கேட்கா வரமடா நீ

By kadharasigai

96.6K 3.4K 377

ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள் More

வரம் - 1
வரம் - 2
வரம் -3
வரம் -4
வரம் - 5
வரம் - 6
வரம் - 7
வரம்-8
வரம் - 9
வரம் - 10
வரம் - 11
வரம் - 12
வரம் - 13
வரம் -14
வரம் - 15
வரம் - 16
வரம் - 17
வரம் - 18
வரம் - 19
வரம் - 20
வரம்-21
வரம்-22
வரம்-23
வரம்-24
வரம்-25
வரம்-26
வரம்-27
வரம்-29
வரம்-30
வரம்-31
வரம்-32
வரம்-33
வரம்-34
வரம்-35
வரம்-36
வரம்-37
வரம்-38
வரம்-39
வரம்-40
நன்றி

வரம்-28

1.7K 67 9
By kadharasigai

அனைவரும் உண்டு விட்டு உறங்க சென்று விட தருண் கைபேசி அலறியது அதை தருண் எடுக்க

"தருண் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு போற வழில வண்டி பஞ்சர் ஆய்டுச்சி தனியா இருக்க எனக்கு பயமா இருக்கு தருண் சீக்கிரம் வா ப்லீஸ்" என்று நிவி கூற

"ஏய் லூசு இவ்வளவு நேரம் வீட்டுக்கு போகாம என்ன பன்னிட்டு இருந்த காலேஜ்ல" என்று தருண் கோபமாக கேட்க

"இன்னைக்கு கல்சுரல் தருண் அதான் லேட் ஆய்டுச்சி சீக்கிரம் வா தருண்" என்று நிவி பயத்தில் கூற

"வரன் டி எங்க இருக்க கரெக்ட் லொக்கேசன் சொல்லு" என்று தருண் போனை காதில் வைத்தவாறு  வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . நிவி அவள் இருக்கும் இடத்தை சொல்ல தருண் அங்கு சென்றான்.

தருண் நிவி சொன்ன இடத்திற்க்கு செல்ல அங்கு வெறும் வண்டி மட்டும் இருக்க தருணிற்க்கு சற்று பதட்டம் ஏற்பட்டது வண்டியை நிறுத்தி விட்டு சாலையின் இரு புறமும் திரும்பி பார்க்க வெற்று பாதையாக இருந்தது. நிவி வீட்டிற்க்கு செல்லும் பாதையில் தருண் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல பத்து அடி தூரத்தில் நிவி காலேஜ் பேக் விழுந்து இருக்க அதை எடுத்தவன் அதே ரோட்டில் வேகமாக சென்றான்.

சற்று தொலைவில் நிவியை சுற்றி நான்கு ஆட்கள் இருக்க நிவி கீழே அமர்ந்தவாறு அவர்களிடம் கையெடுத்து கும்மிட்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள். தருண் அவர்கள் அருகில் சென்று வண்டியை நிறுத்தி விட்டு நிவி என்று அழைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான். நிவி தருணை கண்டதும் அணைத்துக் கொண்டு "தருண் பயமா இருக்கு என்ன கூட்டிட்டு போ தருண் பயமா இருக்கு" என்று பிதற்ற தருண் அவள் தலையை வருடி "ஒன்னும் இல்ல டா அதான் நா இருக்கன் இல்ல கூட்டிட்டு போறன் ஒன்னும் இல்ல பயப்படாத" என்று கூற


நால்வரில் ஒருவன் "டேய் யார் டா நீ வந்த கட்டி புடிச்ச கூட்டிட்டு போறங்கற ஒழுங்கா அவளை ஒப்படைச்சிட்டு உயிரோட போற வழிய பாரு" என்று கூற தருண் நிவியை விலக்கி எதும் பேசாமல் கையை பிடித்து நிவியை எழுப்ப நிவி எழுந்து தருண் பின்னால் ஒழிந்துக் கொண்டாள்.

"பார்க்க சின்ன பையனா இருக்க ஒரு அடிக்கே செத்துருவ போனா போது அவள விட்டுட்டு நீ ஓடி போய்ரு" என்று ஒருவன் கூற

"ஏய் ச்சி நீங்க எல்லாம் மனுசனுங்களா டா இப்படி தனியா இருக்க பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிரிங்க அசிங்கமா இல்ல" என்று தருண் கோவத்தில் பேசி விட்டு நிவியை அழைத்துக் கொண்டு வண்டி இருக்கும் இடத்திற்க்கு சென்றான்.

வண்டியில் ஏற போன நிவியின் கையை  ஒருவன் பிடித்து இழுக்க நிவி "தருண்... விடு டா விடு டா என்ன " என்று தருணை அழைத்துக் கொண்டே அவளை விடுவித்துக் கொள்ள போராட தருண் வண்டியை விட்டு இறங்கி நிவி கையை பிடித்து இழுத்தவனை சரமாரியாக அடிக்க துவங்கினான் அதை கண்ட மற்ற மூவரும் தருணை தாக்க வர அவர்களையும் தனி ஆளாக தருண் சமாளித்துக் கொண்டிருந்தான் நிவி தருணிண் கோவத்தை வேடிக்கை பார்த்தவாறு இருக்க ஒருவன் மீண்டும் நிவியின் கையை பிடித்து இழுத்துச் சொல்ல பார்க்க நிவி அவனை தள்ளி விட முயற்சி செய்ய அவன் நிவியை அறைய அவள் சுவரில் முட்டி மயங்கி சரிந்தாள் இதை கண்ட தருண் நிவி என்று கத்தி நால்வரையும் பாகுபாடு இன்றி தாக்கினான் நால்வரும் ஓடி சென்று விட தருண் நிவி அருகில் சென்று அவளை தூக்கி மடியில் வைத்து

"நிவி .....நிவி என்ன பாரு நிவி " என்று கன்னத்தில் தட்ட நிவி கண் திறக்கவில்லை நிவி தலையில் காயம் பட்டு ரத்தம் கசிந்த வண்ணம் இருக்க தருண் கைக்குட்டையை அவள் காயத்தில் கட்டி விட்டு அவள் கல்லூரி பையில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான் .

நிவி மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள் அதன் பின் தான் தருணிற்க்கு மூச்சே வந்தது நிவி மெதுவாக எழுந்து அமர்ந்து தருண் என்று அவனை அழைக்க தருண் நிவியை அணைத்துக் கொண்டான்.

"எதுக்கு டி இவ்வளவு லேட் பன்ன வீட்டுக்கு போக வீட்ல இருந்து யாரயாச்சி வர சொல்லி இருக்கலாம் இல்ல இப்படி தான் தனியா வருவியா இப்ப வந்தவனுங்க உன்ன எதாச்சி பன்னி இருந்தா நா என்ன டி பன்னி இருப்பன் உனக்கு எதாச்சின்னா நா உயிரோடவே இருக்க மாட்டன் நியாபகம் வச்சிக்க" என்று கூற நிவி அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தாள்.  ஆனால் தருண் மனதில் அவள் இருக்கிறாள் என்று தெரிந்ததும் மனம் குளிர்ந்ததை போல் உணர்ந்தாள்.

தருண் சற்று நிதானமான பிறகு தான் கவனித்தான் அவன் நிவியை அணைத்து இருப்பது அவளை விட்டு எழுந்து வண்டியின் அருகில் சென்று திரும்பி நின்றுக் கொண்டான்.

"வந்து வண்டியில ஏறு வீட்ல விட்றன்" என்று தருண் அவளை பார்க்காமல் வண்டியை எடுத்தவாறு கூற

நிவி அவன் அருகில் சென்று அவன் பின்னால் அமர்ந்தாள். தருண் நிவியை அவள் வீட்டின் முன்னால் இறக்கி விட நிவி இறங்கி சற்று தூரம் சென்று மீண்டும் தருண் அருகில் வர தருண் அவளை பார்க்காமல் வேறு புறம் பார்க்க நிவி "தருண் ஒரு முறை என் முகத்த பார் நா இனி என் முகத்த காட்டவே மாட்டன் உனக்குள்ள நா இருக்கன்னு எனக்கு தெரியும் கடைசியா உன் முகத்த காட்டு ப்லீஸ்" என்று கலங்கியவாறு கூற தருண் நிவியை பார்த்தான்.

நிவி கண்களில் கண்ணீருடன் புன்னகைத்தவாறு பின்னோக்கி நடந்துக் கொண்டே "எனக்கு இது போதும் தருண் உனக்குள்ளையும் நா இருக்கன்னு உன் கண்ணீர் எனக்கு காட்டி குடுத்துர்ச்சி இனி உன்ன டிஸ்டப் பன்ன மாட்டன் பாய்" என்று கூறி விட்டு நிவி வேகமாக வீட்டிற்க்குள் ஓடி விட்டாள்.

தருண் கண்ணீரை துடைத்துக் கொண்டு வீட்டிற்க்கு சென்றான். வீட்டிற்க்கு சென்றவன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல போக மீரா வாசலில் அமர்ந்து இருந்தாள் அவளை பார்த்தவன் அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

அவன் முகத்தை பார்த்த மீரா "தரு அழுதியா" என்று கேட்க

"கஷ்டமா இருக்கு மீரா நிவி இன்னைக்கு எப்பேர்பட்ட கும்பல்ல மாட்டி இருப்பா தெரியுமா" என்று கலங்கியவாறு கூற மீரா கேள்வியாய் பார்த்தாள். தருண் நடந்த அனைத்தையும் கூற மீரா " நிவிக்கு ஒன்னும் ஆகல இல்ல" என்று கேட்க இல்லை என்று தருண் தலையாட்டினான்.


"ஆமா நீ ஏன் தூங்காம இங்க உட்காந்துன்னு இருக்க" என்று தருண் கேள்வியாய் கேட்க

"நீ வெளில அவசரமா போனியா அதான் நீ வர வரைக்கும் இங்க வெய்ட் பன்னன்" என்று மீரா கூற

"மீரா உன் மடியில படுத்துக்கவா " என்று தருண்  கேட்க

"வா "என்று மீரா அவள் மடி மீது படுக்க வைத்துக் கொள்ள தருண் படுத்துக் கொண்டான்.

மீரா அவன் முடியை கோதி விட்டுக் கொண்டே "நீ ஏன் தருண் நிவிய அவாய்ட் பன்ற " என்று கேட்க

"அவ சின்ன பொண்ணு மீரா படிக்கற பொண்ணு படிப்பு முடிஞ்ச அப்பறம் சொல்லலாம்ன்னு இருந்தன் ஆனா இன்னைக்கு என்னையும் மீறி வெளி படுத்திட்டன்"

"நல்லது தான் தரு விடு நிவி இனி சந்தோஷமா இருப்பா நீ வேனான்னு சொல்லும் போதே உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தா இனி பாரு அவள கையிலே பிடிக்க முடியாது" என்று மீரா புன்னகையுடன் கூற

"இல்ல மீரா அவ உள்ள போகும் முன்ன நா உன்ன டிஸ்டப் பன்ன மாட்டன்னு சொல்லிட்டு போனா ஏன் அப்படி சொன்னான்னு எனக்கு புரியல நா அவ கிட்ட மனசு விட்டு பேசனும் நா ஏன் அவள அவாய்ட் பன்னன்னு அவ கிட்ட சொல்லனும் இவ்வளவு நாள் அவ படிப்பு முடியும் வரை சொல்ல வேனான்னு நினைச்சன் ஆனா இப்போ அவ கிட்ட பேசனும் போல இருக்கு" என்று தருண் கூற

"சரி தருண் உன் மனசு போல பன்னு ட்ரஸ் எடுக்க போற அன்னைக்கி நிவிய கூப்பிடு அவள தனியா கூப்டு பேசு இல்ல அவள வெளில கூட்டிட்டு போய் பேசு"

"நா அவ கிட்ட பேசிட்டு அப்பறம் நிவி  விட்ல பேச போறன் "

"சரி தரு வா உள்ள போகலாம் போய் நிம்மதியா தூங்கு" என்று மீரா அவனை எழுப்பி அனுப்பி விட்டு அவளும் உறங்க சென்று விட்டாள்.

வரம் தொடரும்......

Continue Reading

You'll Also Like

37.1K 987 91
அருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவா...
48.9K 1.1K 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே க...
244K 7.9K 69
கண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழ...
239K 6.1K 147
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...