமா ரோஸ் கலர்ல இருந்த இப்ப மூடின்னு இருக்க மாதிரியே தான் அப்பவும் நீ கண்ண மூடியிருந்த குட்டி கை கால் அப்படியே பொம்ம மாதிரி நான் உன் கையை தொட்டதும் நீ என் கைய டைட்டா பிடிச்சிகிட்ட அப்ப எனக்கு சொல்ல முடியாத உணர்வு உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அப்பறம் நான் தான் உன்ன பார்த்துப்பன் அம்மா பால் குடுக்க கேட்டா தான் உன்ன குடுப்பன் ஸ்கூல்க்கு போகும் போது உன்ன கூட்டின்னு போறன்னு அடம் பிடிப்பன் நீ பேசன முதல் வார்த்த என்னன்னு தெரியுமா அண்ணா ன்னு தான் சொன்ன அப்பா உன் கிட்ட அம்மா அப்பா சொல்லுன்னு சொன்னா கூட நீ அண்ணான்னு சொல்லி வந்து என்ன கட்டி பிடிச்சிப்ப எப்பவும் வெற்றி அண்ணா வெற்றி அண்ணான்னு என் கூடவே தான் இருப்ப நா ஸ்கூல்ல இருந்து வந்ததும் அண்ணான்னு வந்து என்ன கட்டி பிடிச்சிகிட்டு அன்னைக்கி நடந்தது எல்லாம் சொல்லுவ நீ பஸ்ட் டே ஸ்கூல்க்கு போன அப்போ என் கூட தான் வருவன்னு அடம் பிடிச்ச அப்பறம் சமாதான படுத்தி உன்ன அனுப்பி வச்சன் அந்த ஆக்ஸிடென்ட் அப்பறம் நீ எவ்வளவு கஷ்ட பட்ருப்ப நா உயிரோட இருக்கனா இல்லையான்னு தெரியாம நீ எவ்வளவு துடிச்சி இருப்ப என்ன பார்த்ததும் கட்டி புடிச்சி அழுகனுன்னு உன்னோட உணர்வ நீ எப்படி கட்டு படுத்தி இருப்ப சின்ன வயசுல இருந்து கஷ்டத்த மட்டுமே பார்த்து வளர்ந்து இருக்க இது எதும் தெரியாம எல்லாத்தையும் மறந்து நா மட்டும் சந்தோஷமா இருந்து இருக்கன்னு நினைச்சாவே குற்ற உணர்ச்சியா இருக்கு அம்மு நீ விஜய எவ்வளவு லவ் பன்ன இப்படி படுத்துக்க தான் அவன லவ் பன்னியா அவன் எவ்வளவு பீல் பன்றான் பாரு டா நாங்களும் நீ இல்லாம பாதி தான் டா சந்தோஷமா இருக்கோம் எங்களோட முழு சந்தோஷம் நீ தான் அம்மு எழுந்திரி டா" என்று கண்களில் கண்ணீருடன் கூறினான். அதற்க்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

விஜய்க்கும் கண்கள் கலங்கி விட அருண் தோல் மேல் கை வைத்து அழுத்தவும் அவன் விஜயை பார்க்க விஜய் மீராவையே பார்க்க அருணும் அவளை பார்க்க மீரா கண்களில் கண்ணீர் வந்தது. விஜய் அருணிற்க்கு தம்ஸ்ஸப் காட்ட

"இப்போ நீ எழும்பல நா போய்ர்வன் திரும்ப உன் கிட்ட நா பேச மாட்டன் சாகர வரைக்கும்" என்று அருண் கூறி எழுந்து செல்ல பார்க்க அருண் பிடித்திருந்த மீரா கை அவன் கையை இறுக பற்றியது. அதை உணர்ந்தவன் அவள் விழிகள் பார்க்க மூடிய விழிகளுக்குள் மீரா விழிகள் அசைந்தது. விஜய் மகிழ்ச்சியில் அழுதுக் கொண்டே இருந்தான்.

மீரா அருகில் சென்று விஜய் அவள் கையை பிடித்து கொண்டு மீரு மீரு என்று பிதற்றிக் கொண்டே இருந்தான்.

மீரா லேசாக கண்களை திறந்து பார்த்தாள் அவள் கண்ணில் முதல் பட்டது அருண் தான் மீரா மெதுவாக உதட்டை பிரித்து வெற்றி அண்ணா என்க அருண் அவளை கட்டிக் கொண்டான். விஜயை திரும்பி பார்த்தவள் கண்களால் அவனை கிட்ட வர சொல்ல விஜயும் அவள் முகம் நோக்கி குனிந்தான். மீரா அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அதில் தனக்கு எதும் இல்லை என்று கூறி ஆறுதல் கூறுவது போல் இருந்தது.

அருண் வெளியில் சென்று அனைவரிடமும் கூற அடுத்த நிமிடம் அனைவரும் மீரா அறையில் இருந்தனர். மீராவால் அதிகம் பேச முடியாமல் போக அனைவரும் அளவாக பேசினர். கார்த்தி டாக்டர்க்கு கால் செய்து கூற அவரும் வந்து விட அவர் மீராவை பரிசோதித்து விட்டு ரொம்ப நாள் பெட்லே இருந்ததுனால  பார்ட்ஸ் எல்லாம் மூவ் பன்ன  கஷ்டமா இருக்கும் கொஞ்சம் ட்ரைன் பன்னிக்கோங்க அதர்வைஸ் சீ இஸ் ஆள் ரைட் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

அந்த நாள் அனைவர் மனதிலும் நிம்மதியை கொடுத்தது.

வரம் தொடரும் ......

Continue Reading

You'll Also Like

186K 9.7K 46
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை...
57.5K 2.4K 36
Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔
12K 1.9K 24
கதிர் முல்லை எப்போது இணைவர். Km story
40K 1.2K 71
அருணோதயம் வெளியீடு டிசம்பர் 2021 தந்தை மகள் பாசம் முழு நீள ரொமான்டிக் ஸ்டோரி காதலும் எனக்கு வராது, கல்யாணமும் சரிவராது, என தொழில்துறையில் கொடி கட்ட...