வரம் - 1

8K 146 30
                                    

கதிரவன் தன் கதிர்களை தூது அனுப்பி உறங்கும் விஜயை உறக்கம் கலைக்க கண்களை திறக்க அவன் முன் எந்த ஒரு கலவரமும் இல்லாமல் அமைதியே உறுவமாய் சிரித்த முகமாக அருகில் அமர்ந்து இருந்தார் அவன் தாய் வாணி "குட் மார்னிங் மா" என்று மீண்டும் வாணி மடியில் தஞ்சம் கொண்டான் விஜய் "குட் மார்னிங் பா, எழுந்து பிரஸ் ஆய்ட்டு இந்த காபி குடி நான் போய் டிபன் ரெடி பன்றன்" என்று விஜயை எழுப்பி விட்டார் வாணி "ஓ.கே மா" என்று தன் கடமையை செய்ய சென்றான் நம் நாயகன் "விஜய்" ...

விஜய் ஆறடிக்கும் குறைந்த உயரம் ஆண்களே பொறாமை கொள்ளும் அழகு தன் அடையாளத்தை தன்சொந்த முயற்சியில் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவன். நல்ல குணம் உள்ளவன் பிறர்க்கு உதவி செய்யும் குணம் தந்தை "சிதம்பரம்" காம்ப்லக்ஸ் , மால், தியேட்டர், டெக்ஸ்டைல்ஸ் என்று பல கடைகளின் அதிபர் தாய் "வாணி" வீட்டு நிர்வாகி "தியா" விஜயின் செல்ல தங்கை கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள் இது தான் விஜயின் குடும்பம்.

விடிந்தும் எழும்ப மனம் இல்லாமல் தன் கட்டிலில் புரண்டு கொண்டு இருந்தாள் மீரா மெதுவாக போர்வையை விளக்கி மணியை பார்க்க அது 7 என காட்ட " அய்யோ டைம் 7 ஆ போச்சி காலேஜ்க்கு லேட் ஆக போது" என்று தன் வேலைகளில் மூழ்கினால் நம் நாயகி "மீரா "

மீரா அழகி பார்பவர்களை பார்த்த உடனே இழுக்கும் அழகி. கல்லூரி கடைசி வருடம் படித்து முடித்து வேலைக்குச் சென்று தான் வளர்ந்த ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பது கனவாகவே மாறியது. தன் பத்து வயதில் ஒரு விபத்தில் தன் பெற்றோர் மட்டும் தன்னை பாச கடலில் மிதக்க செய்த தன் அண்ணணையும் இழந்தவள் ஆசிரமத்தில் வளர்ந்து கல்லூரி சேர்ந்ததும் தன் குடும்பத்துடன் வாழ்ந்த தன் சொந்த வீட்டில் தன் குடும்பத்தாரின் நினைவுகளிள் வாழ்கின்றாள் .

"என்ன மா உன் பையன கொஞ்சிட்டு வந்துடியா" என்று தியா கேட்க "என் பையன நா கொஞ்சுவன் உனக்கு என்ன டி போ போய் காலேஜ்க்கு கெளம்பற வேலைய பார் பொட்ட புள்ள எழுற நேரமா இது போர இடத்துல என்ன பன்ன போரியோ ஒரு வேல செய்யரது இல்ல கத்துக்க சொன்னா எதாச்சி காரணம் சொல்றது" என்று தன் தாயிடம் காலை அர்சனைகளை வாங்கிக் கொண்டாள் தியா

"மா என்ன மா அவ கல்யாணத்துக்கு  அவசரம் " என்று கேட்டுக் கொண்டே படியில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தான் ஆணழகன் விஜய். "ஆமா டா இப்படியே செல்லம் குடுடா" என்று வாணி கூற "என் பொண்ணு ராணி மாறி வாழ்வா டி" என்று கூறிக் கொண்டு வந்தார் சிதம்பரம் "உடனே சப்போட்டுக்கு வந்துர்விங்க வந்து சாப்டுங்க வாங்க" என்று வாணி ஆழைக்க அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பிட்டு அவரவர் வேலைகளை பார்க்க கிளம்பினர்.

மீரா வீட்டு வேலைகளை முடித்து விட்டு சமைத்து விட்டு தனக்காக தன் அப்பா வாங்கி மாட்டிய ஊஞ்சலில் காலை காபியுடன் அமர்ந்தாள். ஏதோ யோசனையில் இருந்து மீண்டவள் மணியை பார்க்க எட்டறை காட்டியது கல்லூரிக்குச் செல்ல நேரம் ஆனதால் சாப்பிட்டு சாப்டாமளும் ஓடினாள்.

இனி இவர்கள் வாழ்வில் நடப்பது கடவுளுக்கே வெளிச்சம்.

கேட்கா வரமடா நீWhere stories live. Discover now