வரம்-39

2K 73 10
                                    

விஜய் போன் ஒழிக்க அதை எடுத்தவன் "சொல்லுங்க மேடம்" என்க

"விஜய் இன்னைக்கு கேஸ் ஹியரிங் இருக்கு" என்க

"ஞாபகம் இருக்கு மேடம் அங்க தான் கிளம்பிட்டு இருக்கன்" என்று கூறி போனை கட் செய்தான்.

"நானும் வரன் டா" என்று அருண் கூற

"இல்ல மச்சான் நீ மதி கூடஇரு நானும் தருணும் போறோம் ஆரவ் கார்த்தி ஆப்பிஸ் போட்டும் நா கேஸ் முடிஞ்சதும் உனக்கு கால் பன்னி என்ன நடந்ததுன்னு சொல்றன்" என்று கூறி விஜய் தருணை அழைத்துக் கொண்டு சென்று விட்டனர்.

அங்கு ரேஷ்மாவிற்க்கு எதிராக கேமராவில் அவள் மீராவை தள்ளி விட்டது பதிவாகி இருந்ததால் கொலை முயற்சி செய்ததாக கூறி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை குடுத்து கேஸ்ஸை முடித்தார் நீதிபதி. லாரி ட்ரைவர் எவ்வளவு கேட்டும் மிரட்டியும் தெரியாமல் இடித்து விட்டதாக கூறி விட்டார்.

விஜய் வெளியில் வந்து அருணிற்க்கு கால் செய்து நடந்ததை கூற வக்கிலும் வந்து விட அவரிடம் நன்றி கூறினான்.

அப்பொழுது அங்கு வந்த ரேஷ்மா "இப்ப சந்தோஷமா இருப்பிங்களே" என்று கேட்க

"உன்ன பார்க்கவும் பேசவும் எனக்கு விருப்பம் இல்ல கிளம்பு" என்று விஜய் கோவமாக பேச

"நா உங்க கிட்ட பேசல இதோ நிக்கிராங்களே வக்கில் அவங்க கிட்ட பேசரன் பாருங்க நீங்க வாங்கி குடுத்த தண்டனை என் கையில விளங்கு உங்களுக்கு சந்தோஷம் தான"

"நீ பன்ன வேலைக்கு இந்த தண்டனை கம்மி"

"பெத்த பொண்ணுக்கே ஜெய்ல் தண்டனை வாங்கி குடுத்து நீதி நேர்மமைன்னு அதையே கட்டின்னு அழுங்க" என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

விஜய் அதிர்ச்சியாக வக்கிலை பார்க்க அவர் கண்கள் கலங்கி இருந்தது. "மேம் ரேஷ்மா" என்று தடுமாற

"என் பொண்ணு தான் ஒழுங்கா அவள நாங்க வளர்கள" என்று அழுதுக் கொண்டே சென்று விட்டார். விஜயும் தருணும் வீடு வந்து நடந்ததை கூற அனைவரும் அதிர்ந்தனர். பின் அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now