வரம்-38

1.8K 69 10
                                    

எந்த மாற்றமும் இல்லாமல் பத்து நாட்கள் நகர்ந்தது. மதி அம்மா அவர் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

அன்று காலை மதி தாமதமாக எழுந்தாள். சற்று சோர்வாகவும் இருந்தது அவளுக்கு. தன்னை சமன் செய்துக் கொண்டு சமயலறை சென்று வேலையில் மூழ்கினாள். அனைவரும் சாப்பிட அமர மதியை கண்ட விஜய்

"மதி என்ன டா டல்லா இருக்க" என்று கேட்க

"தெரில அண்ணா காலையில இருந்து டையர்ட்டா இருக்கு" என்று மதி பதிலலித்தாள்.

"சரி அண்ணி நீங்க ரெஸ்ட் எடுங்க நா எல்லாருக்கும் சாபாடு பரிமாரன்" என்று தியா அந்த பொறுப்பை ஏற்றாள்.

"மதி கொஞ்சம் சாப்பிட்டு போ மா" என்று தருண் அம்மா கூற மதி சரி என சம்மதித்து அவர்களுடன் கொஞ்சமாக உண்டாள். கார்த்தி இதை கண்டு தன் தங்கைக்கு நல்ல பாசமான குடும்பம் அமைந்ததை எண்ணி நிறைவாக இருந்தது.

ஆண்கள் அனைவரும் உண்டு விட்டு அலுவலகம் சென்றனர். விஜய் ஒரு வாரம் மீரா அருகிலே இருந்து விட்டு மூன்று நாட்களாக தான் அலுவலகம் சென்றான். போகும் முன் மீராவை பார்த்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட மறக்க வில்லை அனைவரும் மீராவிடம் பேசியும் அருண் மட்டும் அவளை காண்பதோடு சரி ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை.

அருண் மதியை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் டையர்ட்ன்னு வேற சொன்னா நைட் நல்லா தான இருந்தா என்று யோசித்துக் கொண்டே அவன் அறைக்கு சென்றான். மதி கட்டிலில் படுத்து கண்களை மூடி படுத்து இருந்தாள். அவள் அருகில் சென்று அவள் அருகில் அமர்ந்து அவள் தலை கோத மதி கண்களை திறந்து பார்க்க அருண் அமர்ந்து இருப்பதை கண்டு எழுந்து அமர்ந்தவள் "மாமா நீங்க ஆப்பிஸ் போலையா" என்க

"உனக்கு என்ன டி ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்க" என்க

"ஒன்னும் இல்ல மாமா டையர்ட் தான் நீங்க கிளம்புங்க" என்று கூற

அருண் மனமில்லாமல் "வா ஹாஸ்பிடல் போலாம்" என்க

"இல்ல மாமா வேணா எனக்கு ஒன்னும் இல்ல நீங்க கிளம்புங்க" என்று கூற அவன் மறுக்க

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now