கேட்கா வரமடா நீ

By kadharasigai

95.6K 3.4K 377

ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள் More

வரம் - 1
வரம் - 2
வரம் -3
வரம் -4
வரம் - 5
வரம் - 7
வரம்-8
வரம் - 9
வரம் - 10
வரம் - 11
வரம் - 12
வரம் - 13
வரம் -14
வரம் - 15
வரம் - 16
வரம் - 17
வரம் - 18
வரம் - 19
வரம் - 20
வரம்-21
வரம்-22
வரம்-23
வரம்-24
வரம்-25
வரம்-26
வரம்-27
வரம்-28
வரம்-29
வரம்-30
வரம்-31
வரம்-32
வரம்-33
வரம்-34
வரம்-35
வரம்-36
வரம்-37
வரம்-38
வரம்-39
வரம்-40
நன்றி

வரம் - 6

2.5K 96 16
By kadharasigai

"என்ன டைம் 12 ஆச்சி யாரும் காணோம்" என்று மணியை பார்த்தவாறு புலம்பிக் கொண்டு இருந்தாள் மீரா. மணி 2 வரையிலும் யாரும் அங்கு வராமல் போக மீரா அருண் அறைக்குச் செல்ல அருண் எந்த அசைவும் இல்லாமல் உறங்கிக் கொண்டு இருந்தான். "என் பர்த் டே வ மறந்துட்டு தூங்கறத பார் காலைல இருக்கு இரு டா உனக்கு என் தரு கண்டிப்பா எனக்கு விஷ் பன்னுவான்" என்று கூறி விட்டு தருண் அறைக்குச் செல்ல அவனோ தலையாணையை கட்டிக் கொண்டு கனவு உலகத்தில் இருந்தான் "ச்ச இவன நம்பி வந்தது தப்பா போச்சே எப்படியும் காலைல என் கிட்ட தான வந்தாகனும் பாத்துக்கறன்" என்று கூறி விட்டு உறங்க சென்றாள்.

காலை அழகாக விடிய மீரா இரவு வெகு நேரம் தூங்காததால் அன்று மணி எட்டு ஆகிய பின்பே எழுந்தாள் எழுந்து குளித்து முடித்து கீழே வந்தாள். அவள் வருவதை பார்த்து அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க சென்றனர். "என்ன யாரும் கண்டுக்க மாட்ராங்க நிஜமாவே என் பர்த் டே வ மறந்துட்டாங்களா" என்று நினைத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். "என்ன டி இன்னைக்கு அமைதியா இருக்க " என்று கூறிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான் தருண். "என்ன டா டல்லா இருக்க" என்று கூறிக் கொண்டு அவள் மறு புறம் அமர்ந்தான் அருண். மீரா எதும் கூறாமல் எழுந்து வெளியே சென்றாள். அவள் போவதை கண்டு அருணும் தருணும் மௌனமாய் சிரித்தனர். "டேய் போதும் டா எதுக்கு அவள கஷ்ட படுத்திரிங்க எவ்லோ அப்சட் ஆய்ட்டா பார் டா " என்று தருண் அப்பா அவர்கள் காதை திருகினார்.

"அய்யோ பா என்ன பா இன்னும் கொஞ்ச நேரம் நீங்க கிளம்புங்க டைம் ஆச்சி "என்று அருண் கூற "ஆமா பா மீரா கோவில் போய்ர்பா அவ வெளியே வந்ததும் நாங்க பிளான இம்பிளிமட் பன்னனும் நாங்க கிளம்பறோம் " என்று கூறி விட்டு அருணும் தருணும் கிளம்பினர்.

மீரா கோவில் சென்று அருண், தருண், விஜய், ஆரவ் பேரில் அர்ச்சனை செய்து விட்டு கண் மூடி வேண்டிக் கொண்டு இருந்தாள். அச்சமயம் அவள் நெற்றியில் யாரோ குங்குமம் வைக்க கண்ணை திறந்தவள் எதிரில் யாரும் இல்லை. பின் நெற்றிய தொட்டு பார்க்க குங்குமம் இருந்தது. யாரா இருக்கும் என்று குழம்பிக் கொண்டே வெளியில் வர அவள் வாயை பொத்தி கைகளை கட்டி தூக்கி காரில் போட்டு கண்களை கட்டினர். மீரா கத்த முடியாமல் தப்பிக்க மூடியாமல் தினற கார் ஒரு இடத்தில் நின்றது. மீராவை இறக்கி கை கண் வாய் கட்டுகளை அவிழ்த்து விட்டு அந்த கார் சென்று விட்டது. மீரா தன்னை சமன் செய்துக் கொண்டு பார்க்க அது அவள் வளர்ந்த ஆசிரமம். அக்கா என்று ஒரு குட்டி தேவதை அழைக்க "என்ன குட்டி " என்று மீரா கேட்க அந்த பிஞ்சி கைகள் ஒரு திசையை காட்டியது. மீரா அந்த திசையை பார்த்து மீண்டும் அக்குழந்தையை பார்க்க அக்குழந்தை அங்கு இல்லை. அந்த திசையை நோக்கி மீரா செல்ல அங்கு ஆசிரமத்தில் உள்ள அனைத்து குழைந்தைகளும் கையில் ஒரு ரோஜாவுடன் மீரா அருகில் வந்து  "ஹாப்பி பர்த் டே" என்று கூற "மீரா கண்களில் கண்ணீர் முட்டியது.

அப்பெழுது அவள் கண்ணை யாரோ கையால் மூடினர். "யார் இது?.. கையை எடுங்க யார் எனக்காக இவ்வாளவு செய்றது யாரு" என்று கேட்க அமைதியே கிடைக்க ஏதோ யோசித்தவலாய் "விஜி நீதான இது" என்று கேட்க "எப்படி மீரு கண்டு பிடிச்ச" என்று விஜய் கேட்க "பஸ்ட் கை எடு விஜி" மீரா கூற "இரு டி வா என் கூட "என்று விஜய் அழைத்து சென்றான். "இன்னும் எவ்வளவு நேரம் விஜி பிலீஸ் கண்ண திறக்க விடு டா" மீரா கெஞ்ச "ரெடி 1---2---3" என்று கூறி விட்டு கண்ணை திறந்து விட்டான்.

மீரா கண்களை திறந்து பார்க்க எதிரில் அருண்,தருண், அருண் பெற்றோர், ஆரவ் அவன் பெற்றோர், தியா அவள் பெற்றோர் என்று அனைவரும் ஒன்றாக "ஹாப்பி பர்த் டே மீரா "என்று கூறினர். மீரா இது என் அப்பா அம்மா என்று விஜய் கூற மீரா "என்ன ஆசிர்வாதம் பன்னுங்க அங்கிள் ஆன்டி "என்று அவர்கள் காலில் விழுந்தாள். "நல்லா இருமா என்று ஆசிர்வதித்தனர். "அப்பறம் இவங்க என் அப்பா அம்மா " என்று ஆரவ் கூற மீரா "அப்பா அம்மா ஆசிர்வாதம் பன்னுங்க" என்று அவர்களிடமும் ஆசி பெற்றாள் பின் அருண் தருணிடம் செல்ல அவர்கள் "ஏய் ராச்சசி ஹாப்பி பர்த் டே " என்று இருவரும் கூற மீரா அவர்களை இரண்டு அடி அடித்து அணைத்துக் கொண்டாள்.

"ஓ இது தான் அடிக்கிற கை அணைக்குமா " என்று தருண் கூற மீரா சிரித்து விட்டு தருண் அப்பா அம்மாவிடம் சென்று அவர்களிடம் ஆசி பெற்றாள். "போதும் போதும் சென்டிமென்ட் கேக் கட் பன்னுங்க எனக்கு பசிக்குது என்று தியா கூற அனைவரும் சிரிக்க மீரா கேக் கட் பன்ன அனைவரும் கை தட்டினர். மீரா முதல் கேக் பீஸை எடுத்து அருணுக்கும் தருணுக்கும் ஊட்ட அவர்களும் மீராவுக்கு ஊட்டினர். பின் தருண் மா ,பா ,தியா, தியா மா பா ,ஆரவ் ,ஆரவ் மா ,பா, விஜய் என்று அனைவருக்கும் ஊட்டினாள்.தருண் பெற்றோர் மீராவுக்கு ஒரு நெக்லஸை பரிசாக குடுக்க ஆரவ் பெற்றோர் மீராவுக்கு வளையல்களை குடுக்க விஜய் பெற்றோர் கம்மல் குடுக்க அருண் மீராவிர்க்கு தங்க கொலுசு குடுக்க தருண் வெள்ளி பிரேஸ்லெட் குடுக்க ஆரவ் வாட்ச் குடுக்க தியா "அடடா ஒரே தங்க கடையா இருக்கே சீனியர் எல்லாத்தையும் போட்டுகிட்டு வெளியே போனிங்க எல்லரும் நகை கட விளம்பரத்தல இருந்து வந்துட்டிங்கன்னு சொல்லுவாங்க" என்று கூற அனைவரும் தியா வை முறைக்க "சரி சரி நோ முறைப்பு ஒன்லி சிரிப்பு சீனியர் இது என் கிப்ட்" என்று ஒரு டெடி எடுத்து குடுக்க மீரா "ஐஐ டெடி" என்று வாங்கி கட்டிக் கொண்டாள். "அந்த எடத்துல நா இருக்க கூடாதா "என்று விஜய் எண்ணினான்.

"சரி சரி வாங்க சாப்பிட போலாம்" என்று தியா கூற "இன்னும் ஒரு கிப்ட் இருக்கு இரு " என்று அருண் கூற என்ன என்று மீரா புரியாமல் விழிக்க விஜய், அருண்,ஆரவ்,தருண் நால்வரும் அவர்கள் எடுத்த ஆடையை குடுத்து "இத தான் நீ இப்ப போடனும்" என்று நால்வரும் கூற மீரா என்ன செய்வதறியாது விழிக்க "இல்ல நா இதலையே இருக்கன் இத எல்லாம் நா இன்னொரு நாள் போட்டுக்கறன்" என்று கூறி விட அனைவரும் சாப்பிட சென்றனர் அந்த ஆசிரமத்தில் உள்ள அனைவருக்கும் துணி விருந்து விளையாட்டு என்று அனைவரும் மகிழ்ந்தனர். பிறகு அசிரமத்தில் உள்ள குழந்தைகளுடன் விளையாடி விட்டு பெரியவர்கள் சென்று விட சிறியவர்கள் மாலை வரை அங்கு இருந்தனர். "விஜி என்ன என் கிட்ட பேசவே இல்ல " என்று எண்ணிக் கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்தாள். அங்கு வந்த ஒரு குட்டி மீரா கையில் ஒரு ரோஜாவை கொடுத்து அங்க என்று கை காட்ட மீரா அங்கு சென்று பார்க்க

அங்கே....

வரம் தொடரும்......

Continue Reading

You'll Also Like

28.5K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
4.9K 315 6
Highest Rankings :- #1 in Dreams #1 in Mystery #2 in Thriller #3 in Horror அவள் வருவாளா? வந்தாளா ?, இல்லையான்னு போய் படிச்சுப் பாருங்கள் ப்ரெண்ட்ஸ்!
40K 1.2K 71
அருணோதயம் வெளியீடு டிசம்பர் 2021 தந்தை மகள் பாசம் முழு நீள ரொமான்டிக் ஸ்டோரி காதலும் எனக்கு வராது, கல்யாணமும் சரிவராது, என தொழில்துறையில் கொடி கட்ட...
12K 1.9K 24
கதிர் முல்லை எப்போது இணைவர். Km story