வரம் - 10

2.2K 90 5
                                    

மீரா மருத்துவமனையில் இருக்க விஜய், அருண், தருண், ஆரவ் என்று அனைவரும் அங்கேயே இருந்தனர். மீரா கண் விழித்து பார்க்க மூவரும் தன்னை பிடித்துக்கொண்டு அமர்ந்தே உறங்கி கொண்டிருந்ததை பார்த்து புன்னகைதவள் அவர்கள் கரத்தில் உள்ள தன் கரத்தை பிரிக்க அசைவு உணர்ந்து மூவரும் கண் விழித்தனர்.

மூவர் கண்களும் கலங்க "எனக்கு ஒன்னும் இல்ல எதுக்கு எல்லாரும் இப்படி கண் கலங்க பாக்கரிங்க ஆரவ் அண்ணா எப்படி இருக்காங்க" என்று மீரா கேட்க. "ஆமா ஆரவ் தான் கத்தி குத்து பட்டு கிடக்கரான்" என்று கூறிக் கொண்டு உள்ளே வந்தான் ஆரவ்.

"ஆரவ் அண்ணா" என்று மீரா எழும்ப முயற்ச்சிக்க ஆஆஆஆ என்று வலியில் கத்த "எரும எரும ஒழுங்கா அமைதியா இரு" என்று அவள் தலையில் கொட்டி அமர வைத்தான் தருண். "சாரீ கொஞ்சம் உணர்ச்சி வச பட்டுடன்" என்று மீரா கூற நால்வரும் முறைத்தனர். "சரி சரி முறைகாதிங்க நா இனி நகரவே மாட்டன்" என்று கூறி மீரா அமைதியாகினாள்.

"அது சரி அம்மு யார் அவங்க நீ அத்த மாமான்னு எல்லாம் சொன்ன அவங்கள பாத்து" என்று அருண் கேட்க

உனக்கு தெரியலையா அண்ணா அவங்கள உன்னை அவங்க பார்க்கவே கூடாது உன்னை அவங்க கண்ணுல பட விடவே மாட்டன் அண்ணா உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் அதுக்காக நா என்ன வேண்ணா செய்வன் என்று மீரா மனதில் உறுதி கொண்டாள்

"ஆமா என்ன தவற எல்லாரையும் கூப்பிடுவா ஒரு லவ் யூ கூட சென்னது இல்ல கேட்டா சொன்னா தான் காதலான்னு டீ. ஆர் மாறி பேசுவா " என்று விஜய் சற்று சலிப்புடன் கூற

"டே சும்மா இரு டா இவன் ஒருத்தன் எப்ப பார் புலம்பிகிட்டு " என்று ஆரவ் கூற

"அது மீரா அத்தையும் அத்த பையனும் தான் அண்ணா " என்று தருண் கூற

"அப்போ உனக்கு அவங்கள தெரியுமாடா " என்று அருண் கேட்க

"எங்க பஸ்ட் மீடிங்கே அது தான் அண்ணா " என்று தருண் கூற

"எப்படி புரியர மாறி சொல்லு டா " என்று ஆரவ் கூற

"இரு தரு நானே சொல்ரன்"என்று மீரா கூற தொடங்கினாள். "எங்க அப்பாவோட தங்கச்சி தான் அவங்க அவங்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு பையன் கார்த்தி அவன் தான் இப்ப தாலி கட்ட பார்த்தவன்.  நாங்க ஒன்னா நல்லா தான் இருந்தோம். ஹாலிடேகாக நா அப்பா அம்மா அண்ணா நாலு பேரும் வெளியே போன அப்போ ஒரு ஆக்ஸிடென்ட்ல என்ன மட்டும் விட்டுட்டு அவங்க போய்டாங்க" என்று அவள் கூறும் போது கண்ணில் கண்ணீர் கசிந்தது அதை கண்ட அருண் அவளை அணைத்துக் கொண்டான். மீரா அவன் தோளில் சாய்ந்தவாறு கூற தொடங்கினாள்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now