💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞

Por KathirvelanMullai

8.9K 1.3K 313

நான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்தத... Más

முதல் தீண்டல்
முல்லைப்பூ
பிளான் பண்ணி பண்ணனும்
கதிரின் வைரம்
சில பொய் நன்மைக்கே
இனிதே ஆரம்பம்
நல்லதொரு குடும்பம்
jasmine
சந்தேகம் என்னும் தீ
என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன்.
என் மனசை கொள்ளையடித்த பெரிய திருடன்
அழகி
GPS
KVVM
தீமையிலும் நன்மை உண்டு
அன்பான அழகி
பிள்ளை வரம்
kathir velan in mullai
mullai kathirvelan
love
km
no fear
KM
kathir velan mullai
only KM
appadi podu chellam
its mullai style
km
KM
kathirvelan loves mullai
KM
mullai kathirvelan
madras trip
KM winning moment
KM
KM IN MURUGAN HOUSE
km
kathir loves mullai
KM
only km
km
KM
KM MADE FOR EACH OTHER
GOOD NEWS
km love
mudivillaa thodakkam nam KM
km with lovely family
நடுவில்..கொஞ்சம்.. 5 வருட பக்கத்தை ..காணோம்...அதில்
நடுவில் கொஞ்சம் 5 வருட பக்கத்தை காணோம்..
KM
AFTER 5 YEARS
KM....KC
neeye thunai
km
kanakalam
KM LOVE
one and only KM
KM
only KM
KM LOVE
KM
KM
KM LOVE

KM

73 12 1
Por KathirvelanMullai

பாகம் 192...

ஜீவா ; ஏதோ சொல்ல வருவதற்குள்....

மீனா : அது... அதுவந்து... ஜீவாவின் கைப்பேசி உடைந்துவிட்டது... நாங்கள்

அதை சரி செய்வதற்காக ...மொபைல் சென்டரில் கொடுத்து இருக்கிறோம்...

கதிர்: அப்படியா எப்போ அண்ணா...,?

மீனா : இன்று காலையில்தான்... சரி ஜீவா வா... உனக்கு தலை வலிக்குது

என்று சொன்னியே ... நான் தைலம் தேய்த்து விடுகிறேன்.என்று

வலுக்கட்டாயமாக ஜீவாவை மீனா அழைத்துப் போக

ராஜாவை பார்த்த கதிர் .... ராஜா இதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று

இருவரும் தனக்கே உரிய மௌன பாஷையில் தன் கேள்விக்கான பதில்களை

மாற்றிக் கொண்டார்கள்...

முல்லை : சரி.... ராஜா நீ நேரத்தோடு மகாவை அழைத்துக்கொண்டு போய்

படு.... நாளை மகாவிற்கு மீண்டும் பரிசோதனை இருக்கிறது..என்று சொல்ல

ராஜாவும் ,மாகவும் தனது அறைக்குள் உறங்கச் சென்றார்கள்...

பார்வதி, முருகன், லட்சுமி, அவர்கள் மூவரும் நாங்களும் உறங்க

செல்கிறேன்... என்று சொல்லி அவரவர் அறைகளுக்கு செல்ல...

இரவு 10 மணி அளவில்..... மூர்த்திக்கு... மீண்டும் கைபேசி மூலம் அழைப்பு

வர...

மூர்த்தி : ஹலோ யாரு..?

ஒருவன் v : நான் தான் அப்பொழுதே சொன்னேனே... என் குரலை நீ ஞாபகம்

வைத்துக்கொள்........ நான் உன்னை விரைவில் உன் வீட்டில் வந்து

சந்திப்பேன்........என்று...அதுவும் ஆதாரத்துடன் வருவேன்..........உன்னிடம்

இருப்பவள்....... என் மகள் என்ற ஆதாரத்துடன் ......

என்று V சொல்ல ....மூர்த்தி..பயந்து கொண்டு தனது போனை சுவிட்ச் ஆப்

செய்ய...

தனம் தன் வீட்டின் 6 செல்வங்களை கட்டி பிடித்து படுத்து கொண்டு

இருக்க......மூர்த்தி மனதில் பயம் சூழ்ந்து இருந்தது...

மறுபக்கம்....

தன் அறையில் ஜீவாவும், மீனாவும் எதுவும் பேசாமல் மனதில் அமைதியை

சுமந்துகொண்டு படுத்திருக்க... திடீரென்று மீனாவின் கைபேசி மணி ஒலித்தது

மீனா பதற்றத்துடன் கைபேசியை எடுத்து..பார்த்தவள்

மீனா : ஜீவா... ஜீவா.. இதோபார் நமக்கு வீடியோ வந்ததே... அந்த நம்பரில்

இருந்து தான் அழைப்பு வருகிறது...

ஜீவா : குடு நான் பேசுகிறேன்...

மீனா : வேண்டாம் ஜீவா ...நாம் எதையாவது பேசப்போய் ...

நாமே நம் தவறை ஒத்துக் கொண்டது போல் ஆகிவிடும்... ஆகையால் நாம்

இந்த கைப்பேசியை... உபயோகிக்காமல் இருப்பது தான் நல்லது.... நீ ...நாளை..

முதல் வேலையாக.... உனக்கு ஒரு சிம் கார்டும் ...எனக்கு ஒன்றும்

வாங்குகிற....... வலியையைப் பாரு ...

என்று மீனா சொல்ல ...ஜீவா அமைதியாக ...மனதில் பல குழப்பத்துடன்

படுத்து இருந்தார்...

மறுபக்கம்....

hallil ...கண்ணா.... ஒருபுறம் இருக்கையில் அமர்ந்திருக்க... அவன் எதிரில்

ராதா அமர்ந்துகொண்டு.... ராதாவின் கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க

....ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணன்.... அவளின்

அழகில் மயங்கி.... வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவனை

பார்த்த ......முல்லை

முல்லை : என்ன கண்ணா ...இன்னிக்கி" டியூப்லைட் "பிரகாசமாக ஏறிகிறது....

ராதா: ஏன் அக்கா... ஜோக் ஏதாவது மாத்தி இருக்கிறீர்களா....

என்று ராதா தன் வீட்டிலிருக்கும்.... டியூப் லைட்டை பார்த்து கேட்க.. .....

கண்ணனுக்கு புரிந்தது அண்ணி எதை பற்றி சொல்கிறாள் என்று

முல்லை : அப்புறம் ராதா... இருவரும் எங்கெல்லாம் சென்று வந்தீர்கள்...?

ராதா : அய்யோ அக்கா... அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள் ....இவர் வா

நாம் வெளியே போகலாம் என்று சொன்னவுடன்.... .....நானும் ஆசை

ஆசையாகக் கிளம்பினேன்... இவர் என்னை எங்கு அழைத்துச் சென்றார்

தெரியுமா....?

கதிர்: என்ன கண்ணா அப்படி எங்கே அழைத்துச் சென்ற ... ராதா உன்னை

இவ்வளவு கொள்ளும்..... விதமாக பார்க்கிறாள்...

ராதா : மாமா இவர் என்னை நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்

முல்லை: ( சிரித்துக்கொண்ட) என்ன லைப்ரரி கா...?

ராதா :அக்கா அந்த கொடுமையை ஏன் கேட்கிறீர்கள் ...லைப்ரரிக்கு தான்

அழைத்து சென்றார்... ஏற்கனவே எங்களின் படுக்கை அறையை லைப்ரரி

போல அமைதியாக தான் இருக்கும்........... நாங்கள் இருவரும் ஜோடியாக

போய்....... அதே லைப்ரேரியில் அமைதியாகத்தான்...... அமர்ந்து

இருந்தோம்..........நான் வீட்டிலிருந்து இருந்தாலாவது........ சிறிது நேரம் தூங்கி

எழுந்து இருந்து இருப்பேன் இவர் பேச்சைக் கேட்டு வெளியே போனேன்

பாருங்கள் ..என்னை சொல்லவேண்டும்..சரி அக்கா எனக்கு தூக்கம் வருகிறது

...நான் போய் படிக்கிறேன்...கதிர் மாமா நாளை பார்ப்போம்...அக்கா குட் நைட் ...

என்று சொல்லி...

கண்ணனை பார்த்து முறைத்து விட்டு ராதா தனது அறைக்குள் சென்றாள்....

முல்லையும் ,கதிரும் ,கண்ணனைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டு......

சரிடா நீயும் போய் படு... என்று சொல்லி இவர்கள் இருவரும் தனது அறைக்கு

கிளம்ப....

கண்ணன் ஒரு வித மயக்கத்தொடு.. தனது அறைக்குள் போனவன். ராதா

தனது கட்டிலில் படுத்து இருந்த அழகை ரசித்தவாறு அவள் அருகில் அமர்ந்து

கண்ணா :(ஒரு தாளில்)

ராதா நமக்கு திருமணம் ஆன இத்தனை வருடத்தில்... உன்னை இன்று தான்

நான் முதன் முதலில் ரசிக்கத் தொடங்கி இருக்கிறேன்... இந்த முதல் நாள்

வலியே இவ்வளவு சுகமாக இருக்க...... நீ என்னை காதலித்த........ அந்த

கணத்தில் இருந்து ....என்னை மனதில் சுமந்து கொண்டு இருக்கிறாயே....உன்

காதல் சுகமானதா ...இல்லை சுமையானதா...?

என்று தனக்குள்ளே ......கவிதை என்ற பெயரில் ஏதேதோ எழுதிக் கொண்டு

இருந்தவனை...

பார்த்த ராதா திடீர் என்று எழுந்து அமர்ந்தவள்....

ராதா : கண்ணா என்ன எழுதிக் கொண்டு இருக்கிற... காட்டு பார்ப்போம்...?

கண்ணா : அது ஒன்னுமில்லை நான்... நான் .. கணக்கு.. எழுதிக்

கொண்டிருக்கிறேன்..

ராதா : என்ன கணக்கு எழுதிக் கொண்டிருக்கிற...,?

கண்ணா : அது வந்து... உன்னை வெளியே அழைத்துக்கொண்டு போனேன்

இல்லையா... என்ன செலவு ஆனது என்று எழுதிக் கொண்டிருக்கிறேன்...

ராதா : என்ன விளையாடுறியா.. அஞ்சு காசு கூட உனக்கு செலவு இல்லை... நீ

வேறு ஏதோ எழுதுகிற... குடு என்னிடம்... நான் பார்க்கிறேன்...

என்று கண்ணன் கையில் இருந்து ராதா அந்த தாளை வாங்க முயல ...

கண்ணன் : நான் தரமாட்டேன்... இது என்னுடையது... அடுத்தவர்களின்

ரகசியத்தை படிக்கக் கூடாது...

ராதா : நான் ஒன்னும் "அடுத்தவரின்" ரகசியத்தை படிக்கவில்லை ...

"என் அவரின்"..ரகசியத்தை தான் ...என்ன என்று..... தெரிந்துகொள்ள

ஆசைப்படுகிறேன்...

கண்ணா : அது என்ன என்னவர்..?

ராதா :MMMMM....ஒண்ணும் தெரியாத ..பாப்பா...தான் நீ......சரி....பேச்சை

மத்தாதே..... கண்ணா... ஒழுங்கு மரியாதையா ...நீ... என்ன எழுதியிருக்கிற

என்று என்னிடம் இப்போ காட்டிவிடு.. இல்லை என்றால் அவ்வளவுதான்...

கண்ணா : ஏய்... என்ன... மிரட்டுர.....நான் பார்க்கத்தான் சின்னப்பையன்...

என்னை இந்த மாதிரி எல்லாம் மிரட்டின.. என்றால்... ஓங்கி உன் கன்னத்தில்

ஒன்று வைத்து விடுவேன்....

ராதா : முதலில்... நீ... என் கன்னத்தைத் தொட்டு .."அப்புறம் நீ...

வைக்கிறியா... இல்லை தொப்புன்னு "விலுறியா" என்று நானும் பார்க்கிறேன்...

கண்ணா : ( மனதிற்குள்) என்ன அவமானம்... அவள் கண்ணத்தை தொடக்

கூட .....நாம் லாயக்கு இல்லை ...என்பதை சொல்லாமல்... சொல்லிக்

காட்டுகிறா..

ராதா ........ தான் அணிந்திருந்த நைட்டியை ......இழுத்து... இடுப்பில் கட்டிக்

கொண்டு...ராதாவின் ஒரு கைகளால்.... கண்ணனின் ஒரு கைகளை பிடித்துக்

கொண்டு..அவளின்...மற்றொரு கைகளால் கண்ணன் மறைத்து வைத்திருக்கும்

தாளை வாங்க முயல .............

கண்ணன் தடுமாறி தனது கட்டிலில் மேல் விழ....ராதா ...தண்ணினலை

இழந்து... கண்ணனின் மேல் விழ....ராதாவின் தேகத்தை தாங்கிய கண்ணன்

அவள் பார்வையால் தன்னை மறக்க.....கண்ணனின் பார்வையால் ராதா

அவள் மனதை இழக்க......

அறை முழுவதும் அடுத்து என்ன நடக்கப் போகிறது... என்று பார்க்க

........."சுவற்றுக்கும் கண்கள் திறக்க"....

கண்ணனின்...... வலது கையில் ராதாவின்........ இடது கையின்..........

10விரல்கள் பின்ன..கண்ணன் .......தன் இடது கையில் வைத்து இருந்த அந்த

தாளை............. தன்னை மறந்து கிழே பொட....ராதாவின் வலது கை.........

கண்ணனின் இடது கையை பிண்ணிகொள்ள..... தேட......கண்ணன் இதழும்

ராதாவின் இதழும்........... ஒன்றாக சேர ....வரும் நேரத்தில் ..............

ராதாவின் கைபேசி மணி அடிக்க...ராதாவும்.கண்ணாவும். ........

சுயநினைவிற்கு வந்த வர்கள்..........

திடுக்கிட்டு கண்ணனின் மேலிருந்து.... ராதா எழுந்து..தன் ஆடைகளை சரி

செய்து கொண்டு ....வெட்கத்தோடு தன் கைப்பேசியை எடுக்க..கைப்பேசியில்

ராதாவின் அம்மா ஜானகி ....ராதா... கண்ணனை காதல் பார்வையால்

சுட்டுவிட்டு..... அவள் இதழை........ தன் விரல்களால் துடைத்தவாறு

தன் அம்மாவின் அழைப்புக்கு பதில் கொடுத்தவள்...

கண்ணா : ( கட்டிலிலிருந்து பொறுமையாக எழுந்தவன் மனதிற்குள்).. எப்பா

என்ன கண்ணு இவளுக்கு...இந்த இதழ்களுக்கு ......இந்நேரம் நான் அடிமை ஆகி

இருந்து இருப்பேன்.....கண்ணா நம் விரதம் இவள் அருகில் இருந்தால்

கெட்டுவிடும்...நம்ம எஸ்கேப் ஆகி விடுவோம் என்று வெளியே போக....

பாகம் 193....

மறுபக்கம்......

தனது அறையில் கதிரும் முல்லையும் அமர்ந்து இருந்தவர்கள்............

கதிர் : முல்லை வா ....காத்தாட போய் பால்கனியில் நிற்போம் .........

என்று சொல்லி முல்லையை அழைத்து கொண்டு போய் பலகணியில்

நின்றவர்........

முல்லை ; என்னங்க ஒரே யோசனையாக இருக்கிறீர்கள்...?

கதிர் : இல்லை முல்லை.... ஜீவா அண்ணனிடம் ஏதோ பெரிய மாற்றம்

தெரிகிறது....அவர் ஏதோ ஒன்று சொல்ல வருகிறார் ...ஆனால் அவங்க அதை

சொல்ல விடமாட்டாங்க... என்ன பிரச்சினையாக இருக்கும் என்று தான்

யோசிக்கிறேன்

முல்லை: அப்பவே கவின் சொன்னார் இல்ல.... இந்த ஜீவா மாமாவின்

கைப்பேசியின் எண்ணில் எங்கு இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று

பார்த்து.... அதை வைத்து நீங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையா...?

கதிர்: இல்லை ....முல்லை அந்த சிம் கார்டு..... இப்போது வேலையே

செய்யவில்லை...

முல்லை : விடை இல்லாத கேள்வி இருக்கும் கேள்வி இல்லாத விடை

இருக்காது...உங்களுக்கு தேவை விடையா, இல்லை கேள்வியா ..?

கதிர் :mmm..அதை தான் நானும் யோசிக்கிறேன்...... முல்லை அங்கே பார் அது

கண்ணன் தானே....,?

முல்லை : ஆமாங்க அவனேதான்... இவன் ஏன் இந்த நேரத்தில் தோட்டத்தில்

நின்று கொண்டிருக்கிறான்...

கதிர்: சரி வா போய் பார்ப்போம்...இவன்.... என்ன புது பிரச்சனை இழுத்துக்

கொண்டு வந்திருக்கிறான் என்று தெரியவில்லையே ....?

என்று சொல்லி முல்லையும், கதிரும்,,.......... கண்ணனை தன் தோட்டத்திற்கு

சென்று..... பார்க்க

கண்ணன் கைகளில் வண்ணப் பூக்களை வைத்துக் கொண்டு.... அந்தப்

பூக்களின் நடுவில் ராதாவின் உருவத்தை... தன் கண்களால் பார்த்து...

ரசித்துக்கொண்டிருக்க... கண்ணின் பின்புறம் வந்து அவன் தலையில் தட்டிய

கதிர்....

கதிர்: கண்ணா அறையில் உன் மனைவி வண்ண பூங்கொத்தாக இருக்க...

இந்த ஒத்த மலரைக்... கையில் வைத்து சுற்றி கொண்டிருக்கிறாயே

...உனக்கு அறிவு இருக்கிறதா...,?

முல்லை : அவன் உங்களின் தம்பியாச்சே ... ! "அவனாவது ஒற்றை மலரை

வைத்துக்கொண்டுதான் சுற்றிக் கொண்டிருக்கிறான்".... "நீங்கள்

திருமணமான ஒரு வருட காலம் ...கையில் "சொம்பைக் "தானே வைத்துக்

கொண்டு இருந்தீர்கள்".....

கதிர் : ஏய் என்ன நக்கலா... மாமன் ஒரு வருடம் சும்மா இருந்தாலும்...

ஒன்றுக்கு நாலாக உனக்கு பரிசளித்தேன் பார்த்த இல்ல...,?

முல்லை : பார்த்தேன் ..பார்த்தேன்... "இப்போ நம் சரித்திரம் ...

இவனுக்கு எதற்கு" ..."இந்த தரித்திரம் ஏன் இப்படி...இருக்கு என்று கேளுங்கள்"

கண்ணா : ஹலோ என்ன ... "உங்க காதல் சரித்திரம்" ...."என் காதல்

தரித்திரமா."..?

முல்லை : ஏய் உன் காதல் தரித்திரம் என்று நான் சொல்லவில்லை.... உன்னை

தான் சொன்னேன்.... என்னடா உனக்கு பிரச்சனை.... ஏன் இப்படி மூஞ்ச

வச்சிக்கிட்டு இருக்க....,?

கதிர் : ஏன்டா போயும்... போயும் ... முதல் முதலில் அவளை அழைத்து

கொண்டு வெளியே செல்கிற... லைப்ரரிக்கா அழைத்துப் போவ அறிவில்லை

உனக்கு..

கண்ணா: என்னை இப்படி எல்லாம் கேலி செய்யாதிங்க.... இன்று காலையில்

இருந்தே என் மனம் பாரமாக இருக்கிறது......... ஏதோ ஒரு சுமை........ என்

நெஞ்சில் சுமப்பது போல் இருக்கிறது ........எனக்கு இதற்கு முன்பு இப்படி

எல்லாம் தோன்றியதே இல்லை........

முல்லை: இதற்குப் பெயர்தான் டா காதல்........... அந்த காதல் உனக்கு

வந்துவிட்டது ....இனிமே "சுமையும் சுகமாகும்".... "சுகமும் சுமையாகும்"....

கதிர்: அய்யய்யோ கரடிக்கு காதலா...உலகம் ....தாங்கதே....?

கண்ணா : ஹலோ யாரை கரடி என்று சொல்கிறீர்கள்....?

கதிர் : உன்னை தான்டா...கரடி என்று சொன்னேன் ... இதுவரை நீ .....எத்தனை

பேர் காதலுக்கு கரடியாக இருந்து இருக்கிறாய் என்று உனக்கு தெரியுமா....?

கணவன், மனைவி நிம்மதியாக பேசலாம் என்று இருக்கும் பொழுது ....கரடி...

போல் உன் வாயை வைத்துக்கொண்டு அவர்கள் நடுவில் ...."சந்தில் சிந்து

பாடுவ" இல்ல..... இப்போ உன் காதலுக்கு...ஒரு.. பிரச்சனை வந்து விட்டது

பார்த்தியா ..,?

கண்ணா : உண்மைதான் ஆனா எனக்கு என்ன செய்வது என்றே

தெரியவில்லை

முல்லை : கண்ணா ....ராதா உன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள்

...என்னதான் இருந்தாலும் அவளும் ஒரு பெண்.... எந்தப் பெண்ணும் தன்

வெட்கத்தை விட்டுச் எதையும் சொல்ல மாட்டா...

கதிர் : ஆமாம் ..ஆமாம் ..சொல்ல மாட்டாள்... ஆனால் அதை அனைத்தையும்...

நாமே புரிந்து கொண்டு..அல்வாவும்...பூவும் ..வாங்கி வந்தாலும் ..இவலுங்க

..போய். ஓய்யராமக.....வேறு இடத்தில் படுத்து...கொண்டு....குறட்டை விட்டு

தூங்கி விடுவார்கள்...அப்புறம்.... நாமே கிட்ட போனாலும்... நம்மை ஒரு

முறை... முறை பாங்க.. பாரு... உன் அண்ணியும் இப்படி தான்...

முல்லை : ஏங்க...நம்ம கதையும்... இவங்க கதையும் ஒண்ணா ...நீங்க கொஞ்சம்

சும்மா இருக்கிறீர்களா...

கதிர் : சரி... நீ.. சொன்னா சும்மா தானே இருந்தாகணும்...

முல்லை : கண்ணா... முதலில் நீ ராதாவிடம் மனம் விட்டு பேசு...

கதிர் : ஆமாம் ...கண்ணா திருமணம் ஆன கையோடு பிள்ளை குட்டி பெற்று

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்றெல்லாம் நினைக்காதே ....

"காதல் திருமணமும் சரி" ..."பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமும்

சரி" ... "முதலில் நமக்கு அந்த திருமணத்தில் காதல் இருக்க வேண்டும்"....

முதலில் நீயும்... ராதாவும் ஒருவர் மேல் ...ஒருவர்... வைத்திருக்கும்

காதலை உணருங்கள்,.... அதன்... பின்பு மனதால் ஒன்று சேருங்கள் ....

பின்பு உங்கள் இருவருக்குள் புரிதல் வரும்பொழுது....

உடலால் ஒன்று சேருங்கள்..... நீங்களும் ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள்

ஆகுங்கள் அதற்கு முன்பு ஊர் என்ன சொல்லுமோ....,? உலகம் என்ன

சொல்லுமோ....? என்று பிள்ளையைப் பெற்றுக் கொண்டு.... மனம்

ஒத்துப்போகாமல் வாழாதீர்கள்..... அது உங்களுக்கும் நல்லது இல்லை....

உங்களுக்கு பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கும் நல்லதில்லை......

முல்லை : உன் அண்ணன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை கண்ணா....

பெரியவர்கள் கட்டிவைத்து விட்டார்கள்.... என்று கடமைக்கு வாழும் ..கணவன்

மனைவி ...ஒரு சில காலம் கழித்து... அவர்கள் திருமணத்தில் காதல் இல்லை

என்பதை உணர்ந்து... கடமைக்கு என்று வாழ தொடங்குவார்கள்... அது

அவர்களுக்கும் நிம்மதி கொடுக்காது... அவர்கள் பிள்ளைக்கும் நிம்மதி

கொடுக்காது... திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆனால் என்ன...

உடலால் ஒன்று சேர்வது மட்டுமே திருமணம் இல்லை.....

உள்ளத்தாலும் ஒன்று சேர வேண்டும்.... ஆகையால் முதலில் நீ மனதார

ராதாவை நேசிக்க தொடங்கு .... அவள் காதலை நீ புரிந்து கொள்...............

உன் காதலை அவளுக்கு புரிய வை.........

கதிர் : ஆமாம் கண்ணா.. ." ஈருடல் ஓருயிர்" என்பது மஞ்சத்தின் மேல் பங்கு

போடும் வாழ்க்கை அல்ல"... உன் மனதில் அவளையும்... அவள் மனதில்

உன்னையும் சுமப்பது தான்........ அந்த சொல்லுக்கு உண்மையான அர்த்தம்....

அதை சுமை என்று கூட சொல்ல கூடாது... அது ஒரு சுகம்... அந்த சுகத்தை

என்று .....நீ மனதார அனுபவிக்க தயார் ஆகிரையோ ........ அன்று தான் உனக்கும்

ஒரு உண்மையான காதல் கிடைக்கும் ...

முல்லை : ராதா ரொம்ப.. ரொம்ப.. நல்ல பெண் ..மற்றவர் கண்ணுக்கு நீ

அதிகப்பிரசங்கித்தனம் ஆனவன்.....கரடி......... ,அவசரக்குடுக்கை.......,

டியூப்லைட்........., இப்படி எல்லாம் தான்... தெரிந்தவன்...

ஆனால் உன்னை விரும்பி ...உனக்காக தன்... ஆடம்பர வாழ்க்கையை

அனைத்தையும் துறந்து... நம் வீட்டில் வந்து வாழ வேண்டும் என்று

ஆசைப்பட்டால் ........ அவள் மனதிற்கு ஏற்றது போல்... இன்று நாம்

கோடீஸ்வரர்களாக தான் வாழ்கிறோம்... இருப்பினும் அவள் ...

ஒரு பாத்திரத்தை கையில் வைத்து தனக்குப் பிச்சை இடுங்கள் என்று கேட்கும்

சிலரை போலத்தான்.... உன் அன்புக்காக அவள் மனதை ஏந்திக் கொண்டு

இருக்கிறா...

அவளின் அன்பெனும் பாத்திரத்தை உன் காதல் என்னும் மனதால் நீ

நிரப்பினால் தான் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்....

கதிர் : டேய் உனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்.... அண்ணனை கேல்...

காதல், கல்யாணம்... இரண்டிலும்... இல்லையில்லை.. பிள்ளை குட்டிகள்..

இவை மூன்றிலும்...நான்காக.... தேர்ச்சி பெற்றவன் உன் அண்ணன்...

கண்ணன் : குழம்பி இருந்த என் மனது தெளிவடைந்து... இந்த நிமிடத்திலிருந்து

நான் ராதாவை... முதலில் என் காதலியாக பார்க்க தொடங்குகிறேன்...

அவளை மனம் உருகி காதலிக்கிறேன்.... என் மனதில் முழுதாக அவளை

ஏற்றுக் கொள்கிறேன்... பிறகு எங்கள் திருமண வாழ்க்கையை நாங்கள்

ஆரம்பிக்கிறோம்... உனக்கு ரொம்ப நன்றிடா அண்ணா ...

,

என்று கதிரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த கண்ணனை .... பின் தலையில்

அடித்த முல்லை ....

முல்லை : வாடா ... போடா... என்று சொன்னின்னா ... வாயை கிழித்து

விடுவேன்... போடா.. போ.. போயி ...ராதா கூட வாழ வழியை பாரு...

என்று சொல்ல கண்ணன் சிரித்துக் கொண்டே தனது அறைக்குப் போக...

முல்லை : என்னங்க இவன்... திருமணமாகி இத்தனை வருட காலம் கழித்தும்...

தன் மனைவியிடம் காதல் சொல்ல.. கூச்சப்படும் இவன்....... உங்களைவிட

சுத்த டியூப்லைட் போல....?

கதிர் : ஏய்... உன் மாமன் டியூப்லைட் இல்லையடி .அந்த.....சூரியன்...

நீ ...விளக்கை அனைத்து விட்டால் tube light எரியாது.அனால் நான்........ இந்த......

கதிர் ...சூரியனை போல....... என்னை யாராலும் மறைத்து வைக்க முடியாது ...

முல்லை : இந்த சூரியனை மறைக்கும் யுக்த்திஎன்ன என்று எனக்கு மட்டும்

தான் தெரியும் ...

கதிர் : சரி வா இந்த சூரியனை உன் முந்தானையால் மறைக்கும் நேரம் வந்து

விட்டது .....என்று சொல்லி கதிரும் முல்லையும் தனது அறைக்குள் போக

கண்ணனுக்கு இன்று தன் மனைவி ராதாவின் மேல் காதல் மலர்ந்தது

பாகம்..194

காலை பொழுது புலர்ந்தது...கண்ணன், ராதா இருவரின் அறையில்..தன்

கட்டிலின் மேல் கண்ணன் உறங்கி கொண்டு இருக்க... விடியற்காலையில்

எழுந்து தலை முழுகி.....பட்டுடுத்தி..வட்ட பொட்டு இட்டு.....தனது

அறையில் அங்கும் இங்குமாக தனது சலாங்கை அணிந்த கால்களை

கொண்டு ராதா. நடந்து கொண்டு இருக்க....ராதாவின் கொலுசு ஒலியில்....

எழுந்த சங்கீதத்தில்...கண் விழித்த கண்ணன் ராதாவின் அழகில் தன்னை

மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்ததை பார்த்த ராதா....... தன் வில்

போன்ற புருவத்தை தூக்கி..என்ன என்று கேட்க....

கண்ணா : என்ன...ஒண்ணும் இல்லையே...

ராதா : அப்புறம் என்ன...புதுசா பார்க்கிற மாதிரி அப்படி பார்க்கிற...?

கண்ணா : எல்லாம் புதுசா தானே இருக்கு...

ராதா : புரில....என்ன சொல்ற...?

கண்ணா : ஒனும் இல்லையே...ஒண்ணுமே இல்லை...

ராதா : அது தான் எனக்கே தெரியுமே...ஒண்ணும் இல்லை தான்..

கண்ணா : ஏய்...என்ன சொல்ற நீ.. ஏதோ இரண்டு அர்த்தத்தில் பேசுவது

போல இருக்கு..?

ராதா : நான் ஒண்ணும் பேசலை..நீ.... போய் குளித்து விட்டு வா...உனக்கு

வேலை இருக்கு...

கண்ணா : எனக்கு வேலை...என்ன..இருக்கு..?

ராதா : நேற்று இரவு என் அம்மா போன் பண்ணார்களே நினைவு இருக்கா..?

கண்ணா : (தன் இதழ்களை தடவிக்கொண்டு) இருக்கு.. இருக்கு...நல்லா

நினைவு இருக்கு...என் கர்ப்பை காப்பாற்றிய தருணம் தானே...

ராதா : என்ன சொன்னீங்க..?என்ன நீங்க நேற்றில் இருந்து உங்கள்

மனசுக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டு இருக்கீங்க...?

கண்ணா : நேற்று தான் எனக்கு மனசுண்ணு .....ஒன்று இருப்பதே எனக்கு

தெரிய வந்தது.......

ராதா : என்னமோ...உலருறிங்க..சரி..... அதை விடுங்க...நேற்று அம்மா......

ஃபோன் செய்து இன்று( """"""""" )கால நேரத்தில்.வீட்டில் இருக்கும் எல்லா

திசையிலும்......... விளக்கேற்றி வைத்தாள் நல்லது என்று சொன்னார்கள்...

கண்ணா : அதற்கு நான் ஏன் குளிக்க வேண்டும்...?

ராதா : வீட்டில் கணவன்.... மனைவி.. இருவரும் சேர்ந்து விளக்கேற்றினால்

தான் நல்லதாம்........நம் வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த நேரத்தில்

கடைக்கு போய்விடுவார்கள் தானே....அதனால் தான் நீங்களும்.... நானும்....

சேர்ந்து விளக்கேற்றி சாமியை வணங்குவோம் என்று நினைத்தேன்......

கண்ணா : ஓ...இதற்கு பேர் தான் வீட்டில் விளக்கேற்ற ஒரு மருமகள்

வேண்டும் என்பார்கள் போல.......

ராதா : நான் இந்த வீட்டில் .......வந்து.... மருமகளாக விளக்கேற்றி இரண்டு

வருடம் ஆகிவிட்டது.......ஆனால் உங்கள் மனதில் தான் எந்த வெளிச்சமும்

தெரிய மாட்டுது.......

கண்ணா : இனிமே பிரகாசமாய் தெரியும்...கவலை படாதே..

ராதா : என்ன சொன்னீங்க...?

கண்ணா : நான் குளிக்க போறேன் என்று சொன்னேன்

ராதா : போங்க போய் முதலில் அதை செய்யுங்கள்...

கண்ணா : நீ என்ன என்னை பேர் சொல்லியும்.. அழைக்கிற.....அப்புறம்

வாங்க போங்க..என்று அழைக்கிற..

ராதா : என் வாய் என் இஷ்டம் ...நான் எப்படி வேண்டுமென்றாலும்

அழைப்பேன் ....புரிகிறதா போங்க போய் குளிங்க

கண்ணா : அய்யோ போறேன்... வாய்தானே அதைப் பற்றி மட்டும் பேசாதே

ராதா: டேய் போடா ...குளித்துவிட்டு வா.... என்று சொன்னால்...

தேவையில்லாத கதையை பேசிக்கிட்டு இருக்க....

கண்ணா : (முணுமுணுக்க ) கண்ணா இன்னும் மரியாதை செய்வதற்கு

முன் ஒழுங்காக குளித்து விட்டு வந்து விடலாம்....

என்று சொல்லி கண்ணன் குளிக்க தனது அறைக்குள் போக.... ராதா

கண்ணனின் திடீர் மாற்றத்தை.... மனதளவில் ரசித்து.... பூரித்துப் போய்...

தான் அம்மா ராவு கால பூதுசை செய்யும் போது.... வீட்டில் விளக்கு ஏற்றி

வைத்தால் ...குடும்பம் நன்றாக இருக்கும்... என்று சொன்னதால் ...அதற்கு

உண்டான வேலைகளை செய்ய.....

மறுபக்கம் காலை 9 மணி அளவில் கதிர் முல்லை அறையில் ...

கதிர் : முல்லை இன்று நான் முக்கியமான விஷயமாக வெளியே செல்ல

வேண்டியது இருக்கு.... நான் வர எப்படியும் இரவாகி விடும் ....வீட்டில்

இருப்பவர்கள்... நான் எங்கே என்று கேட்டால்..... கடையில் தான்

இருக்கிறேன் என்று சொல்லிவிடு ....

முல்லை : உங்களுக்கு யாரேனும் போன் செய்தாள்..?

கதிர் : நான் என் கைபேசியை இங்கேயே வைத்து விட்டுப் போகிறேன்.....

எனக்கு வேறு ஒரு கைபேசி இருக்கிறது என்று உனக்கு தெரியும்

இல்லையா.... எது ஒன்று என்றாலும்...... அந்த எண்ணில் என்னை அழைக்க

மறந்து விடாதே.....

முல்லை : சரி நான் பார்த்துக்கொள்கிறேன் ...

கதிர் : வீட்டில் பிள்ளைகள் ஜாக்கிரதை..... நம் வீட்டில் இப்போதெல்லாம்

என்ன என்னவோ நடக்கிறது.... எனக்கு ஒன்றும் புரியவில்லை....

இருப்பினும் எனக்கு என்னவோ..... அந்த விக்டரின் வேலையாகத்தான்...

இது எல்லாம் இருக்கும்.... என்று தோன்றுகிறது.... ஆகையால் நம்

குடும்பத்தினர் மீது ஒரு கண்ணை வைக்கத்தான் வேண்டும்....

முல்லை : நீங்கள் சொல்வதும் சரிதான் ...எனக்கும் ஜீவா அத்தான்...

மீனாவின் நடவடிக்கை மீது இரண்டு நாட்களாகவே சந்தேகமாகவே

இருக்கின்றது..... ஆகையால் அவர்களின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன

காரணம் என்று நீங்கள் கண்டுபிடியுங்கள்..... சரி இப்போ கடையில் நீங்கள்

இல்லை என்று யாரேனும் சொல்லி விட்டால் என்ன செய்வது..?

கதிர் : அந்த சமயத்தில் அவர்கள்.... கேட்டால் இப்போதுதான் நான்

வெளியே சென்று உள்ளேன்.... என்று நாம் கடையில் பணிபுரியும் சரவணன்

சொல்லிவிடுவான் .... நீ அதைப் பற்றி கவலைப்படாதே ....சரி நான்

கிளம்புகிறேன் ...எதர்க்கும் நீ வீட்டில் இருப்பவர்கள் மீது கொஞ்சம்

விழிப்புடன் இரு.....

முல்லை :ஏன் நமக்கு இப்படி எல்லாம் நடக்கிறது ...சிறிது காலம் கூட நாம்

நிம்மதியாக இருக்க முடியவில்லை.... ஒன்று போனால்... ஒரு பிரச்சனை

வந்து கொண்டே இருக்கிறது... அதே மாதிரிதான் மூர்த்தி மாமாவும்...

நேற்றிலிருந்து ஏதோ ஒரு யோசனையிலேயே இருக்கிறார்.... நாம் நேற்று

அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது கூட

அவருக்கு இரண்டு முறை போன் வர..அவர் அந்த போனை பார்த்து

அஞ்சியது போல தெரிந்தது.....

கதிர் : இது ....என்னடி புது பிரச்சனை ...என்ன சொல்ற உண்மையாகவா....?

முல்லை : ஆமாங்க.... நீங்க கவனிக்கல .....? நான் கவனித்தேன்..... அவர்

எப்பொழுதும் முதலில் வந்து சாப்பிட அமர்ந்து...... நம்மை எல்லாம்

அழைப்பார்..... ஆனால் நேற்று நேரம் ஆகியும்... தனம் அக்கா மூர்த்தி

மாமாவை அழைக்க போக ....அவர் ஏதோ ஒரு கவலையுடன் தான் .....வந்து

இரவு உணவை சாப்பிட அமர்ந்தார்.... அவர் அமர்ந்த அந்த சமயத்தில்

...இரண்டு மூன்று தடவை ...அவருக்கு போன் வர அவர் அந்த போனை

எடுக்கவில்லை.....

கதிர்: அப்படியா.....? அப்போ அன்று அந்த விக்டர் உனக்கு எந்த ரூபத்தில்

பிரச்சனை வரும் என்றே தெரியாது பார் ..... என்று சொன்னானே ...

அதற்குண்டான வேலையாக இருக்குமோ இதெல்லாம்...,?

முல்லை ஆமாங்க... கண்டிப்பா.... அவன் வேலையாகத்தான் இருக்கும்...

இதற்கு நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்ல வா..,?

கதிர் : நீ சொல்லி .......எது தானடி....... நடக்காமல் போனது... சொல்லு

என்ன.....,?

முல்லை : இது சரிப்பட்டு வருமா என்று யோசித்துப் பாருங்கள்...? ஆனால்

இதனால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது...என்று முல்லை

ஒரு திட்டத்தை சொல்ல..

கதிர்: ( முல்லையை) கட்டிப்பிடித்துக் கொண்டு...... எனக்கேற்ற பெண்...

இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.... என் மனதில்

இருப்பதை நீயும்....உன் மனதில் இருப்பதை நானும் .....உணரும்

வாழ்க்கைக்கு பெயர்தான் திருமண பந்தம்....

நீ சொல்லும் இந்த திட்டமே ...நமக்கு தேவையான அனைத்து

கேள்விகளுக்கான விடையை கொடுக்கும் ....சரி நான் பார்த்துக்

கொள்கிறேன்... நீ ஜாக்கிரதையாக இரு....

என்று சொல்லி விட்டு கதிர் வெளியே போக ....முல்லை கதிரின் மேல்

கோபத்துடன் கட்டிலின் மேல் அமர்ந்தவள் .....வெளியே போன கதிர்

திரும்பி வந்து முல்லையை கட்டிப்பிடித்து ..தன் இதழ்களால் அவள்

இதழ்களுக்கு பரிசளித்து...

கதிர்: என்ன.....? மாமா உனக்கு முத்தம் கொடுக்காமல் போய்விட்டேன்

என்று தானே கவலைப்பட்ட....? பார்த்தியா நான் என்னதான் மறந்து

வெளியே போனாலும்..உன் காந்த இதழ் .... இந்த இரும்பு மனதை இழுத்து

விடுகிறது....

என்று சொல்ல.... முல்லை சிரித்துக்கொண்டு.... கதிரை கட்டிப் பிடித்து

.....அவளின் பரிசையும் இதழ்களாலே கதிருக்கு கொடுத்து வழி

அனுப்பி வைக்க.....

நேரம் மதியம் பதினோரு மணி அளவில் .....வீட்டில் இருக்கும் அனைத்து

திசைகளிலும் விளக்குகள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க.... கண்ணன்

ஒரு மூலையிலும்.... ராதா ஒரு மூலையிலும்... விளக்கேற்றி வைத்து...

அந்த வீட்டையே ஒளி மயமாக ஆக்கிக் கொண்டு இருக்க....

முல்லை: என்ன ராதா ....அம்மா சொன்ன மாதிரி ..புருஷனும்

பொண்டாட்டியும் வீட்டை ... முழுவதுமாக விளக்கில் அலங்கரித்துக்

கொண்டு இருக்கிறீர்களா.....? நல்லது... நல்லது...

தனம் : முல்லை ...மதியம் யாருக்கும் கடைக்கு சாப்பாடு வேண்டாம் என்று

சொல்லிவிட்டார்கள்... ஆகையால் நமக்கு மட்டும் தான் மதிய உணவு

...மீனா இன்னும் அவள் அறையை விட்டு வரவில்லை... ஜீவா

காலையிலேயே அலுவலக வேலையாக வெளியே சென்றுவிட்டான்

....அத்தையும், சித்தியும் செல்வம் அண்ணன் காரில்..... பசங்களுக்கு காது

குத்தி மொட்டை போடும் விஷயமாக நம் குடும்ப ஜோசியரை பார்த்து

விட்டு அப்படியே....ஒரு நாள் முழுவதுமாக ....எல்லா கோயில்களுக்கும்

சென்று வருகிறேன்... என்று கிளம்பி விட்டார்கள்... ஆகையால் இப்பொழுது

வீட்டில்.... நீ, மீனா, கண்ணா, ராதா,மகா ,ராஜா .... மட்டும் தான் ....

முல்லை : நீங்க ... மகா உடன் மருத்துவமனை போக வேண்டும் என்று

சொண்ணிங்களே..?

தனம் : அமாம்...நானும் ,ராஜாவும், மகாவின் பரிசோதனைக்காக...

மருத்துவமனைக்கு செல்கிறோம்.. வருவதற்கு எப்படியும் மாலை ஆகி

விடும் ....ஆகையால் நீ பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள் ...நான்

வெளியே கிளம்புவதை... பிள்ளைகள் பார்த்தால் அடம்பிடிப்பார்கள்...

ஆகையால்.... நான் தோட்டத்திற்கு போவது போல்..... போய்... வெளியே

கிளம்பி விடுகிறேன்.... ராஜாவையும், மகாவையும்.... அதேபோல வெளியே

வர சொல்லி விடு....

என்று சொல்லி தனம், ராஜா, மகா, மூவரும் .... மகாவின்

பரிசோதனைக்காக ....மருத்துவமனைக்கு செல்ல....

முல்லை : சரி....... ராதா ஜாக்கிரதை... பிள்ளைகள் யாரேனும் கையில்

நெருப்பைத் தொட்டு விடப்போகிறார்கள்... ஆகையால் நான் பிள்ளைகளை

அறையிலேயே வைத்து கொள்கிறேன்.... நீ ..கண்ணா மிக ஜாக்கிரதையாக

விளக்கை ஏற்றுங்கள்.......

ராதா : அக்கா ....மீனா அக்காவின் அறையிலும் ..விளக்கு ஏற்றவேண்டும்.......

முல்லை : ஐயோ அவகளிடம் நான் பேசமாட்டேன்..... வேண்டும் என்றால்...

இதோ உன் புருஷன் கண்ணன்.... அவனைப் பேச சொல்....

என்று சொல்லி.... முல்லை தனது அறைக்குள் ....பிள்ளைகளை பார்த்துக்

கொள்வதற்காக செல்ல....

கண்ணா : (மீனாவின் கதவைத் தட்டி)குட்டி அண்ணி ....கதவை திறங்கள்....

மீனா : என்ன கண்ணா.... என்ன வேணும்....?

கண்ணா : குட்டி அண்ணி ...ராதாவின் அம்மா... வீட்டை சுற்றி விளக்கேற்றி

வைத்தால்.... நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள்... ஆகையால்

...உங்கள் அறையிலும் விளக்கு ஏற்ற வேண்டும்.....

மீனா : ( ராதாவை முறைத்துக்கொண்ட) என்ன விளக்கு ஏற்றவேண்டு மா

.........குடு ..... நான் ஏற்றுகிறேன் ....

என்று சொல்லி 5 விளக்கை கையில் வாங்கிக் கொண்டு கதவை

இழுத்துச் சாத்தி கொள்ள ....

மறுபக்கம் கதிர் ,கவின்.....

கதிர் : மாப்பிள்ளை நான் உன்னை அந்த நாராயணனின் பிள்ளையைப்....

பற்றி விசாரிக்கச் சொன்னேன் இல்ல....என்ன ஆனது...?

கவின் : மாப்பிள்ளை அவனுக்கு பையன் இல்லையாம்.... ஒரே ஒரு

பொண்ணு தானாம் .அவுங்க பேர் கூட எதோ .... நிலா ....இல்லை இல்ல

நிலவேனி ....என்று சொன்னார்கள் அவளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது

......இப்பொழுது..கணவன் மனைவி... இரண்டு பேரும் வெளிநாட்டில்

செட்டில் ஆகிவிட்டார்கள்...... என்று சொன்னார்கள் ......

கதிர் : நிலவேனி... இந்த பெயரை எங்கோ கேட்டது போல இருக்கே.....

கவின் :சரி ... விக்கி என்ன ஆனான் ... நீ அவனைப் பற்றி தானே

விசாரிக்க....போன ....?

கதிர் : அவனுக்கு திருமணம் முடிந்து ...அவன் ஆளே மாறி விட்டானாம் ....

ஏதோ ஒரு ஊரில் பெரிய தாதாவாக இருக்கிறான்.... என்று சொன்னார்கள்

...அந்த ஊரு கூட சென்னையில் அருகாமையில் தான்......இருக்காம் ....

அவனையும் போய் நாம் ஒருநாள் நேரில் சந்திக்கவேண்டும்.......

கவின் : மாப்பிள்ளை யாராக இருக்கும் டா...இந்த விக்டர் ....?

கதிர் :எனக்கும் அதே யோசனை தான்... வீட்டில் இப்போது மூர்த்தி

அண்ணன்.... ஜீவா அண்ணன் இருவருமே.. நடந்து கொள்ளும்

விதமே..வேறு.. சரியில்லை ...ஆகையால் முல்லை எனக்கு ஒரு திட்டம்

சொன்னால்... அதை போல் நடந்து கொண்டால்தான் ..நாம் எல்லா

குழப்பத்திற்கும்... ஒரு விடையை கண்டுபிடிக்க முடியும் ......

கவின் : என்ன திட்டம் மாப்பிள்ளை அது ....?

என்று கவின் கேட்க ... கதிர் அந்தத் திட்டத்தை சொல்ல ....

கவின் : இந்த திட்டத்தை நாம் நமது கணிப்பொறி மூலமே

கண்டுபிடிக்கலாம்.... ஆனால் அதற்கும் ஒரு டாக்குமென்ட் ரொம்ப

முக்கியம்.... அந்த டாக்குமெண்ட் உன்னிடம்தான் இருக்கின்றது.....

கதிர் : சரி இரு நான் முல்லையிடம் ...அதை கைபேசியில் போட்டோ

எடுத்து அனுப்பு செல்கிறேன்... இல்லை wats up ல அனுப்ப சொல்றேன்....

என்று சொல்லி கதிர் முல்லையை அழைக்க..நேரம் 12 மணி அளவில்

கதிரிடம் இருந்து முல்லைக்கு கைபேசி வாயிலாக அழைப்பு வர....

கதிர் :முல்லை எனக்கு ஒரு முக்கியமான தாள் தேவைப்படுகிறது... நீ

......என் அலுவலக அறைக்குள் போய்.... நான் சொல்லும் அந்த பைலை

எடுத்து... அதன் நம்பரை எனக்கு....போட்டோ எடுத்து அனுப்பு ...

முல்லை : சரிங்க பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் ...

இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் நான் உங்களுக்கு போன் செய்கிறேன் .

எந்த பைல் என்று ...எனக்கு வாட்ஸ் அப்பில் அதற்குள் அனுப்பி விடுங்கள்....

நான் எடுத்து வைத்துக்கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்....

இல்லை என்றால் போட்டோ எடுத்து அனுப்புகிறேன்..... என்று சொல்ல...

மறுபக்கம் ....

பூர்வீக வீட்டிற்குள் "நிலா என்கிற நீலாம்பரி" நுழைய ....வாசலில் நின்று

கொண்டு இருந்த சேகர் ....தன் கைகளால்

வெற்றி என்று விரலை காட்ட......" நீலாம்பரி என்கிற நிலா" கண்ணை

அசைத்து சம்மதம் தெரிவித்தவள்.... நேராக வீட்டிற்குள் நுழைய ...

ராதா: வாங்க... யாரு நீங்க.....????????????????????????????????

பாகம் ..195

ராதா: வாங்க... யாரு நீங்க.....?

நீலாம்பரி : நான் நிலா... மீனா மேடம்... இருக்கிறார்களா....,?

கண்ணன்: ராதா... அவர்கள் குட்டி அணியின்.... தோழி போல... இரு நான்

அண்ணியை கூப்பிடுகிறேன்.....

என்று சொல்லி கண்ணன்.... மீனாவின் அறை கதவை தட்ட

மீனா: (கதவைத் திறந்தவள்) ஏய் நான் தான் விளக்கை ஏற்றிக் கொள்கிறேன்

என்று சொன்னேனே... மீண்டும் என்ன...,?

கண்ணா: அண்ணி. உங்களை பார்க்க உங்கள் தோழி வந்து

இருக்கிறார்கள்.....

மீனா: ( குழப்பத்துடன்) என்னைப் பார்க்கவா... யார் ......,?

என்று மீனா பார்க்க.... தன் அறையின் வாசலில்... வலது பக்கம் நிலா

நின்று கொண்டிருக்க....

மீனா : நிலா .. வாங்க வாங்க ..கண்ணா இவுங்க என் தோழி இல்லை...

என்னை காப்பாற்றிய தெய்வம் .....அன்று இரவு இவர்கள் இல்லை என்றால்

....நான் இந்நேரம் உன் முன்னாடிஇருந்துது இருக்கவே மாட்டேன்....நீங்கள்

வாருங்கள் உள்ளே..

என்று சொல்லி... மீனா ..நிலாவை தனது அறைக்குள் அழைத்து போக..

நிலாவும்... மீனாவும் அவர்களின் கதைகளை பேசிக் கொண்டிருக்க....

நிலா தன் வசீகர வார்த்தைகளால்.... மீனாவை தன்வசம் படுத்தி கொண்டு

இருக்க

நிலா: மீனா உங்களின் ரெஸ்ட் ரூமை... நான் யூஸ் பண்ணிக்

கொள்ளலாமா....?

என்று சொன்னவள்... பாத்ரூம் அறைக்குள் போக.... மீனாவின் கதவைத்

தட்டிய முல்லை.....

மீனா : (கதவை திறந்து முல்லையை முறைத்துப் பார்த்து) என்ன..?

முல்லை: பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் ...ஆனால் சீதா எழுந்து

விட்டால்... எனக்கு ஒரு சில வேலைகள் இருக்கின்றது.... நீ கொஞ்சம்

சீதாவை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்.....

என்று .... சீதாவை .மீனாவின் கண்காணிப்பில் விட்டுவிட்டு ....கதிர்

சொன்ன வேலையை முடிக்க போன முல்லை...

ராதா... கண்ணா.. இருவரும் தன் கண்களால் ..காதல் பார்வைகளை

மாற்றிக் கொண்டே.. வீட்டை சுத்தி விளக்கை ஏற்றி ...அந்த விளக்கிற்கு..

எண்ணை குறையக் குறைய... எண்ணெய் ...ஊற்றி கொண்டு இருக்க ....

மீனாவின் அறையில்... குளியலறையிலிருந்து... வெளியே வந்த நிலா

...மீனாவின் குழந்தை.... சீதாவைப் பார்த்து....

நிலா : மீனா மேடம் ...இது உங்க குழந்தையா ....?அழகாக இருக்கிறாள்.....

மீனா: ஆமாம் என்னுடைய பெண்.... பெயர் சீதா...

என்று சொல்ல.சீதா பசியால் அழ ஆரம்பிக்க...

மீனா: நீங்கள் அமர்ந்து இருங்கள்... நான் போய்... சீதாவிற்கு சாப்பிட

ஏதேனும் எடுத்துக்கொண்டு .உங்களுக்கும் .....குடிக்க ஏதேனும் கொண்டு

வருகிறேன்.....

என்று சீதாவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு... தன் அறையை விட்டு

வெளியே போன மீனா....

மீனா அவளின் அறையை விட்டு வெளியே போனவுடன்... தன் கையில்

வைத்திருந்த மைக்கை... மீனாவின் கட்டிலின் அடியில் மறைத்து வைத்த

நிலா.....பின்பு தான் எடுத்து வந்த ஒரு சின்ன பையை மீனாவின்

அலமாரியில் மேல் உள்ள ஒரு ஜாடிக்குள் போட நிலா ...மீனா அறைக்குள்

மறைத்து வைத்த பை என்ன..? இந்த பையாள்.."பாண்டியன் ஸ்டோர்ஸ்"

குடும்பம் மீண்டும் பழைய நடுத்தர வாழ்க்கைக் கே ......வர

போகிறார்களா....? என்பதை பொறுத்து இருந்து படிப்போம்

முல்லை ....கதிர் சொன்ன வேலையை பார்க்க வீட்டிலேயே இருக்கும்......

கதிரின் அலுவலக அறைக்குள் போகும் முன்..... கண்ணா....விடமும்

...ராதாவிடம் ஐந்து பிள்ளைகளைப் பார்த்து கொள்ளுமாறு .... சொல்லி

விட்டு போக...... கதிர் முல்லையின் ... மூத்த பையன்.... நவீன் மட்டும்

....தூக்கத்தில் இருந்து வெளியே எழுந்து வந்தவன்.... கண்ணன் அருகில்

அமர்ந்து கொண்டு...

நவீன்: (கண்ணாவை பார்த்து) அப்பா எனக்கு போன் கொடுங்கள்( என்று தன்

மழலை பேச்சால் கேட்க) கண்ணா... நவீன் கையில் அவன்

விளையாடுவதற்கு ....போனை கொடுக்க.....

சீதாவை தன் கைகளில் பிடித்துக் கொண்டு வந்த மீனா.... சீதாவை

சமையலறையிலேயே விட்டு விட்டு ......அவளுக்கு உணவையும் கொடுக்க

மறந்து விட்டு...... நிலா வந்த சந்தோஷத்தில்.... நிலாவிற்கு குடிக்க

குளிர்பானம் எடுத்துக்கொண்டு போக.....

வராண்டாவில்.... ராதா ,கண்ணா ,நவீன், மூவரும் அமர்ந்து கொண்டு

பேசிக்கொண்டு இருக்க....

நிலா.மீனாவின் அறைக்குள் ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்க

மீனா : ( கையில் குளிர்பானத்தை)....இந்தாருங்கள் குடியுங்கள்....

நிலா: எங்கே உங்கள் பிள்ளை.....?

மீனா : அய்யய்யோ... நான் மறந்துவிட்டேன்.... சீதாவை சமையல்

அறையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்....

என்று சொல்லி... அவசரம் அவசரமாக ...அறையை விட்டு ....வெளியே

வர

சீதா... அதற்குள்... தன் வீட்டில் ஒரு மூலையில் வைத்து இருந்த

விளக்கை போய் தொட..... அவள் தன் கையில் அந்த எண்ணெயை சுட சுட

ஊற்றிக்கொள்ள...... விறு விறு என்று அழுத சீதாவை... பதறிப்போய்....

கண்ணனும்... ராதாவும் தூக்க...

சீதாவின்... சத்தத்தைக் கேட்டு... மீனா , முல்லையும் ... ஓடிவர

துடிதுடித்துக் கொண்டிருந்த சீதாவை.... கண்ணன் தூக்கிக்கொண்டு....

மீனாவுடன் ..மருத்துவமனைக்கு செல்ல.....

காரில் கண்ணனுடன் ....மீனா சீதாவை அழைத்துக்கொண்டு

மருத்துவமனைக்கு போக ....

வீட்டில் முல்லை ,ராதா ....

முல்லை : என்ன ராதா....? என்ன ஆனது ..?சீதா எப்படி சமையல் அறையில்

ராதா ; அக்கா எனக்கு தெரில அக்கா ...நானும் ,கண்ணாவும் ,

நவினுடன் அமர்ந்து போனில் வீடியோ எடுத்துக்கொண்டு....

விளையாடிக்கொண்டு இருந்தோம்...சீதா கதறும் சத்தம் கேட்டு தான்

ஓடிபோய் பார்த்தோம் ...

முல்லை : நான் இந்த மீனாவிடம் தானே ....சீதாவை... பார்த்துக்க சொல்லி

விட்டு போனேன் ....

ராதா : அக்காமீனா ....அக்காவை காப்பாற்றிய பெண் வந்து இருக்கிறார்

என்று சொல்லி... மீனா அக்கா அவ்ரகளிடம் தனது அறையில்.. தான்

பேசிக்கொண்டு இருந்தார்கள் .அப்புறம் என்ன நடந்தது என்று தெரிய

வில்லை ....பாவம் சீதா ....

முல்லை : யாரு அந்த நிலா வா ...?

ராதா : உங்களுக்கு அவர்களை தெரியுமா ...?

முல்லை : எனக்கு தெரியாது அனால் ..இந்த மீனா தான்.... அந்த நிலாவின்....

புராணத்தை பாடி கொண்டு இருந்தாலே ....

அதான் கேட்டேன் ....சரி மீனாவே ...இங்கு இல்லை அந்த நிலா மட்டும்

அவள் அறையில் என்ன செய்ய போரால் ...இரு நாம் அவளிடம் விவரத்தை

சொல்லுவோம்

என்று சொல்லி முல்லை மீனாவின் அறையை திறக்க ...நிலா மீனாவின்

அறையை ....ஆராய்ந்து கொண்டு இருந்ததை பார்த்த முல்லை ....

முல்லை : ஹலோ ....என்ன செயிரிங்க....? நீக்க ....ஏன் அதையெல்லாம்

நோண்டி கொண்டு இருக்கீங்க ....?

நிலா : அது .....அதுவந்து ஒன்னும் இல்லை ....

முல்லை : சரி மீனாவின் பிள்ளைக்கு சின்ன விபத்து ஆகையால் மீனா

அவள் பிள்ளையுடன் மருத்துவ மனைக்கு போய்இருக்கிறாள் ....

நீங்க எதென்னும் சாப்பிடு ரீங்களா ...? இல்லை கிளம்புரிங்களா...,?

நிலா : ( முறைத்து பார்த்து ) இல்லை நான் கிளம்புகிறேன் ...

என்று சொல்லி நிலா கிளம்ப முல்லை ..... (நிலாவை பார்த்து ) ஒரு

நிமிடம் இருங்கள் என்று அழைத்தவள்.....

முல்லை : நீங்க மீனாவை காப்பாத்துனீங்க என்று மீனா சொன்னாங்க

.அதற்க்கு முதலில் உங்களுக்கு நன்றி ...ஆனால் ஒருவர் வீட்டுக்கு நாம்

வந்ததால் அவர்களின் உடமைகளை தொடக்கூடாது ........அதுவும்

உடையவர்கள் இல்லாத நேரத்தில் அந்த பொருட்களை பார்க்க கூட கூடாது

இது உங்களை நான் கண்டிக்கும் விதமாக சொல்ல வில்லை

.அறிவுரையாக தான் சொல்கிறேன் ...பார்த்து போங்க ...

என்று முல்லை முல்லை யால் நிலா விர்க்கு....ஏற்பட்ட... முதல்

அவமானம் இது தான்.......இன்னும் இந்த நிலா முல்லைக் கையால்

....நிறைய.......வாங்குவாள் ....பொறுத்து இருந்து படியுங்கள் ....

மறுபக்கம் மருத்துவமனையில் மீனா, கண்ணா, சீதா பாண்டி...

டாக்டர்: உங்கள் பிள்ளைக்கு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை... மருந்து

போட்டு உள்ளோம்... நான் எழுதிக் கொடுக்கும் மருந்தை மட்டும்... ஐந்து

நாள் குடுங்கள்... மறுபடியும் அடுத்த வாரம் என்னை வந்து பாருங்கள்..

கண்ணா: டாக்டர் வேறு ஏதும் பிரச்சனை இல்லை அல்லவா...?

டாக்டர்: இல்லை நீங்கள் இந்த மருந்தை மட்டும் தவறாமல் கொடுங்கள்

குழந்தைக்கு காய்ச்சல் வந்தால்.... மற்றும் ஒரு மருந்தை எழுதியுள்ளேன்

அதைக் கொடுங்கள்.......

மீனா : மற்றபடி குழந்தையின் விரலுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே....?

டாக்டர்: இல்லை லேசாகத் தான் எண்ணெய் பட்டுள்ளது... இருந்தாலும்

பிள்ளைகளை நெருப்பு தண்ணீர் இது அனைத்திலும் மிக ஜாக்கிரதையாக

வைத்து இருக்க வேண்டும்

என்று டாக்டர் சொல்ல கண்ணன், மீனா, சீதாவுடன் கிளம்பி வீட்டிற்கு வர

...வீட்டு வாசலில் கண்ணன்...

கண்ணன் : குட்டி அண்ணி நீங்கள் பாப்பாவை அழைத்துக் கொண்டு

வீட்டிற்குள் போங்கள்... நான் டாக்டர் எழுதிக் கொடுத்த... மருந்தை வாங்கிக்

கொண்டு வருகிறேன்...

என்று சொல்லி கண்ணன் போகவராண்டாவில் முல்லை ராதா வீட்டில்

இருக்கும் ஐந்து பிள்ளைகளுடன் அமர்ந்து கொண்டு இருக்க.....

கோபத்துடன் சீதாவை தூக்கி கொண்டு வந்த.... மீனா ராதாவை பார்த்து....,

மீனா: ஏய் ராதா ...இந்த வீட்டில் விளக்கு ஏற்றவில்லை இல்லை என்று யார்

இப்போது அழுதார்கள்... விளக்கை ஏற்றி வைத்து ...என் பிள்ளையின்

வாழ்க்கையை அணைக்க பார்த்தியா....

முல்லை : மீனா என்ன பேசுற ...நான் தான் கொஞ்சம் வேலையாக

இருக்கிறேன்... குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்... என்று சொல்லி

...உன் கண்காணிப்பில் தானே விட்டு விட்டுப் போனேன்.... சீதா எப்படி

தானாக சமையல் அறைக்குள் வந்தாள்...?

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜீவா வீட்டுக்குள் வர

ஜீவா : என்னப்பா முல்லை... என்ன இங்க சத்தம்...? என்ன மீனா... ஐயோ

என்ன இது... சீதாவின் கையில் கட்டு ....ஐயோ அம்மு சீதா .. என்ன ஆனது...

என்னதான் நடக்குது இங்கே.. மீனா சொல்லி தொலையேன்...

மீனா: இதோ பாரு ஜீவா ....இந்த ராதா வீட்டை சுற்றி விளக்கை ஏற்றி

...வைத்துவிட்டு பிள்ளைகளை ... கண்ணும் கருத்துமாக பார்த்துக்

கொள்ளாமல்... நம் குழந்தை போய் அந்த விளக்கை தொடுவதை ...

வேடிக்கை பார்த்துக் கொண்டு.. இருந்திருக்கிறா ...இதோ பார் நம்

குழந்தைக்கு கையில் காயம் ஏற்பட்டு விட்டது...

ராதா : ஐயோ இல்லை மாமா... நான் ஜாக்கிரதையாகத் தான் இருந்தேன்

...சீதா சமையலறைக்குள் போனது எங்கள் யாருக்கும் தெரியாது....

மீனா: பார்த்தியா நாம் பிள்ளை என்றாலே இந்த வீட்டில் அனைவருக்கும்

ஒரு எலக்காரம் தான்.....

ஜீவா : என்ன....பா..... ராதா... பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இப்படியா ...

விளக்குகளை ஏற்றி வைப்பது... அப்படியே வைத்தாலும் ...ஜாக்கிரதையாக

பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லை....... அதானே

திருமணமாகி இத்தனை வருட காலம் ஆகிவிட்டது... உனக்கென்று ஒரு

பிள்ளை இருந்தால்தானே பிள்ளையின் அருமை உனக்கு தெரியும்....?

என்று ஜீவா சொல்ல ...அந்த ஒரு சொல் ராதாவின் மனதில் இடியாய்

வந்து இறங்க.... ராதா அழுதுகொண்டே தன் அறைக்குள் சென்று கட்டிலின்

மேல் படுத்து அழுக....

முல்லை : மீனா இங்கே என்ன நடந்தது..... நீ என்ன அத்தானிடம் சொல்லிக்

கொண்டிருக்கிற.... இங்கு நடந்ததை நீ அவரிடம் தெளிவாக சொன்னால்

தான்..... தவறு யார் மேல் இருக்கிறது என்று தெரியும்.....

மீனா: போதும் நிறுத்து..... ராதா வை பற்றி ஒன்று சொன்னால் போதுமே....

முதலில் நீ தான் அவளுக்கு வக்காலத்து வாங்க வருவ.... இதோ பார் என்

குழந்தையின் கை.... நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருங்கள்....

என்று சொல்லி சீதாவை அழைத்துக்கொண்டு மீனா தன் அறைக்குள்

போக.....

ஜீவா : என்னப்பா முல்லை... நீயாவது..... கொஞ்சம் ஜாக்கிரதையாக

இருந்திருக்க கூடாது.... ?ராதா தான்.... சிறுபிள்ளைத்தனமாக

இருக்கிறாளே...... அவளிடம் போய் குழந்தையை விட்டுவிட்டு... நீங்கள்

எல்லாம் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்...... ?

முல்லை : அத்தான் ... ஆறு குழந்தைகளையும் நான் தான் பார்த்துக்

கொண்டு இருந்தேன்... ஆனால் உங்கள் தம்பி எனக்கு ஒரு வேலை

கொடுத்தார் ...அதை செய்வதற்குள்... சீதா எழுந்து விட்டதால் ...நான்

மீனாவிடம் ஒரு அரை மணி நேரம் பார்த்துக் கொள்ளுங்கள்... என்று

மீனாவின் கண்காணிப்பில் தான் .....குழந்தையை சீதாவை விட்டுவிட்டு

சென்றேன்.... இத்தனைக்கும் நான் சொன்னேன் வீட்டை சுற்றி விளக்கி

இருக்கிறது ...பிள்ளை பத்திரம் ...என்று ஆனால் மீனா.... என்று முல்லை

சொல்வதற்குள்.....

மீனா : ஜீவா போதும் ...அவளின் கதையைக் கேட்டு கொண்டு இருக்க.......

இது நேரமில்லை ....இதோபார் பிள்ளை வலியால் துடிக்கிறாள்..... அந்தக்

கண்ணன் பையன் மருந்து வாங்க போய் இருக்கிறான்.... அவன்

வருகிறானா பார்....

என்று மீனா தன் மேல் இருக்கும் தவறை மறைக்க.... ஜீவாவிடம்

கோவித்து கொள்ள..... ஜீவாவும்.... முல்லை சொல்ல வந்த விவரத்தை காது

கொடுத்து கேட்காமல்... அந்த இடத்தை விட்டு சென்றார்...

முல்லை : ( மனதிற்குள்) இது என்ன புதுக்குழப்பம்...... ஜீவா அத்தான்

வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்து விட்டது.... இதை ராதாவின்

மனசு எப்படி தாங்கிக் கொள்ளும்....

என்று யோசித்துக்கொண்டே திரும்பியவள் ....தன் குழந்தை நவீன்

கையில் கைபேசியை பார்த்து.

முல்லை : நவீன் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்... கைபேசியில்

விளையாடாதே... என்று குடு என்று அந்த கைபேசியை .....என்று வாங்கி

மேசையின் மேல் வைத்து வைக்க.....

கதிரிடம் இருந்து மீண்டும் கைபேசி மூலம் அழைப்பு வர...இங்கு நடந்த

சம்பவத்தை சொன்ன முல்லை

கதிர் : சரி ...நீ....எதுவும் இப்போதைக்கு...ஜீவா அண்ணனிடம் பேசாதே....நாம்

வந்து பேசிக் கொள்கிறேன்...

என்று சொல்லி போனை வாங்கி மேசையின் மேல் வைக்க....

கவின் ....கதிர் .....நின்று பேசிக்கொண்டு இருந்த தெருவில் ஒரு

வெங்காயம்....விர்க்கும்.... வியாபாரி வண்டியில் வெங்காயத்தை...

தள்ளிக்கொண்டு....

வெங்காயம்......வெங்காயம்.... என்று குவிக்கொண்டு....போக...

கதிர் : மாப்பிள்ளை..இப்போ தான் டா நீயாபகம் வருது .....எனக்கு

ஒருவனிடம் பழைய பாக்கி ஒன்னு இருக்குது டா......அவனை உனக்கு

தெரியாது நம் ராஜாவுக்கு தான் தெரியும்.... ..

கவின் : யாரு மாப்பிள்ளை அவன்.....?

என்று கேவின்....கேட்க....கதிர் யாரை பற்றி சொல்கிறார் என்பதை நீங்கள்

அறிந்து இருந்தாலும் ....அவருக்கும் ....அவர் ...சொல்லப்போகும்.... .அந்த...

நபருக்கும் என்ன பகை என்பதை தெரிந்து கொள்ள.....நாளை என்னுடன்

Seguir leyendo

También te gustarán

8.9K 1.3K 64
நான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post...
120K 15.4K 100
This is yet another KM story. Read further to know
38K 1K 74
GUYS! can enjoy the tamil song lyrics
19 2 2
Ez