வரம் - 6

2.5K 96 16
                                    

"என்ன டைம் 12 ஆச்சி யாரும் காணோம்" என்று மணியை பார்த்தவாறு புலம்பிக் கொண்டு இருந்தாள் மீரா. மணி 2 வரையிலும் யாரும் அங்கு வராமல் போக மீரா அருண் அறைக்குச் செல்ல அருண் எந்த அசைவும் இல்லாமல் உறங்கிக் கொண்டு இருந்தான். "என் பர்த் டே வ மறந்துட்டு தூங்கறத பார் காலைல இருக்கு இரு டா உனக்கு என் தரு கண்டிப்பா எனக்கு விஷ் பன்னுவான்" என்று கூறி விட்டு தருண் அறைக்குச் செல்ல அவனோ தலையாணையை கட்டிக் கொண்டு கனவு உலகத்தில் இருந்தான் "ச்ச இவன நம்பி வந்தது தப்பா போச்சே எப்படியும் காலைல என் கிட்ட தான வந்தாகனும் பாத்துக்கறன்" என்று கூறி விட்டு உறங்க சென்றாள்.

காலை அழகாக விடிய மீரா இரவு வெகு நேரம் தூங்காததால் அன்று மணி எட்டு ஆகிய பின்பே எழுந்தாள் எழுந்து குளித்து முடித்து கீழே வந்தாள். அவள் வருவதை பார்த்து அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க சென்றனர். "என்ன யாரும் கண்டுக்க மாட்ராங்க நிஜமாவே என் பர்த் டே வ மறந்துட்டாங்களா" என்று நினைத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். "என்ன டி இன்னைக்கு அமைதியா இருக்க " என்று கூறிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான் தருண். "என்ன டா டல்லா இருக்க" என்று கூறிக் கொண்டு அவள் மறு புறம் அமர்ந்தான் அருண். மீரா எதும் கூறாமல் எழுந்து வெளியே சென்றாள். அவள் போவதை கண்டு அருணும் தருணும் மௌனமாய் சிரித்தனர். "டேய் போதும் டா எதுக்கு அவள கஷ்ட படுத்திரிங்க எவ்லோ அப்சட் ஆய்ட்டா பார் டா " என்று தருண் அப்பா அவர்கள் காதை திருகினார்.

"அய்யோ பா என்ன பா இன்னும் கொஞ்ச நேரம் நீங்க கிளம்புங்க டைம் ஆச்சி "என்று அருண் கூற "ஆமா பா மீரா கோவில் போய்ர்பா அவ வெளியே வந்ததும் நாங்க பிளான இம்பிளிமட் பன்னனும் நாங்க கிளம்பறோம் " என்று கூறி விட்டு அருணும் தருணும் கிளம்பினர்.

மீரா கோவில் சென்று அருண், தருண், விஜய், ஆரவ் பேரில் அர்ச்சனை செய்து விட்டு கண் மூடி வேண்டிக் கொண்டு இருந்தாள். அச்சமயம் அவள் நெற்றியில் யாரோ குங்குமம் வைக்க கண்ணை திறந்தவள் எதிரில் யாரும் இல்லை. பின் நெற்றிய தொட்டு பார்க்க குங்குமம் இருந்தது. யாரா இருக்கும் என்று குழம்பிக் கொண்டே வெளியில் வர அவள் வாயை பொத்தி கைகளை கட்டி தூக்கி காரில் போட்டு கண்களை கட்டினர். மீரா கத்த முடியாமல் தப்பிக்க மூடியாமல் தினற கார் ஒரு இடத்தில் நின்றது. மீராவை இறக்கி கை கண் வாய் கட்டுகளை அவிழ்த்து விட்டு அந்த கார் சென்று விட்டது. மீரா தன்னை சமன் செய்துக் கொண்டு பார்க்க அது அவள் வளர்ந்த ஆசிரமம். அக்கா என்று ஒரு குட்டி தேவதை அழைக்க "என்ன குட்டி " என்று மீரா கேட்க அந்த பிஞ்சி கைகள் ஒரு திசையை காட்டியது. மீரா அந்த திசையை பார்த்து மீண்டும் அக்குழந்தையை பார்க்க அக்குழந்தை அங்கு இல்லை. அந்த திசையை நோக்கி மீரா செல்ல அங்கு ஆசிரமத்தில் உள்ள அனைத்து குழைந்தைகளும் கையில் ஒரு ரோஜாவுடன் மீரா அருகில் வந்து  "ஹாப்பி பர்த் டே" என்று கூற "மீரா கண்களில் கண்ணீர் முட்டியது.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now