கேட்கா வரமடா நீ

By kadharasigai

95.6K 3.4K 377

ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள் More

வரம் - 1
வரம் - 2
வரம் -3
வரம் -4
வரம் - 5
வரம் - 6
வரம் - 7
வரம்-8
வரம் - 9
வரம் - 10
வரம் - 11
வரம் - 12
வரம் - 13
வரம் -14
வரம் - 15
வரம் - 16
வரம் - 17
வரம் - 18
வரம் - 19
வரம் - 20
வரம்-21
வரம்-22
வரம்-23
வரம்-24
வரம்-25
வரம்-26
வரம்-27
வரம்-28
வரம்-29
வரம்-30
வரம்-31
வரம்-32
வரம்-33
வரம்-34
வரம்-35
வரம்-36
வரம்-38
வரம்-39
வரம்-40
நன்றி

வரம்-37

1.7K 66 1
By kadharasigai

மீரா அறைக்கு வெளியில் ரேஷ்மா கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்து இருக்க அதை கண்ட விஜய் வேகமாக மீரா அறை கதவை திறந்து உள்ளே சென்றான். மீரா சுவாசம் சீராக இருப்பதை பார்த்த பிறகு தான் விஜய் மூச்சை விட்டான்.

மீராவை பார்த்த பிறகு விஜய் வெளியில் வர அவனுக்காக காத்திருந்த ரேஷ்மா "என்ன விஜய் அவளை கொன்னுட்டன்னு நினைச்சியா அவ தான் படுத்த படுக்கையா ஆகிட்டாளே இதுக்கு மேல அவள கொள்ள எனக்கு மனசு வரல காலம் பூரான் அவ இப்படி தான் இருக்க போறா" என்று கூற

"ஏய் ச்சீ வாய மூடு உன் மேல தான் நாங்க கம்ப்ளைன்ட் குடுத்தனே போலீஸ் உன்ன சும்மா விட மாட்டாங்க" என்று விஜய் கோவத்தில் கத்த

"ஏய் ஏய் விஜய் இது ஹாஸ்பிடல் கத்தாத என்னன்னு கம்ப்ளைட் குடுத்த உன் காதலிய சாரி சாரி உன் ஆச பொண்டாட்டிய ரோட்ல தள்ளி விட்டன்னா உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா அந்த லாரிய அடிக்க சொல்லி ஏற்பாடு பன்னதே நான் தான்" என்று கூற

"அதுவும் உன் ஏற்பாடு தானா இப்பவே பேலீஸ்ல சொல்ரன்" என்று விஜய் போன் செய்ய மறுமுனையில் சொன்ன செய்தியில் கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

போனை வைத்தவன் ரேஷ்மாவை முறைக்க "என்ன என்ன அரெஸ்ட் பன்ன முடியாதுன்னு சொல்லிட்டாங்களா" என்று கேலியாக கேட்க

விஜய் கோவத்தை கையை விரல்களை மூடி கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் குடும்பத்தினரும் வந்து சேர்ந்திட ரேஷ்மாவை கண்டவர்கள் கோவமாக அவள் அருகில் செல்ல பார்க்க கார்த்தி அவர்களிடம் இது மருத்துவமணை என்று அறிவுருத்தி அமைதியாக்கினான்.

"இங்க பார் ரேஷ்மா இங்க இருந்து போய்ரு இல்ல அநியாயமா உன் உயிர என் கையால இழக்க வேண்டிவரும்" என்று ஆரவ் சீர அருண் அதற்க்கு ஒரு பங்கு மேலே சென்று அவளை நோக்கி கழுத்தை நெறிப்பது போல் கையை கொண்டு போக தருண் அவனை தடுத்து அவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

"அட நம்ம புது மாப்பிள்ளை கைய கொடு கங்கிராட்ஸ் என்று அவளே அவன் கை பிடித்து வாழ்த்துக்கள் கூறி விட்டு என்ன பாசம் உங்க பாசத்த பார்க்கும் போது அப்படியே எனக்கு புல் அறிக்குது" என்று ரேஷ்மா கூற

"இப்போ இங்க இருந்து வெளியே போரியா இல்லையா" என்று விஜய் பல்லை கடித்துக் கொண்டு கேட்க

"கூல் கூல் விஜய் கிளம்பரன் எல்லாருக்கும் போய்ட்டு வரன் மீண்டும் சந்திப்போம்" என்று கூறி விட்டு அவள் கிளம்பி விட அவள் வெளியில் செல்லவும் ஒரு வக்கில் உள்ளே வந்து விஜயிடம் பேசினார்.

"விஜய் நீங்க கம்ப்ளைன்ட் குடுத்த பொண்ணு முன் ஜாமின் வாங்கிட்டாங்க அது மட்டும் இல்ல மீராவ இடிச்ச லாரிக் காரன் அவங்க சடனா வந்து விழுந்ததா வாக்குமூலம் குடுத்துர்க்காங்க அதனால அவங்க மேல கேஸ் போட முடியாது சோ நாம்ம மீரா கேஸ்ஸ ஆக்சிடென்ட்ன்னு ப்ரூப் பன்ன நெரைய சான்ஸ் இருக்கு மீராவ கடத்தன மாதிரி எந்த எவிடென்ஸ்ஸும் இல்ல நம்ம பக்கம் கொஞ்சம் வீக்கா தான் இருக்கு" என்று கூற

"அப்போ என் மீருவ இந்த நிலைமைக்கு ஆளாக்கனவள சும்மா விட சொல்ரிங்களா மேடம் என் மீரு இப்படி படுத்துன்னு இருக்கறதுனால தான் நா கேஸ் குடுத்தன் அதே அவ சரி ஆகியோ இல்ல அவளுக்கு எதாச்சின்னா இன்னேரம் அவ உயிர் என் கையால போகி இருக்கும்" என்று விஜய் உணர்ச்சி மிக்க கூற

"கூல் விஜய் நா பார்த்துக்கறன் அடுத்த இன்வெஸ்டிகேட்ல அவ ஜெய்லுக்கு போவா இப்போ நா கிளம்பரன்" என்று கூறி சென்று விட்டார்.

அவர் சென்ற பிறகு ஆரவும் தியாவும் உள்ளே சென்றனர்.

தியா மீரா கையை பிடித்துக் கொண்டாள். ஆரவ் "மீரா கண்ண திறந்து பார் மா நீ ஆச பட்ட மாதிரி எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சி" என்று கூற மீராவிடம் அசைவு இல்லை பிறகு அவர்கள் வெளியில் வந்து விட டாக்டர் உள்ளே சென்று மீராவை பரிசோத்து விட்டு வெளியில் வந்தவர். "ஐம் சாரி ஷி இஸ் இன் கோமா பட் கவலை படாதிங்க கண்டிப்பா அவங்க கண்ண திறப்பாங்க நீங்க பாஸிட்டிவ்வா அவங்க கூட பேசுங்க நார்மல்லா ட்ரீட் பன்னுங்க அவங்க உங்களுக்காக திரும்ப வருவாங்க" என்று கூற அனைவர் முகத்திலும் சோகம் படர்ந்துக் கொண்டது.

"அப்பறம் அவங்கள வீட்ல வச்சியும் பார்த்துக்கலாம் ஹாஸ்பிடல்ல வச்சியும் பார்த்துக்கலாம் உங்க விருப்பம் தான்" என்று கூற

"நாங்க வீட்டுக்கே கூட்டிட்டு போறோம் டாக்டர்" என்று விஜய் கூற

"ஓகே பார்மாலிடிஸ் முடிச்சிருங்க வந்து" என்று அவர் கூற சரி என தலையசைத்தான்.

"மீருவ நா கூட்டிட்டு போறன் டா" என்று விஜய் கூற

"இல்ல மச்சான் அவ எங்க கூட இருக்கட்டும்" என்று அருண் கூற

"நாங்க கூட்டிட்டு போறோம்" என்று ஆரவ் பெற்றோர் கூற

"என் பொண்டாட்டிய என் கூடவே கூட்டிட்டு போறோம் டா என்ன தடுக்காதிங்க" என்று விஜய் கூற

"இல்ல மச்சான் அங்க அம்மா மட்டும் பார்த்துக்க கஷ்டமா இருக்கும் இங்க அம்மா இருக்காங்க ஸ்ரீ இருக்கா இரண்டு பேரும் பார்த்துப்பாங்க" என்று அருண் கூற இப்படியே மாறி மாறி வாக்குவாதம் நடக்க

"இருங்க இருங்க எதுக்கு இப்போ சண்ட போட்டு கிட்டு மச்சான் வீடு பெருசு தான மூனு பேமலியும் ஒன்னாவே இருந்து மீராவ பார்த்துக்கோங்க" என்று கூற

அனைவருக்கும் அது சரி என பட சம்மதித்தனர். மீராவை அருண் வீட்டிற்க்கு அழைத்து சென்றனர். பெரியவர்கள் கீழ் உள்ள அறையில் தங்கிக் கொள்ள சிரியவர்கள் மேல்தளத்தில் தங்கி கொண்டனர். மீரா அறையிலே அவளுக்காக ஏற்பாடு செய்தனர் விஜய்க்கும் அங்கேயே கட்டில் போடப்பட்டது. இன்னொரு அறையில் ஆரவ் தியாவை தங்க வைத்தனர். நிவி வீட்டிற்க்கு அனுப்ப பட்டாள். அனைவரையும் சேர்த்து விட்டு கார்த்தி கிளம்ப

"ப்ரோ நீங்க மட்டும் எங்க போறிங்க" என்று விஜய் கேட்க

"இது என்ன ப்ரோ கேள்வி வீட்டுக்கு தான்"

"ஏன் நீங்களும் இங்கேயே இருக்கலாமே"

"இல்ல ப்ரோ பொண்ணு குடுத்த வீட்ல தங்கனா நல்லா இருக்காது"

"நா பொண்ணு எடுத்த வீட்லையே வீட்டோட மாப்பிள்ளையா மாறிட்டன் உங்களுக்கு என்ன நீங்களும் இங்கேயே இருங்க"

"அது மச்சான்" என்று கார்த்தி இழுக்க

"நா எதும் சொல்ல மாட்டன் இந்த வீட்டு மாப்பிள்ளை சொன்னா நோ அப்செக்ஸன்" என்று அருண் கூற கார்த்தி தருண் அறையில் தங்கிக் கொண்டான்.

இரவு அனைவரும் மனமே இல்லாமல் உண்டு விட்டு உறங்க சென்றனர்.

தியா கதவை திறந்து உள்ளே செல்ல ஆரவ் பால்கனியில் நின்றிருந்தான். தியா அவன் அருகில் சென்று அவன் தோல் தொட திரும்பியவன் தியாவை இழுத்து கைக்குள் வைத்துக் கொண்டவன் "தியா உன் கிட்ட ஒன்னு சொல்லனும்" என்க

தியா என்ன என்பது போல் பார்க்க "மீரா சரி ஆன அப்பறம் நம்ம லைப் தொடங்களாம்" என்று ஆரவ் திக்கி தினறி கூற தியா அவன் கன்னத்தில் அடித்து விட்டாள். ஆரவ் அதிர்ச்சியாக பார்க்க "மீரா அண்ணி சரி ஆனா தான் நம்ம லைப் தொடங்கனுன்னு உறுதியா உரிமையா சொல்ரத விட்டுட்டு எனமோ திக்கி திக்கி பேசர" என்று கூற

"அதுக்கு ஏன் டி அடிச்ச கல்யாணம் ஆன முதல் நாளே அடி வாங்கனது நானா தான் டி இருப்பன்" என்று ஆரவ் கன்னத்தில் கையை வைத்து தேய்த்தவாறு பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள

தியா அவன் கையை விலக்கி அறைந்த கன்னத்தில் முத்தம் பதிக்க ஆரவ் "இந்த கன்னம் என்ன பாவம் பன்னுச்சி" என்று மறு கன்னத்தையும் காட்ட தியா சிரித்துக் கொண்டே அவன் காட்டிய இடத்திலும் முத்தம் பதித்தாள். பின் இருவரும் கலைப்பினால் உறங்க சென்று விட்டனர்.

விஜய் மீரா அருகில் சென்று அவளிடம் பேசி விட்டு அருகில் உள்ள கட்டிலில் படுத்துக் கொண்டான்.

எந்த மாற்றமும் இல்லாமல் பத்து நாட்கள் நகர்ந்தது

அந்த நாள்...

வரம் தொடரும் .....

Continue Reading

You'll Also Like

185K 8.6K 41
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தா...
220K 6.3K 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
111K 3K 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்...
81K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...