கேட்கா வரமடா நீ

By kadharasigai

95.6K 3.4K 377

ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள் More

வரம் - 1
வரம் - 2
வரம் -4
வரம் - 5
வரம் - 6
வரம் - 7
வரம்-8
வரம் - 9
வரம் - 10
வரம் - 11
வரம் - 12
வரம் - 13
வரம் -14
வரம் - 15
வரம் - 16
வரம் - 17
வரம் - 18
வரம் - 19
வரம் - 20
வரம்-21
வரம்-22
வரம்-23
வரம்-24
வரம்-25
வரம்-26
வரம்-27
வரம்-28
வரம்-29
வரம்-30
வரம்-31
வரம்-32
வரம்-33
வரம்-34
வரம்-35
வரம்-36
வரம்-37
வரம்-38
வரம்-39
வரம்-40
நன்றி

வரம் -3

3.5K 119 11
By kadharasigai

"உன் கண்கள் கலங்க என் நெஞ்சம் வலிப்பதேனோ அன்பே!
உன் புன்னகை காண வரம் தருவாயோ!"

"உன்ன பார்த்து ஒரு வாரம் ஆகுது உன்னோட கலங்கன கண்ணு என்ன எந்த வேலையும் செய்ய விட மாட்டிந்து சீக்கிரம் நேர்ல பார்த்து உன் கிட்ட இந்த கிப்ட் குடுத்துட்டு உன் சிரிப்ப பாக்கனும் டி" என்று அவளுக்காக விஜய் தன் கையால்  செய்த கிப்டை பார்த்து பேசிக்கொண்டு இருந்தான்.

"மச்சான்" என்று அருண் அழைக்க
"சொல்லு மச்சான்" என்று விஜய் அருணை பார்த்து கேட்க
"என்ன டா பன்ற தனியா சிரிச்சிட்டு இருக்க உடம்பு எதும் சரியில்லையா" என்று அருண் அக்கரையாக கேட்க விஜய் சிரித்துக் கொண்டே "அது எல்லாம் ஒன்னும் இல்ல டா உடம்பு நல்லா தான் இருக்கு" என்று விஜய் கூற

"ஆமா மச்சான் உடம்புக்கு ஒன்னும் இல்ல ஆனா மனசு தான் இங்க இல்ல அப்படி தான மச்சான்" என்று கேட்டுக் கொண்டே ஆரவ் வந்து சேர்ந்தான்.

"டேய் அப்படி எல்லாம் இல்ல டா " என்று விஜய் மறுக்க "அப்போ இந்த கிப்ட் யார்க்கு எதுக்கு ?" என்று ஆரவ் விஜய் கையில் வைத்திருந்த கிப்டை காட்டி கேட்க "அது ....வந்து.....இது...." என்று விஜய் திக்கி தினறிக் கொண்டிருந்தான்.

"டேய் விடு டா அவனே கன்பூஸ்ல இருக்கான் தெளிவானா அவனே சொல்லுவான் " என்று அருண் கூற "சரி ஏதோ சொல்ற ஒத்துக்கரன்" என்று ஆரவ் கூற

"உங்க கிட்ட மறைக்கிற அளவுக்கு ஒன்னும் இல்ல டா அவள எனக்கு பிடிச்சிருக்கு துருதுருன்னு எதையோ தேடற கண்ணு டா அவளுது அந்த கண்ண நா கலங்க வச்சிட்டன் டா கஷ்டமா இருக்கு" என்று விஜய் சோகமாக கூற "டேய் யார் டா அது எதுக்கு அழுக வச்ச" என்று ஆரவ் ஆர்வமாக கேட்க

"உன் லவ் ஸ்டோரிய அப்பறம் கார்ல கேட்டுக்கோ இப்போ வா போலாம்" என்று அருண் அழைக்க விஜய் "எங்க டா " என்று கேட்க "எங்க வீட்டுக்கு அம்மா கூப்டாங்க இரண்டு பேரும் காலேஜ் படிக்கும் போது வந்தது இப்ப வந்தே ஆகனுன்னு கூப்டாங்க"என்று அருண் கூற

"இல்ல மச்சான் நா வரல" என்று விஜய் மறுக்க "நீ வரலனா உன்ன தூக்கிட்டு வர சொன்னாங்க" என்று அருண் விஜயிடம் கூறி விட்டு ஆரவிடம் திரும்பி "ஆரவ் தூக்கு டா"  என்று கூற இருவரும் அவனை தூக்கிக் கொண்டு காரில் விட்டனர்.

"டேய் உங்களால அவளுக்கான கிப்டும் கையிலே எடுத்துட்டு வந்துட்டன் டா" என்று விஜய் கூற "அட அத இங்க கார்ல வை டா போகும் போது எடுத்துப்ப" என்று அதை வாங்கி காரில் வைத்தான் ஆரவ்.

"இப்ப சொல்லு டா யார் அந்த லக்கி கேர்ள்" என்றான் அருண் காரை ஓட்டியவாறு விஜய் கண்களை மூடி சிரித்து விட்டு "உன் தம்பி...." என்று விஜய் சொல்லி முடிப்பதற்குள் அருண் சடன் ப்ரேக் போட ஆரவ் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே "மச்சான் நீ அவனா சொல்லவே இல்ல அருண் உன் தம்பி குடுத்து வச்சவன் டா" என்று கூறி சிரிக்க விஜய் அவனை அடிக்க ஆரம்பித்தான்.

"டேய் என்ன டா விடு டா அவன"என்று அருண் அவனை அமைதி படுத்தினான் "டேய் சொல்றத முழுசா கேளுடா" என்று விஜய் கடுப்பாக கூற ஆரவ் சிரிப்பதை நிறுத்தி விட்டு "சொல்லு மச்சான் அவன எங்க பாத்த எப்படி லவ் பன்ன" என்று ஆரவ் கிண்டல் அடிக்க அவனை முறைத்த விஜயிடம் அருண் "அவன் கிடக்கறான் நீ சொல்லு மச்சான்" என்று அருண் கூற விஜய் நடந்ததை கூறினான். அவன் கூறி முடிக்கவும் வீடு வரவும் சரியாக இருக்க மூவரும் உள்ளே சென்றனர்.

"வாங்க பா இப்ப தான் இங்க வரனும்ன்னு தோனுச்சா" என்று அருண் அம்மா கேட்க "இப்ப கூட வண்டில தூக்கி போட்டு கடத்தின்னு தான் மா வந்தன்" என்று அருண் கூற "டேய் சும்மா இரு டா" என்று அருணை அடக்கிய விஜய் "அப்படி எல்லாம் இல்ல மா கம்பனி டெவலப் பன்றதுல வேல கொஞ்சம் அதான் இப்போ வந்துட்டோம் இல்ல" என்று  கூற "என்ன மா வெளிலே நிக்க வச்சி பேசிட்டு அவங்கள உள்ள கூப்புடு மா" என்று அருண் தந்தை கூற அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

"மா என்ன மா பிரியாணியா வாசன தூக்குது" என்று ஆரவ் கேட்க "ஆமாண்ணா பிரியாணி" என்று கூறி கொண்டே தருண் கிச்சனில் இருந்து வந்தான். தருணிடம் நலம் விசாரித்தவர்கள் "மச்சான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்று விஜய்க்கு மட்டும் கேட்டுக்கும் படி அருண் கூற "என்ன டா" என்று விஜய் கேட்க "வெய்ட் வந்தர்ரன்" என்று கூறிய அருண் அவன் அம்மாவிடம் கேட்டு கொண்டு சமையலறைக்கு சென்றான்.

"என்ன டா" என்று ஆரவ் விஜயிடம் கேட்க "தெரில டா ஏதோ சர்ப்ரைஸ் சொல்லிட்டு போனான் "என்று கூறி கொண்டிருக்க "மச்சான் "என்று அருண் குரல் கேட்க திரும்பியவர்கள் கண்ணில் அருண் ஒரு பெண்ணிண் தோள் பற்றி அழைத்து வந்து அவள் தோள் மேல் கை போட்டு நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.

விஜய் அவர்களையே பார்த்து கொண்டிருக்க ஆரவ் முழு குழப்பத்தில் இருந்தான்...

வரம் தொடரும்....

Continue Reading

You'll Also Like

122K 3.1K 20
சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு...
81K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
36K 810 23
காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை...
78.7K 788 8
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தன...