கேட்கா வரமடா நீ

Galing kay kadharasigai

95.6K 3.4K 377

ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள் Higit pa

வரம் - 1
வரம் - 2
வரம் -3
வரம் -4
வரம் - 5
வரம் - 6
வரம் - 7
வரம்-8
வரம் - 9
வரம் - 10
வரம் - 11
வரம் - 12
வரம் - 13
வரம் -14
வரம் - 15
வரம் - 16
வரம் - 17
வரம் - 18
வரம் - 19
வரம் - 20
வரம்-21
வரம்-22
வரம்-23
வரம்-24
வரம்-25
வரம்-26
வரம்-27
வரம்-28
வரம்-29
வரம்-30
வரம்-31
வரம்-32
வரம்-33
வரம்-34
வரம்-35
வரம்-36
வரம்-37
வரம்-39
வரம்-40
நன்றி

வரம்-38

1.8K 69 10
Galing kay kadharasigai

எந்த மாற்றமும் இல்லாமல் பத்து நாட்கள் நகர்ந்தது. மதி அம்மா அவர் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

அன்று காலை மதி தாமதமாக எழுந்தாள். சற்று சோர்வாகவும் இருந்தது அவளுக்கு. தன்னை சமன் செய்துக் கொண்டு சமயலறை சென்று வேலையில் மூழ்கினாள். அனைவரும் சாப்பிட அமர மதியை கண்ட விஜய்

"மதி என்ன டா டல்லா இருக்க" என்று கேட்க

"தெரில அண்ணா காலையில இருந்து டையர்ட்டா இருக்கு" என்று மதி பதிலலித்தாள்.

"சரி அண்ணி நீங்க ரெஸ்ட் எடுங்க நா எல்லாருக்கும் சாபாடு பரிமாரன்" என்று தியா அந்த பொறுப்பை ஏற்றாள்.

"மதி கொஞ்சம் சாப்பிட்டு போ மா" என்று தருண் அம்மா கூற மதி சரி என சம்மதித்து அவர்களுடன் கொஞ்சமாக உண்டாள். கார்த்தி இதை கண்டு தன் தங்கைக்கு நல்ல பாசமான குடும்பம் அமைந்ததை எண்ணி நிறைவாக இருந்தது.

ஆண்கள் அனைவரும் உண்டு விட்டு அலுவலகம் சென்றனர். விஜய் ஒரு வாரம் மீரா அருகிலே இருந்து விட்டு மூன்று நாட்களாக தான் அலுவலகம் சென்றான். போகும் முன் மீராவை பார்த்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட மறக்க வில்லை அனைவரும் மீராவிடம் பேசியும் அருண் மட்டும் அவளை காண்பதோடு சரி ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை.

அருண் மதியை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் டையர்ட்ன்னு வேற சொன்னா நைட் நல்லா தான இருந்தா என்று யோசித்துக் கொண்டே அவன் அறைக்கு சென்றான். மதி கட்டிலில் படுத்து கண்களை மூடி படுத்து இருந்தாள். அவள் அருகில் சென்று அவள் அருகில் அமர்ந்து அவள் தலை கோத மதி கண்களை திறந்து பார்க்க அருண் அமர்ந்து இருப்பதை கண்டு எழுந்து அமர்ந்தவள் "மாமா நீங்க ஆப்பிஸ் போலையா" என்க

"உனக்கு என்ன டி ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்க" என்க

"ஒன்னும் இல்ல மாமா டையர்ட் தான் நீங்க கிளம்புங்க" என்று கூற

அருண் மனமில்லாமல் "வா ஹாஸ்பிடல் போலாம்" என்க

"இல்ல மாமா வேணா எனக்கு ஒன்னும் இல்ல நீங்க கிளம்புங்க" என்று கூற அவன் மறுக்க

அவனை ஒருவாக சாமாதானம் செய்து அனுப்பி வைத்தாள். அருண் மனமே இல்லாமல் அலுவலகம் சென்றான். அங்கும் அவனிற்க்கு மதி நினைவாகவே இருக்க சற்று வேலை செய்தவன் மதியத்திற்க்கு மேல் அவனால் முடியவில்லை

"மச்சான் எனக்கு ஸ்ரீ நினைவாவே இருக்கு நா வீட்டுக்கு போறன் கொஞ்சம் பார்த்கிறியா" என்று அருண் கார்த்தியிடம் கேட்க

"மச்சான் இது நீங்க குடுத்த வேல நீங்க பார்த்துக்கோங்கன்னு சொன்னா பார்த்துக்க போறன்" என்று கூற

"தாங்க்ஸ் மச்சான்" என்று அவனை அணைத்து விடுவித்து ஆரவ் விஜயிடம் கூறி விட்டு வீட்டிற்க்கு புறப்பட்டான்.

அருண் சென்ற பிறகு மதிக்கு கண் இருட்டிக் கொண்டு வர அப்படியே கட்டிலில் மயங்கி சரிந்தாள். அருண் வீட்டிற்க்கு வர அவனை கண்ட தியா "என்ன அண்ணா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டிங்க என்ன ஆச்சி" என்று கேட்க

"ஸ்ரீ தான் டையர்ட்டா இருக்குன்னு சொன்னா இல்ல என்னால அங்க வேலையே செய்ய முடியல அதான் அவள பார்க்க வந்துட்டன்" என்று கூறி விட்டு அவன் அறைக்கு ஓடினன். தியா அவனை பார்த்து புன்னகைத்து விட்டு அவள் வேலையை பார்க்க சென்று விட்டாள்.

அருண் சென்று பார்க்க மதி உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த அருண் அவள் தலையை வருடினான். மணி மதியம் ஒன்று ஆகி இருக்க சாப்பிட எழுப்பலாம் என்று அருண் "ஸ்ரீ" என்று அழைக்க சற்றும் அசைவில்லாமல் மதி இருக்க அருணிற்க்கு சற்று பயம் வர அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க அதுவும் அவனிற்க்கு கை குடுக்காமல் போக அவளை அப்படியே கையில் ஏந்தியவன் கீழே வந்து "அம்மா தியா" என்று அழைக்க அவர்களும் வந்து விட மதியை அருண் தூக்கி இருப்பது ஏதோ சரி இல்லை என்று நினைத்து

"அண்ணா அண்ணிக்கு என்ன ஆச்சி" என்று தியா கேட்க

"அத அப்பறம் பேசிக்கலாம் டா பஸ்ட் ஹாஸ்பிடல் போலாம்" என்று அவன் முன் செல்ல தியா தருண் அம்மா மட்டும் அவர்களுடன் செல்ல மற்றவர்கள் வீட்டிலே இருக்க சொல்லி விட்டு அருண் மதியை மருத்துவமணை அழைத்துச் சென்றான்.

மருத்துவமணையில் மதியை சேர்த்தவன் மதியை அனுமதித்த அறையில் வாயிலில் நின்றிருக்க தியாவும் தருண் அம்மாவும் சற்று தள்ளி அங்குள்ள சேரில் அமர்ந்து இருந்தனர். தருண் அம்மா மதிக்கு எதும் ஆக கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

மருத்துவர் மதியை பரிசோதித்து விட்டு அவளை மயக்கம் தெளிய வைக்க மதி சோர்வாக எழுந்து அமர்ந்தாள். "கங்கிராட்ஸ் மிஸ்ஸஸ் மதி" என்று மருத்துவர் கூற மதி எதற்க்கு என்று விழிக்க அவள் விழித்ததை புரிந்துக் கொண்டவர் "யூ ஆர் கேரிங்" என்று கூற மதிக்கு இன்பத்தில் கண்கள் கலங்கிவிட்டது.

வெளியே தான் உன் ஹஸ்பன்ட் இருக்கார் அனுப்பறன் பேசிட்டு என் ரூம்க்கு வாங்க என்று கூறி விட்டு அவர் சென்று விட மதியால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

டாக்டர் அருணை மட்டும் உள்ளே அனுப்ப அருண் உள்ளே வர மதி அழுவதை பார்த்தவன் பதறி "ஸ்ரீமா என்ன டா எதுக்கு அழுக்கற என்ன டா சொன்னாங்க டாக்டர் கேட்டா எல்லாம் உங்க மனைவி சொல்வாங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க" என்று கேட்க

மதி அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு அருண் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து காட்ட

"என்ன டா வயிறு வலிக்குதா" என்று அவள் வயிற்றில் கையை பதித்தவாறு கேட்க மதி தான் அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஏய் என்ன டி தலை வலியா" என்று மீண்டும் அருண் கேட்க

"அய்யோ மாமா நீ அப்பா ஆக போற டா" என்று கோவத்தில் மதி நேரடியாகவே கூற அருண் சந்தோஷத்தில் ஏய் என்று கத்த மதி அவன் வாயை பொத்தி "இது ஹாஸ்பிடல் டா" என்று கூற அருணும் அமைதியாகினான். இருவரும் வெளியில் வந்து தருண் அம்மா தியாவிடம் கூற அவர்களும் சந்தோஷமாக வாழ்த்துக்கள் கூற

"அண்ணா என்ன நீங்க என்ன இந்த சின்ன வயசுல சித்தி ஆக்கிட்டிங்க டூ பேட்" என்று கூற அருண் வெக்க பட "அய்யய்யோ அய்யய்யோ அருண் அண்ணா வெட்க பட்ராரே பார்க்க முடியலையே" என்று கலாய்க்க

"தியா சும்மா இரு" என்று மதி கூற

"த்தோடா சப்போர்ட்டு" என்று தியா கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு முறைப்பது போல் பார்க்க "ஏய் வாலு உன் சேட்டைய வீட்ல வச்சிக்கோ இப்ப டாக்டர பார்த்துட்டு வீட்டுக்கு போய் எல்லார்கிட்டையும் சொல்லனும்"என்று தருண் அம்மா கூற சரி என்று அருண் மதி தருண் அம்மா டாக்டரை காண செல்ல தியா வெளியில் இருப்பதாக கூறி விட்டாள்.

அவர்கள் உள்ளே சென்றதும் தியா கைபேசியை எடுத்து ஆரவிற்க்கு அழைக்க இவ இந்த டைம்க்கு எதுக்கு கால் பன்றா என்று எண்ணிக் கொண்டே அட்டன் செய்தவன் அவளை பேச விடாமல் "தியா மா என்ன கால் பன்னி இருக்க மாமா நினைவா இருக்கா பீல் பன்னாத செல்லம் மாமா சீக்கிரம் வந்தரன்" என்று கூற

"அடேய் தடி மாடு எடுத்தா ஹல்லோ சொல்லு இல்ல எதுக்கு கால் பன்னன்னு கேட்டுட்டு பேசு இப்படி லூசு மாதிரி உலராத"

"என்னது தடிமாடா நல்ல மரியாதை சொல்லு மா எதுக்கு கால் பன்னிங்க"

"அண்ணா கார்த்தி அண்ணா இருக்காங்களா"

"இத கேட்க தான் பன்னியாக்கும் என்று சலித்துக் கொண்டே இருக்காங்க"

"ஸ்பீக்கர்ல போடு" என்க ஆரவும் ஸ்பீக்கர் ஆன் செய்ய விஜய் என்ன என்று சைகையில் கேட்க தெரில என்று ஆரவ் தோலை குலுக்க "தியா சொல்லு டா" என்று விஜய் கூற "அண்ணா நா சித்தி ஆகிட்டன் நீங்க மாமா ஆகிட்டிங்க அருண் அண்ணா அப்பா ஆகிட்டார்" என்று கூற மூவருக்கும் இன்பமாக இருந்தது.

"தியா நிஜமா தான் சொல்ரியா" என்று கார்த்தி கேட்க

"அட ஆமா அண்ணா நீங்க சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வாங்க" என்று கூறி போனை கட் செய்தவள் அடுத்து வீட்டிற்க்கு அழைத்து விவரத்தை கூற அவர்களும் இன்பத்தில் மிதந்தனர் தருண் அப்பா தான் தனக்கு பேரன் வர போவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

டாக்டர் அருணிடம் மதி வீக்காக இருப்பதாகவும் நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு கூறி சில அறிவுரைகள் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

மூவரும் வீட்டிற்க்கு செல்ல அருண் மதிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். மதியை அமர சொல்ல இல்ல அத்தை மீரா கிட்ட சொல்லிட்டு வரன் என்று மதி செல்ல அருணும் உடன் சென்றான்.

மீரா அறைக்கு சென்றவள் மெதுவாக மீரா கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்துக் கொண்டு கண்களில் கண்ணீருடன் "அம்மு நம்ம வீட்டுக்கு புதுசா ஒரு உயிர் வர போகுது நீ அத்தை ஆக போற நா அம்மா ஆக போறன் உன் அண்ணன் அப்பா ஆக போரார் இந்த உயிர் பிறக்கறதுக்கு முன்ன நீ எழுந்து என்ன கவனிச்சிக்கனும் உன் கையால என் குழந்தைய வாங்கி நீ தான் பேர் வைக்கனும் சீக்கிரம் எழுந்துரு டா" என்று கூறி அழுக அருண் அவளை சமாதானம் செய்து அழைத்து சென்றான். வெளியே செல்லும் முன் அருண் மீராவை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு சென்றான்.

அவர்கள் சென்ற பிறகு மீரா கண்களில் கண்ணீர் வடிந்தது .

வரம் தொடரும்.......

Ipagpatuloy ang Pagbabasa

Magugustuhan mo rin

45.7K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
4.9K 315 6
Highest Rankings :- #1 in Dreams #1 in Mystery #2 in Thriller #3 in Horror அவள் வருவாளா? வந்தாளா ?, இல்லையான்னு போய் படிச்சுப் பாருங்கள் ப்ரெண்ட்ஸ்!
122K 3.1K 20
சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு...
220K 6.3K 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?