வரம் - 12

2.1K 85 4
                                    

ஒரு வாரத்திற்க்கு பிறகு அருண் விஜய் ஆரவ் மூவரும் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். மீரா அவர்கள் சண்டையை தடுத்து என்ன என்று கேட்க "மீரா நீ நம்ம வீட்டுக்கு தான் வரனும் " என்று ஆரவ் கூற "இல்ல அம்மு நீ எப்பவும் நம்ம வீட்டுக்கு தான வருவ அங்க தான உனக்கு எல்லா எடமும் தெரியும் நீ வா நம்ம வீட்டுக்கு" என்று அருண் கூற "மீரு இவங்க கிட்ட சொல்லு நாம நம்ம
வீட்டுக்கு தான் போரோம்ன்னு" என்று விஜய் கூற மீரா பேச்சற்று நின்றாள். "எங்கேயும் இல்ல அவ என் கூட இருக்கட்டும் " என்று அங்கு வந்து சேர்ந்தாள் மதி .

மூவரும் நோ என்று கத்த தருண் வாய் விட்டு சிரித்து விட்டான் மீரா நிலைமையை கண்டு மீரா முறைக்க சிரிப்பை அடக்கினான். பின் மதி அவர்களை சமாதானம் செய்ய எண்ணி தோற்றுப் போனாள். "சரி அப்போ எல்லாரும் வந்து எங்க கூட தங்கிகோங்க" என்று மதி கூற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். "சரி மீரா நீ என்ன செல்ற உன் முடிவு" என்று ஆரவ் கூற "நா இருக்கற வீட்டிலே இருக்கன் என் கூட மதி இருக்கா பார்த்துக்க நீங்க பயப்பாடாதிங்க" என்று மீரா கூற மூவரும் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றனர். அதை பார்த்த மீரா சிரித்து விட்டாள். அவள் சிரித்ததை பார்த்து மூவரும் முறைக்க தருண் அவர்களை சமாதான படுத்தினான். ஒரு வழியாக மூவரும் சம்மதித்தனர்.

மீராவை மருத்துவமனையில் இருந்து அழைத்துக் கொண்டு மீரா வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர். மீரா நடக்க கடின பட அதை கவனித்த விஜய் மீராவை குழந்தையாய் கையில் ஏந்தினான். "விஜி என்ன பன்ற எல்லாரும் பாக்கறாங்க கீழ விடு டா" என்று கெஞ்சிக் கொண்டு திமிற "ஹே உன்னால தான் நடக்க முடியல இல்ல அப்பறம் என்ன அமைதியா இரு என் பொண்டாட்டிய நா தூக்கறன் எவன் கேப்பான்" என்று விஜய் கேட்க "யாரும் கேட்க மாட்டாங்க ஆனா இப்படி சிங்கில்ஸ் இருக்கற எடத்துல ரொமான்ஸ் பன்றீங்களே" என்று தருண் கூற "போதும் வாங்க உள்ள" என்று மதி கூற அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். விஜய் மீரா அறையில் அவளை படுக்க வைத்து விட்டு எழும்ப மீரா அவன் கை பற்றினாள்.

கேட்கா வரமடா நீजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें