💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞

By KathirvelanMullai

8.9K 1.3K 313

நான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்தத... More

முதல் தீண்டல்
முல்லைப்பூ
பிளான் பண்ணி பண்ணனும்
கதிரின் வைரம்
சில பொய் நன்மைக்கே
இனிதே ஆரம்பம்
நல்லதொரு குடும்பம்
jasmine
சந்தேகம் என்னும் தீ
என் பொக்கிஷத்தை இழக்க மாட்டேன்.
என் மனசை கொள்ளையடித்த பெரிய திருடன்
அழகி
GPS
KVVM
தீமையிலும் நன்மை உண்டு
அன்பான அழகி
பிள்ளை வரம்
kathir velan in mullai
mullai kathirvelan
love
km
no fear
KM
kathir velan mullai
only KM
appadi podu chellam
its mullai style
km
KM
kathirvelan loves mullai
KM
mullai kathirvelan
madras trip
KM winning moment
KM
KM IN MURUGAN HOUSE
km
kathir loves mullai
KM
only km
km
KM
KM MADE FOR EACH OTHER
GOOD NEWS
km love
mudivillaa thodakkam nam KM
km with lovely family
நடுவில்..கொஞ்சம்.. 5 வருட பக்கத்தை ..காணோம்...அதில்
நடுவில் கொஞ்சம் 5 வருட பக்கத்தை காணோம்..
KM
AFTER 5 YEARS
KM....KC
neeye thunai
km
KM
KM LOVE
one and only KM
KM
only KM
KM LOVE
KM
KM
KM LOVE

kanakalam

71 9 1
By KathirvelanMullai


பாகம் 191...

மூர்த்தி, தனத்தின்.. பிரசவ காலத்தில் நடந்ததை நினைத்துப் பார்க்க...

5 வருடத்திற்கு முன்பு.

மூர்த்தி,தனம் இந்த வீட்டின் மூத்த மருமகள் ,மூத்த பிள்ளையாக

இருந்தாலும்..மீனா,ஜீவா இருவரும்..தான் பெற்றோர் ஆக போகிறோம்

என்று முதலில் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் தெரிய படுத்தினாலும்...

நம் கதிர், முல்லைக்கு ...தான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்

குடும்பத்தின் முதல் வாரிசை பெற்று எடுக்கும் வரம் கிடைத்தது...

கதிர் முல்லை இருவரும்.. தன் 2 ஆண் குழந்தைகள்...2 பெண்

குழந்தைகளை..பெற்று எடுத்து கொண்டு ..மருத்துவமனையில்..இருந்து..

தனது வீட்டிற்கு வரலாம் என்று முடிவு செய்ய...

லட்சுமி அம்மாவின் முடிவால் கதிர் ,முல்லை இருவரும் தான் பெற்ற

4பிள்ளைகளுடன் .நேராக தனக்கு சொந்தமான பூர்வீக வீட்டிற்கு வர..

பார்வதி : அம்மாடி முல்லை இருடா செல்லம்...இதோ ஆரத்தி கொண்டு

வருகிறேன்...

லட்சுமி : (பொறுமையாக மகாவின் தூணை உடன் நடந்து வர)

அம்மாடி முல்லை என் வைத்துள்ள.... பாலை வாத்திட்ட...டேய் கதிர்

சந்தோஷம் டா...

கவின் : மாப்பிள்ளை நீ எப்போதுமே வேற...மாதிரி தான்..

பார்வதி கையில் ஆரத்தி கொண்டு வர...தனது 4 பிள்ளைகளையும் கதிர்

முல்லை இருவரும் இரு கையில் ஏந்தி நிக்க....பார்வதி அம்மா ஆர்த்தி

எடுத்தவர்...தனது கைகளால் கதிர், முல்லை, நவின், ரத்தினா, கேவின்,

ஷம்லின் அனைவருக்கும் ஆரத்தி எடுத்து போட்டு வைத்து பூர்வீக

வீட்டிற்குள் அழைக்க...

மூர்த்தி : டேய் கதிர் கலக்கிட்ட டா..ரொம்ப சந்தோஷம்..இந்த வீட்டின்

மூத்த வாரிசு மட்டும் இல்லாமல் .. எங்கள் அனைவருக்கும் 1 kku 4 ஆக

இன்பத்தை அள்ளிதந்து உள்ளாய்..

கதிர் : ( சந்தோஷத்துடன் ) ஐயோ அண்ணா..இது நானே எதிர் பார்க்காத

...இன்பம்...எனக்கு கிடைத்த வரப்பிரசாதம்...

ஜீவா : இருந்தாலும் ...நாங்க எல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கோம்

கதிர்...

லட்சுமி : ஏன் டா ஜீவா மீனா. எப்படி இருக்கிறா...?

ஜீவா : அம்மா அதை ஏன் கேட்கிறீங்க..முல்லை முதலில் பிள்ளை பெற்று

விட்டால் என்று தெரிந்த உடன் அவளுக்கு ரொம்ப அதிர்ச்சி...அதுவும்

இல்லாமல் 2 ஆண் 2 பெண் என்று தெரிந்ததும் பேர் அதிர்ச்சி அடைந்து

விட்டால்.

லட்சுமி : அதற்கு என்ன டா..பண்ணுவது குழந்தை பிறப்பது... மழை

வருவது எல்லாம் மகேசனுக்கே தெரியாது....

கண்ணா : அது யாரு மகேசன்..டாக்டர் இன் பெய்யரா..?

மூர்த்தி : (சிரித்து கொண்டே ) டேய் அது கடவுளின் பெயர் டா..

முருகன் :(கையில் ஒரு பிள்ளையை வைத்தவாறு) அம்மாடி ...முல்லை

இப்போ கூட..என்னால் நம்ப முடி வில்லை..இதெல்லாம் கனவு போல

இருக்கு...

பார்வதி : ஆமாங்க ..நானும் முல்லைக்கு 2 பிள்ளைகள் தான் என்று

நினைத்தேன்..ஆனால் 4பிள்ளை என்பது அதிசியம் தான்..என்று பார்வதி

சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ..முருகன் கையில் இருக்கும்

குழந்தை அவர் கையில் (சிறுநீர்) ஈரம் செய்ய..

கதிர் : என்ன மாமா நீங்க தானே கனவு என்று சொன்னீர்கள்...அதான் உங்கள்

பேரன் உங்கள் மேல் சுடுத்தனிர் தெளித்து இருக்கிறான்...

அனைவரும் சிரிக்க...

முருகன் : இது சுடுதண்ணீர் இல்லை மாப்பிள்ளை குடுப்பணை... ..எனக்கு..

கிடைத்த பாக்கியம்.பிள்ளைகளை கட்டிக்குடுத்த அப்பா ...அம்மாவுக்கு

..மட்டுமே கிடைக்கும் பாக்கியம்...

பார்வதி : உண்மை தான் ..எனக்கும் இதோ அந்த பாக்கியம் கிடைத்து

விட்டது.

கண்ணா : இதெல்லாம் ரொம்ப ஓவர்...

ஜீவா : உனக்கு ஏன் டா காண்டு..

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே..மூர்த்தியின் கைபேசி மணி

அடிக்க....

மூர்த்தி : என்ன ஜெகா... எப்படி இருக்கிறாய்..?

ஜெக : நல்லா இருக்கேன் நீ நல்லா இருக்கியா..?

மூர்த்தி : நான் நல்லா தான் இருக்கிறேன்... இன்று மாலை நானே உன்

வீட்டிற்கு வந்து இருப்பேன்...

ஜெக : இல்லை மூர்த்தி இன்று கதிரும் முல்லையும் தனது குழந்தைகளை

தூக்கிக்கொண்டு... அங்கு வீட்டிற்கு வருகிறார்கள் என்று தெரிந்தவுடன்...

தனத்திற்கு இங்கு இருப்பு கொள்ளவில்லை... அவர்களுக்கு போன் செய்து

கொடுங்கள்... நான் பேச வேண்டும் ...என்று என்னை தொல்லை

பண்ணிவிட்டா..

மூர்த்தி : ( சிரித்துக்கொண்டே) அதுக்கு என்ன கொடு தனம் பேசட்டும்..

ஜெக : மூர்த்தி நான் கதிரை வீடியோ கால் மூலம் அழைக்கிறேன் ..அவர்கள்

முகத்தை பார்த்து பேசினால்... தனம்.. சந்தோஷப்படுவா..

என்று சொல்லி ஜெக.. கதிரின் கைபேசி kku வீடியோ காலில் அழைக்க...

கதிர் : அண்ணி எப்படி இருக்கீங்க.....?

தனம் : என்னடா கதிர் ...எனக்கு ரொம்ப சந்தோஷம்... இந்த சமயத்தில் நான்

தான் அருகில் இல்லை... எங்கே முல்லை ...

கதிர் : இதோ இருக்கிறா...

முல்லை : அக்கா எப்படி இருக்கிறீங்க ...

தனம் : நான் நல்ம் மற்றும் தான்... நீ நல்லா இருக்கிறாயா? எங்கே என்

செல்லங்கள்..? உனக்கு நான்கு பிள்ளைகள் பிறந்து விட்டது என்று

அண்ணன் சொன்னவுடன் எனக்கு இங்கு இருப்பு கொள்ளவில்லை....

இப்பவே கிளம்பி வந்து என் நான்கு பிள்ளைகளையும் ...என் கையில்

தூக்கிக் கொள்ள வேண்டும் ....என்று ஆசையாக இருக்கிறது ...

முல்லை : அதற்கு என்ன இன்னும் இரண்டு மாதத்தில்... உங்களுக்கும்

பிள்ளை பிறந்து விடும்... நீங்கள் வந்தவுடன் நாம் அனைவரின்

பிள்ளைகளையும்... நீங்கள் தானே வளர்க்கப் போகிறீர்கள்...

தனம் : எப்போடா அந்த இரண்டு மாத காலம் வரும் என்று இருக்கின்றது

....உங்கள் அனைவரையும் விட்டு என்னால் இங்கு இருக்கவே

முடியவில்லை....

கண்ணா : என்ன அண்ணி.. எங்களை விட்டு இருக்க முடியவில்லையா...

அண்ணனை விட்டு இருக்க முடியவில்லையா...

தனம் : டேய் ..நீ வாயை மூடுடா... அங்க பாரேன் குழந்தை தூக்கத்தில்

சிரிக்குது... சரி குழந்தைகள் அருகில் கைப்பேசியை எடுத்துப் போகாதீர்கள்...

இந்தப்பக்கம் வந்து பேசுங்க ....

கதிர் : அண்ணி இன்று தானே உங்களுக்கு மருத்துவ பரிசோதனை... என்று

அண்ணன் சொன்னாரு...

தனம் : ஆமாம் கதிர் அது சாதாரணமான பரிசோதனை தான்...

லட்சுமி : எப்படி இருக்கிற தனம்..?

தனம் : நான் நல்லா இருக்கிறேன் அத்தை... நீங்கள் நடைப்பயிற்சி எல்லாம்

செய்கிறீர்களா....?

லட்சுமி : எல்லாம் நல்லபடியா போகுது ...நீ இந்த வீட்டில் இல்லாத ஒன்று

மட்டும்தான் குறை ....

தனம் : அத்தை எனக்கு உங்கள் அனைவரின் ஞாபகமாக தான் இருக்கிறது....

லட்சுமி : சரி இன்று மாலை மூர்த்தி உன்னை மருத்துவமனைக்கு

பரிசோதனைக்கு அழைத்து போக வருவான்...

தனம் : அத்தை இங்கு அண்ணி கூட இல்லை ....மாமா வந்தார்கள் என்றால்

இன்று இரவு இங்கேயே இருக்கட்டுமாம்....?

லட்சுமி : ( சிரித்துக்கொண்டே) உன் மாமனை நீ ...வச்சுக்கோ.. யாரு

உன்னை ..திருப்பி அனுப்ப சொல்றாங்க...

கண்ணா : அப்போ நீங்க எங்கள பார்த்து பேச போன் பண்ணல... அண்ணனே

அங்கு வரவேற்கத்தக்க தான் போன் பண்ணி இருக்கிறீர்கள்....

தனம் : நீ வாய மூடுடா... நீ ராதாவை கேட்டதா சொல்லு... அவ எப்படி

இருக்கிறார்..?

கண்ணா : யாருக்கு தெரியும்..

மூர்த்தி : ஆமாம் தனம்.. வீரா.. மணியும் ....ஏதோ வெளியூருக்கு அவசரமாக

போக வேண்டுமா... உடனடியாக மகாவுக்கு ராஜாவுக்கும்... கண்ணனுக்கும்

ராதாவுக்கும்... திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்

கொண்டிருக்கிறார்கள்....

தனம் : அதற்கு என்ன மாமா செய்து விட்டால் போச்சு...

கண்ணன் : என்ன கல்யாணமா... எனக்கு என்ன வயது ஆகிறது... அதற்குள்

எதற்கு கல்யாணம்...?நாம் படிக்க வேண்டும்...

லட்சுமி : இவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பான்.. கல்யாணம்

பண்ணிக்கொண்டு அதற்கப்புறம் கூட நீ படிக்கிற வேலையைப் பாரு....

தனம் : சரி மாமா நீங்கள் மாலை வாருங்கள் உங்களுக்காக நான் காத்துக்

கொண்டிருக்கிறேன்... முல்லை பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்...

நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்...சித்தி, சித்தப்பா நீங்க நலமா...கவின்

சக்ஷயை நல்லா இருக்கிறாளா... ?மகா நீ எப்படி இருக்கிற...?

ஜீவா ,மீனா எப்படி இருக்கிறார்..?

ஜீவா : அண்ணி அவளுக்கு இன்னும் இரண்டு நாட்களில் வலி வரவில்லை

என்றால்... ஆபரேஷன் பண்ணி தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று

சொல்லிவிட்டார்கள்...

தனம் : இந்த மாதிரி நேரத்தில் நீ ...மீனா உடனே இருடா ...

லட்சுமி : ஆமாம் மூர்த்தி நீ தனத்துடன் போயிரு.... கஸ்தூரியும் ஊரில்

இல்லை நல்லதாக போச்சு... ஜீவா நீயும் போய் மீனா வீட்டில் அவள்

அருகிலேயே இருஎன்று சொல்ல மூர்த்தி, ஜீவாவும்..இருவரும்.. அவரவர்

கருவுற்ற மனைவி அருகில் இருப்பதற்காக கிளம்ப...

மறுபக்கம் ...

மாலை 5 மணி அளவில் மூர்த்தி ஜெக...இருவரும் ....தனத்தை...

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல..தனத்தை பரிசோதித்த டாக்டர்....

டாக்டர் : mr.மூர்த்தி.. ஏன் என்று தெரியவில்லை... குழந்தையின் அசைவு

சரியாக தெரியல...தனம்.. நீங்கள் கொஞ்சம் தண்ணி குடித்துவிட்டு ...ஒரு

இரண்டு மணி நேரம்..நடந்து விட்டு பிறகு வாருங்கள்... நாம் அப்பொழுது

பரிசோதித்துப் பார்ப்போம்....என்று மருத்துவர் சொல்ல ...

பல வருடம் கழித்து....பல கேள்விகளை காதில் கேட்டு... ரணமாகி ...பல

வார்த்தைகளால்.. புளுவாய் துடிதுடித்து..தன் வாழ்வில் இப்பொழுதுதான்

ஒரு விடிவுகாலம் வர ...அதற்கு ஏதும் பிரச்சனையா வந்துவிட்டதே..என்ற

கவலை தனத்தின்.. மனதில் இடியாய்.. இறங்க....

மூர்த்தி : என்ன டாக்டர் ... பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையே..

டாக்டர் : Mr.மூர்த்தி...100..இல்.. பத்து பேருக்கு.. இப்படி இருப்பது

சகஜம்தான்... எதற்கும் நீங்கள் ஒரு.. இரண்டு மணி நேரம் நடந்து விட்டு

வாருங்கள்... நான் மீண்டும் உங்கள் மனைவியை பரிசோதித்துவிட்டு...

என்ன என்று சொல்கிறேன்...என்று ...dr....சொல்ல

மூர்த்தி ..கவலையுடன் தனத்தை கைத்தாங்கலாக மருத்துவ வளாகத்தை

சுற்றி இருக்கும் பூங்கா போன்ற அமைப்பில் நடக்க வைக்க....

தனம் : (கண்ணீருடன்) மாமா என் பிள்ளைக்கு மட்டும் ஏதேனும் ஆனால்

அந்த நிமிடமே என் உயிரும் போய் விடும்

மூர்த்தி : ஏய்...யாரு டா..இவ..அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது தனம்..

ஜெக : என்ன தனம் பிள்ளை எப்படி இருக்காம்...உனக்கு சத்து மாத்திரை

ஏதேனும் தந்தார்களா..எந்த மாதம் பிள்ளை பிறக்குமா..?

தனம் : (கண்ணீருடன் ) அண்ணா பிள்ளையின் ஆசைவு தெரிய

வில்லையாம்...ஆகையால் கொஞ்ச நேரம் என்னை நடந்து விட்டு

வாருங்கள் பிறகு பரிசோதித்துப் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார்கள்..

ஜெக : இருக்கட்டும் அதற்கு ஏன் கவலை படுகிற...உனக்கும் சரி

என்.. மருமகளோ......மருமகன்னோ...பிள்ளைக்கும்சரி ஒண்ணும் ஆகாது

தனம்....

மூர்த்தி நீ தனத்தை பர்த்திக்கோள்...நான் இப்போ வருகிறேன் என்று

ஜெக அவசரம் அவசரமாக...கோவிலுக்கு போக

மூர்த்தி : தனம் நீ கவலை படாதே இரு நான் போய் உனக்கு தண்ணி குடிக்க

வாங்கி வரேன்..என்று மூர்த்தி கிளம்ப...அதே மருத்துவமனை வளாகத்தில்

நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவள் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து

அழுதுகொண்டு இருக்க...அவளை பார்த்த தனத்திற்கு...அவளிடம் பேச

வேண்டும் என்று தோன்ற...

தனம் : இந்தாங்க...ஏன் இப்படி அழிகுறிங்க...உங்க குட யாரும் வர

வில்லையா...?

அந்த பெண் : இல்லை நான் மட்டும் தான் தனியாக வந்தேன்..

தனம் : ஏன்னம்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துக்கொண்டு இப்படி

அழுதுகொண்டு இருந்தால் வையித்தில் உள்ள பிள்ளைக்கு ஏதேனும்

ஆனால் என்ன பண்ணுவ..

ஒரு பெண் : ஆக்ட்டும் எனக்கு இந்த பிள்ளை பிறக்கும் முன்பே நான்

சாகப்போவது உறுதி என்று தெரிந்து விட்டது.. இனி நான் என்ன ஆனால்

என்ன கவலை.

தனம் : இங்கே பாரு மா.. உங்க பேர் என்ன ..?

அந்த பெண் : அந்தப் பெண் அழுது கொண்டே என் பெயர் சசி சசிகலா...

தனம் : இங்கே பாருங்க ...பிள்ளை வரம் ...அது உண்மையாகவே வரம்

தான்... இப்படி எல்லாம் பேசாதீர்கள்... ஏன் உங்களுக்கு என்னதான்

பிரச்சனை...?

சசி : ( அழுதுகொண்டே ) இல்லை ...மா எனக்கு ஏற்கனவே நான்கு பெண்

பிள்ளைகள் ...இப்பொழுது ஐந்தாவதாக கருவுற்று இருக்கும் நேரத்தில்

...இந்த ஐந்தாவது பிள்ளையும் பெண் பிள்ளையாக பிறந்தா... என் கணவர்

என்னை விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார் ....இன்று

காலையில் இருந்து எனக்கு லேசாக இடுப்பு வலி வந்துவிட்டது...

இருந்தாலும் அதை நான் யாரிடமும் சொல்லவில்லை...

தனம் : (பதறிப்போய்) என்னம்மா சொல்கிறீர்கள்... பிரசவ வலி என்பது மறு

ஜென்மம்... அதை மறைக்கும் அளவுக்கு உங்களுக்கு அப்படி என்ன உங்கள்

கணவரின் மீது பயம்...?

சசி : ஆமா மா... அவன் ஒரு சரியான பணப்பேய்.. பெண் பிள்ளை பிறந்தால்

அதை கட்டிக் கொடுக்க வேண்டும் ...என்று கஷ்டப்பட்டு கொண்டு...

ஆண்பிள்ளை தான் நல்லது என்று சொல்லிக் கொண்டு அலைவான்...

கடவுள் என்மேல் கருணை காட்டவே இல்லை... எனக்கு பிறந்தது நாளும்

பெண் பிள்ளைகளே... அந்த நான்கு பெண் பிள்ளைகள் கூட இப்பொழுது என்

பெற்றோரின் கண்காணிப்பில் தான் இருக்கிறது... இந்தப் படுபாவி ஒரே ஒரு

பிஸ்கட் பாக்கெட் கூட என் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க மாட்டான்..

இவர்கள் இங்கு பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே சசியின் கணவன் ...

வேங்கையன் வர தன் கணவனைக் கண்டு சசி பயத்தில்... கண்களில்

இருந்து வரும் நீரைத் துடைத்துக் கொண்டவள்..

வேங்கையன் : என்னடி இங்கே அமர்ந்து கொண்டு ஒப்பாரி வைத்துக்

கொண்டு இருக்கிறாய் ...எப்பொழுது தான் உன் வயிற்றில் இருக்கும் அந்த

சனியனை இறக்கி வைக்கப் போகிறாய்..?

சசி : ஏன் நம் பிள்ளையை இப்படி சொல்கிறீர்கள் ஒருவேளை இது ஆண்

குழந்தையாக இருந்தால் உங்களுக்கு சந்தோசம் தானே..?

வேங்கையன் : இப்படியே சொல்லி சொல்லி தான்... நாலு பொட்ட

பிள்ளைகளை என் தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற...

சசி : என் நாலு பெண் குழந்தைகளையும்.. நீங்கள் வளர்க்க வில்லையே

..என் தாய் தகப்பன் தானே வளர்க்கிறார்கள்..

வேங்கையன் : என்னடி வாய் நீளுது ...உன்னை இறுதியாக எச்சரிக்கிறேன்

...இந்த ஐந்தாவது பிள்ளையும்.. பெண் பிள்ளையாக பிறந்தால்... இதோபார்

பத்திரம் ...இந்த பத்திரத்தில் நான் கையெழுத்து இட்டு விட்டேன் ...நீயும்

கையெழுத்து போட்டு விட்டாய் என்றால் ...உனக்கு பெண் பிள்ளை பிறந்த

மறுகணமே... நான் விவாகரத்திற்கு பதிந்து விடுவேன்....

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த. ..தனத்திற்கு.

..கோவம்.. வர தனம் வேங்கைனைப் பார்த்து...

தனம் : நீயெல்லாம் ஒரு மனுஷனா...? உனக்கு அறிவு என்பது இருக்குதா..?

உன்னை பெற்றவளும் ஒரு தாய் தானே..? ஏன் பெண் பிள்ளை பிறந்தால்

உனக்கு என்னவாம் ..?

*ஒரு பெற்றோருக்கு ஆண் பிள்ளை பிறப்பது என்பது வரம்* *பெண் பிள்ளை

பிறப்பது என்பது வரம் கொடுக்கும் கடவுளே வந்து பிறந்ததற்கு சமம்*

வேங்கையன் : இந்த அம்மா யாரு நீ ...என் குடும்ப விஷயத்தில்

தலையிடும் உரிமை உனக்கு யார் கொடுத்தது.. நீயும் கருவுற்று

இருக்கிறாயா... வந்தோமா.. பிள்ளையை பெற்றோமா... போனோமா...

என்று இருக்க வேண்டும் .அடுத்தவர்களின் குடும்பத்தில் தலையிட்டை..

என்றால் .....என்னை பற்றி உனக்கு தெரியாது.. நான் நீ நினைப்பதை போல

கெட்டவன்.... இல்லை மிக கேடு கெட்டவன்..

தனம் : நீ கேடுகெட்டவன்... ஐ விட... கேவலமானவன் என்பது... நீ

பெண்பிள்ளை வேண்டாம் என்று சொன்ன அந்த நிமிடமே எனக்கு தெரிந்து

விட்டது.... இதோ பாரு சசி ...இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் நாம்

பயந்த காலம் மலையேறி விட்டது ...இப்பொழுது நீ சரி என்று சொல்... இந்த

நிமிடமே என் கணவர் மற்றும் என் கொழுந்தன் களின்... உதவியோடு உன்

கணவனை தூக்கி ஜெயிலில் போட நான் ஏற்பாடு செய்கிறேன்.... நீ

நிம்மதியாக பிள்ளை பெற்று அந்தப் பிள்ளைகளை வளர்க்கும் வழியைப்

பாரு... உனக்கு உன் ஐந்து பிள்ளைகளையும் வளர்ப்பதற்கு போதுமான

வருமானம் இல்லை என்றால்... கடல் போன்ற வீடு நான் புகுந்த வீடு... நீ

தாராளமாக வந்து அங்கேயே தங்கலாம்... உனக்கு ஏற்றது போல் ஒரு

வேலையை என் கணவரை நான் வாங்கித் தரச் சொல்கிறேன் ...இல்லை

என்றால் நம் வீட்டிலேயே உனக்கு தெரிந்த வேலைகளை செய்துகொண்டு...

உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

வேங்கையன் : யாரு இவள்... வந்தோமா போனோமா... இல்லாமல் உனக்கு

வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கிறாள்... என்னைப் பற்றி அவளுக்கு

தெரியாது போல..?

தனம்: டேய் என்ன சொன்ன ...அவள்.. இவள என்றா..நான் ஓங்கி ஒன்று

விட்டேன்னு வச்சுக்கோ ..அப்புறம் இந்த வெங்கை... மாங்காய் மாறிடுவ....

ஜாக்கிரதை...என்று தனம் வேங்கைன்னை எச்சரித்து கொண்டு

இருக்கும்பொழுதே மூர்த்தி தண்ணீர் உடன் வர

மூர்த்தி : என்ன தனம் இங்கே என்ன பிரச்சனை....?... ஏன் இவ்வளவு

கோபமாக பேசி கொண்டே இருக்கிறாய்....?

தனம் : மாமா இந்த ஆளு பேர் வேங்கையன்..... ஆளையும் மூஞ்சியும்

மொகரையும் பாருங்க..... இந்த ஆளுக்கு ஏற்கனவே நான்கு பெண்

பிள்ளைகள் பிறந்து இருக்கா ...இப்பொழுது ஐந்தாவதாக பெண் பிள்ளை

பிறந்தால்.... இந்த பெண் சசியை அவர் விவாகரத்து செய்துவிடு வானம்....

என்ன திமிர் இவனுக்கு... உடனே நீங்கள் காவல்துறைக்கு கைபேசி

வாயிலாக அழைப்பு விடுத்து இவனை ஜெயிலில் கொண்டுபோய் போடச்

சொல்லுங்கள்....

இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் தண்டனை வாங்கிக் கொடுத்தால்

தான்.... இனி பெண்பிள்ளை வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு ஒரு

பாடமாக இருக்கும்....

வேங்கையன் : இந்தப் பொண்ணுக்கு என்ன... வாய் ரொம்ப நீளுது... என்னை

ஜெயிலில் தள்ளும் அளவிற்கு நீ பெரிய ஆளா... நான் இந்த ஊரில்

எவ்வளவு பெரிய ரவுடி என்று தெரியுமா....?

தனம் : நீ யாரை வேண்டுமென்றாலும் இரு.... எவனா வேண்டுமென்றாலும்

இரு.... என் கொழுந்தன் கள் எதிரில் மட்டும் வந்து விடாதே....அப்புறம்

இப்படி நீட்டி.. நீட்டி.. பேசுகிறாயே இந்த கை... அந்த கை உன் உடம்பில்

இருக்காது....

மூர்த்தி : தனம் இரு... இந்த மாதிரி சமயத்தில் நீ கோபப்பட்டு பேசக்கூடாது

...இந்த பா.. தம்பி உனக்கு என்னதான் பிரச்சனை.. எதற்காக இப்படி சத்தம்

போட்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்... இங்கே பாருங்கள் சுற்றி

இருப்பவர்கள் அனைவரும் நம்மை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...

அதுவுமில்லாமல் மருத்துவமனையில் இப்படி எல்லாம் பேசிக்

கொண்டிருக்கக் கூடாது...

வேங்கையன் : இந்த அறிவுரை வெண்டைக்காயை எல்லாம்.... உன்

பொஞ்சாதிகிட்ட சொல்லு.... என் குடும்ப விஷயத்தில் தலையிடுவதற்கு..

இந்த வெள்ளைத் தோலுக்கு என்ன உரிமை இருக்கிறது....

என்று சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே... வேங்கையன்..

கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட... தன் கன்னத்தில் கையை

வைத்துக் கொண்டு.... தன்னை அடித்தது யார்... என்று பார்க்கும்பொழுது......

வேங்கைன்னை அடித்தது நம் தனம்....

தனம் : என்ன பார்க்கிற... பெண் பிள்ளை பிறந்தால் கேவலம் என்று

நினைத்துக் கொண்டாய் இல்லையா... அதே பெண் கையால் இன்று நீ அடி

வாங்கி இருக்கிறராய் ... இந்த அடியை நீ சாகும் வரை மறக்கக்கூடாது ....

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜகா கோயிலுக்குப் போய் திரும்பி

வர

ஜெக : என்னம்மா... என்ன இங்கே ..பிரச்சனை என்ன ஆனது...,?

தனம்... இங்கு நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்ல... கோபம்

கொண்ட ஜகா...

ஜெக : என்ன மூர்த்தி இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிற...

என் தங்கையை ஒருவன் இப்படிப் பேசுகிறான் என்றால் அவன் உயிருடன்

இருக்கக்கூடாது ...இருப்பினும் இவன் ஒரு மனைவிக்கு கணவன்

என்பதால் இப்படிப்பட்ட கேடுகெட்ட கணவனும் இந்த பொண்ணுக்கு

இருக்கக்கூடாது.... இதோ உடனே நான் காவல்துறைக்கு போன்

செய்கிறேன்...என்று ஜகா போலீசுக்கு போன் செய்ய..... சசி

சசி : ஐயோ.... எங்களை மன்னித்து விடுங்கள்.... அந்த மனுஷன் செய்தது

தவறுதான் ...அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பு

கேட்டுக்கொள்கிறேன் ....அந்த மனுஷனை விட்டு விடுங்கள்...

வேங்கையன் : என்னடி இங்கே நாடகம் நடத்துகிறார்கள்... இதோ பார் இந்த

நிமிடம் நீங்கள் எனக்கு ஏற்படுத்திய அவமானத்தை என்னால் மறக்கவே

முடியாது.... இவள் ஆண் பிள்ளை பெற்றாலும் சரி... பெண் பிள்ளை

பெற்றாலும் சரி.... இவளை நான் விவாகரத்துச் செய்யப் போவது உறுதி....

தனம் : ( கோபத்துடன்).. சசி போதும் இப்படி... நம் கண்ணீர் சிந்தி சிந்தி...

இந்த மாதிரி கேவலமான ஆண்களை பாதுகாத்து வைத்திருந்த காலம்

மலையேறிவிட்டது ....இப்பேர்ப்பட்ட கணவன் இல்லை... இல்லை இவன்

மனுசனே இல்லை... இப்பேர்ப்பட்ட மனுஷன் உனக்கு தேவை

இல்லை.....அண்ணா நீ உடனே காவல் துறைக்கு தெரியப்படுத்து...

என்று தனம் சொல்ல...ஜெகவும் ...காவல்துறைக்கு தெரியப்படுத்தி....

வேங்கைன்னை... காவல்துறையினர்... வந்து அழைத்துக் கொண்டு போக...

சசி : ஐயோ அம்மா... என்ன இப்படி செய்து விட்டீர்களே... அந்த மனுஷன்

போனவன் இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வந்து என்னை உயிருடன்

விட்டு வைக்க மாட்டான்...

தனம் : அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது சசி... அவன் மேல் நான் புகார்

கொடுக்கச் சொல்லி... என் கொழுந்தன்களிடம் சொல்லுகிறேன்.... அது

என்ன... ?.. பெண்பிள்ளை வேண்டும் என்று கொடுமைப்படுத்தும்

ஆண்களுக்கு.... இப்பொழுது நம் நாட்டில் கடுமையான சட்டம் வந்து

விட்டது..... உன் கணவன் ஓரிரு வருட காலம் ஜெயிலில் இருந்து விட்டு

வந்தால் தான் ....அவனுக்கு அந்த வலி என்ன என்பது புரியும்.... நீ முதலில்

போய் மருத்துவரை பார்... இடுப்பு வலி வந்தும் மருத்துவரிடம் நீ

சொல்லாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.....

என்று தனம் சொல்ல... தனத்தின் உதவியால்... இன்று சசி தன்

குழந்தையுடன் பாதுகாப்பாக இருந்தாலும் ...இது ஐந்து வருடத்திற்குப்

பின்... தனத்தின் வாழ்க்கையில்.... என்ன பிரச்சனையை... ஏற்படுத்த

போகிறது... என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.....

மூர்த்தி : என்ன தனம் இது .....வந்த இடத்தில் நமக்கு இந்த பிரச்சனை

எல்லாம் தேவையா....

தனம் : இல்லை மாமா... நானும் பிரச்சனை தேவையில்லை என்றுதான்

ஒதுங்கிக் கொண்டு இருந்தேன்... ஆனால் பாவம் அந்தப் பெண் ...அவளுக்கு

இடுப்பு வலி வந்தும்... எங்கே தனக்கு பெண் பிள்ளை பிறக்க போகிறது

என்று... பயந்து கொண்டு அவள் வலி வந்ததை கூட.... டாக்டரிடம்

தெரியப்படுத்தாமல் இருக்கிறால் .என்று சொல்லிக்கொண்டு

இருக்கும்போதே தனத்தை ஒரு செவிலியர் வந்து அழைக்க...

தனத்தை மீண்டும் பரிசோதித்த மருத்துவர் மூர்த்தியை பார்த்து

டாக்டர் : மிஸ்டர் மூர்த்தி... உங்கள் மனைவிக்கு குழந்தையின் அசைவை

இன்னும் எங்களால் உணர முடியவில்லை... இருப்பினும் குழந்தையின்

நலனை கருத்தில் கொண்டு ...கண்டிப்பாக அவர்களுக்கு ஆபரேஷன்

பண்ணி... குழந்தையை நாம் எடுத்தே ஆகவேண்டும்.... ஆனால் பயம்

கொள்ள ஒரு பிரச்சினையும் இல்லை.... நீங்கள் இப்பொழுதே உங்கள்

மனைவியை ஆபரேஷன் செய்ய அனுமதித்து... அந்த அனுமதிப்

பத்திரத்தில் கையொப்பம் இடுங்கள்..என்று சொல்ல தனமும் மூர்த்தியும்

பயந்து கொள்ள....

மூர்த்தி : ( தனத்தின் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு) தனம் நீ

எதற்கும் பயம் கொள்ளாதே ...இப்பொழுது ஆப்பரேஷன் எல்லாம் சகஜமாகி

விட்டது ...ஏனோ தெரியவில்லை... நாம் இத்தனை வருடம் கழித்து பிள்ளை

பெற்றுக்கொள்ள வேண்டும் ...என்ற ஆசை பட்டதால் வந்த விபரீதம் ஆக

கூட இருக்கலாம்....

தனம் : (தன் மனதில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல்)

என்ன மாமா இதற்கெல்லாம் கவலைப்படுகிறீர்கள்... நீங்கள் சொன்னது

போல்.... இப்போதெல்லாம் ஆப்பரேஷன் என்பது சர்வசாதாரணமாக

ஆகிவிட்டது... எனக்கு ஒன்றும் பயமில்லை.. நீங்கள் பயப்படாதீர்கள்.. நான்

தைரியமாக ஆபரேஷன் செய்துகொள்ள ஒத்துக் கொள்கிறேன்... நீங்கள்

வேண்டுமென்றால் பாருங்கள்... நாளை இதே நேரத்தில்... நம் கையில் நம்

குழந்தை இருக்கும் ...நீங்கள் கவலைப்படாதீர்கள்... வீட்டில்

இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...

ஜெகா: (கலங்கிய கண்களுடன் ) தன் கையிலிருக்கும் விபூதியை தனத்தின்

நெற்றியில் பூசி.... அவள் நெற்றியில் ஒரு தங்கைக்கு அண்ணன்

கொடுக்கும் பாச மழையா முத்தத்தை பதித்து...) அம்மாடி தனம்... நீ உன்

குழந்தை... நூறு ஆய்வுக்கு நல்லபடியாக இருப்பீங்க... எனக்கு அந்த

நம்பிக்கை இருக்கிறது... நீ தைரியமாக ஆபரேஷன் செய்து கொள்... நீயும்

உன் குழந்தையும் நலமுடன் வாழ... அந்தக் கடவுள் உனக்கு எல்லா அனு

கிரகத்தையும் வழங்குவார்...

என்று ஜெகவும் மூர்த்தியும் அனுமதி தர ....தனத்திற்கு இன்று ஆபரேஷன்

நல்லபடியாக முடிந்தது....ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த

செவிலியர்... என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க ஆவலாக மனதில்

பதற்றத்துடன் மூர்த்தியும் நின்று கொண்டு இருக்க ...கதிர் ,கண்ணன், ஜீவா,

ராஜா ,நால்வரும் மருத்துவமனையை நோக்கி வர...வந்தவர்கள்

அனைவரும் ...மூர்த்தியை என்ன ஆச்சு ...என்ன சாதாரண

பரிசோதனைக்காக தானே உள்ளே வந்தீர்கள் ...எதற்காக அண்ணிக்கு

அதற்குள் ஆபரேஷன்....என்று கேட்க

மூர்த்தி : இல்லை பிள்ளையின் அசைவு நின்றுவிட்டதால்... பிள்ளை நீண்ட

நேரம் வயிற்றில் இருக்கக்கூடாது... என்று சொல்லி பிள்ளையை

ஆபரேஷன் செய்து எடுத்தால் தான் ...தாய் சேய் இருவரும் நல்ல

முறையில் இருப்பார்கள்... என்று சொன்னதால் ஆபரேஷன் செய்ய

நாங்களும் ஏற்றுக் கொண்டோம்...என்று சொல்லிக்கொண்டு

இருக்கும்போதே செவிலியர் வந்து

செவிலியர் : மிஸ்டர் மூர்த்தி ...உங்களுக்கு பெண் குழந்தை

பிறந்திருக்கிறது... குழந்தையும்... உங்கள் மனைவியும் நன்றாக

இருக்கிறார்கள்...

மூர்த்திக்கு சந்தோஷம்.... அளவு கடந்த சந்தோஷம்...

மூர்த்தி : நான் என் குழந்தையையும்.. மனைவியையும் ...பார்க்கலாமா..,?

செவிலியர் : குழந்தையை நாங்கள் சுவாச அறையில் வைத்து

இருக்கிறோம்.... உங்கள் மனைவியை நீங்கள் போய் பார்க்கலாம்...

என்று சொல்ல ...மூர்த்தி, ஜகா ,கதிர், ஜீவா, கண்ணா,ராஜா .. அனைவரும்

போய் தனத்தைப் பார்க்க... மயக்கத்தில் இருந்து பொறுமையாக

கண்விழித்த தனம்....

தனம் : மாமா நம் பிள்ளை எங்கே ...குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை...,?

மூர்த்தி : (தனக்கே உண்டான சிரிப்பு சிரித்து )இல்லை தனம்... நீயும் நம்

குழந்தையும்... நன்றாக இருக்கிறீர்கள்... குழந்தையை சுவாச அறையில்

வைத்து இருக்கிறார்கள்... நீ அம்மா ஆகிவிட்ட... எனக்கு எவ்வளவு

சந்தோஷம் என்று தெரியுமா....

தனம்: மாமா நீங்களும் அப்பா ஆகிவிட்டீர்கள் ...இந்த ஒரு நொடி என்

மொத்த வாழ்க்கையையும் எனக்கு புதிதாய் உணர்த்திய கணம்... இந்த ஒரு

நிமிடம் வருவதற்காகத்தான்... நான் உங்களை திருமணம் செய்த நாளில்

இருந்து ஏங்கி கொண்டு இருந்தேன்...என்று சொல்லி கதிரை பார்த்த தனம்...

தனம் : டேய் கதிர் இங்கே வாடா

கதிர் அண்ணி நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு ஒன்றும்

ஆகாது

தனம் : தெரியுமடா ...நான் பெறாத பெற்றெடுத்த... என் பிள்ளைகள் நீங்கள்

மூன்று பேர் இருக்கும் பொழுது... இந்த ஜென்மத்தில் எனக்கு ஒன்றும்

ஆகாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ...நீயும் முல்லையும் ... ஒரு

நல்ல வழியை எங்களுக்கு காட்டவில்லை என்றால்.. இன்று உன்

அண்ணனும் நானும் ஒரு பிள்ளைக்கு பெற்றோர்களாக ஆகி இருக்க

முடியாது ...என் வாழ்நாள் முழுவதும் நான் உனக்கும் ...முல்லைக்கும்

நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்...

கதிர்: ( கண்கள் கலங்கி) அண்ணி நான்.. எத்தனையோ முறை சொல்லி

இருக்கிறேன்... நீங்கள் என் அன்னை... என் அன்னைக்கு ஒரு பிள்ளையை

...அந்த கடவுள் எப்பொழுது கொடுப்பார்... என்று நாங்கள் அனைவரும் ஏங்கி

கொண்டு இருந்த சமயத்தில்... அந்த கடவுள் உங்களுக்கு... ஒரு பிள்ளையை

கொடுத்தது எங்களுக்கு அளவிலா சந்தோஷம்...

தனம் : உண்மை தான் டா ...கடவுள் நேரில் வர மாட்டார் ..என்று

சொல்வார்கள்... அதே போல் தான்... நீயும்.. முல்லையும்..அன்று எடுத்த

முயற்சி... இன்று நானும் தாய் ஆகி விட்டேன்....

ஜெக : அம்மாடி தனம்... என்னை நீ தாய் மாமனாக ஆக்கிவிட்ட...இந்த

நிமிடம் இந்த உலகத்தில் என்னை விட சந்தோஷம் படுபவர்கள் வேறு

யாரும் இல்லை.... இப்பொழுது எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா.....

இப்பவே என் மருமகளை என் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் விட

வேண்டுமென்று இருக்கிறது...என்று சொல்ல அனைவரும் சிரித்து

கொண்டே இருக்கபக்கத்து அறையிலிருந்து அலறும் சத்தம் கேட்டு....

அனைவரும் அங்குமிங்குமாக ...ஓடித் திரிந்து கொண்டிருக்க ...பதறிப்போன

தனம்

தனம் : மாமா அங்கு என்ன சத்தம் கொஞ்சம் பாருங்களேன்...?

மூர்த்தி : நீ இரு நான் பார்க்கிறேன்... என்று பார்த்தவர்...மூர்த்தியை

தொடர்ந்து கதிர், ஜீவா ,இருவரும் போனவர்கள் சிறிது நேரம் கழித்து

உள்ளே வர

தனம் : என்ன மாமா என்ன பிரச்சனை...,?

மூர்த்தி : இல்லை தினம் காலையில் நாம் காவல்துறையில் ஒருவனை

பிடித்து கொடுத்தோமே.. அவனின் மனைவிக்கு பிரசவம் போல.. ஆனால்

குழந்தை இறந்துவிட்டதாக ...அந்த பெண் கதறி அழுது கொண்டிருக்கிறா...

தனம்: ஐயோ என்ன மாமா இது ...நான் போய் பார்க்கட்டுமா..,?

மூர்த்தி : யாரு டா இவ.... அறிவு இருக்கா உனக்கு ...குழந்தை பெற்ற உடன்...

இந்த மாதிரி விஷயத்தையெல்லாம்.. நீ போய் பார்க்க கூடாது.. நான்

உன்னை அனுமதிக்க மாட்டேன்...

தனம் : ஐயோ பாவம் மாமா... அவர்களுக்கு பெண் குழந்தை

பிறக்கப்போகிறது என்று பயந்து கொண்டு... அவள் தனக்கு இடுப்பு வலி

வந்தும் தெரியப்படுத்தாமல் விட்டு விட்டா... அதனால் தான் என்னவோ

தெரியவில்லை... குழந்தைக்கு இந்த நிலைமை... ஆமாம் அவளுக்கு என்ன

பிள்ளை பிறந்தது...

மூர்த்தி : ஆண் பிள்ளைதான் தானம்....

தனம் : அடக்கடவுளே... அவள் கணவன் ஆசைப்பட்ட ஆண் பிள்ளையை

தான்... அவள் பெற்றெடுக்க இருந்திருக்கிறாள்... ஆனால் அந்த கடவுளுக்கே

அது பொறுக்கவில்லை... போல என்ன மாமா இது...?

ஜீவா : என்ன பிரச்சனை... யாரைப் பற்றி நீங்கள் பேசிக்

கொண்டிருக்கிறீர்கள்...மூர்த்தி காலையில்... சசி, வேங்கையன்

பிரச்சனையை சொல்ல... வேங்கைன்னை ஜகா காவல்துறையினரிடம்

புகார் செய்து ..ஜெயிலில் தள்ளி எதையும் சொல்ல...

கதிர் : என்ன தைரியம் அவனுக்கு... என் அண்ணியை மரியாதை

இல்லாமல் பேசினானா... இருங்கள் நாளை காலை அவனை ஜெயிலில்

போய் பார்த்து நான் அவனை நல்லா கவனிக்காசொல்கிறேன்...

தனம் : ( சிரித்துக் கொண்டே) நானும் இதைத்தான் சொன்னேன்... எனக்கு

மூன்று கொளுந்தங்கள் இருக்கிறார்கள்... வந்தால் உன்னை உண்டு

இல்லை என்று பண்ணி... உன் உடம்பில் உன் கையை இல்லாமல் ஆக்கி

விடுவார்கள்... என்று சொன்னேன்...

மூர்த்தி : ஆமாண்டி அவன் ஏற்கனவே ஏகுருவான்... அவனிடம் இன்னும் ...நீ

சாவி கொடு ...இன்னும் நல்ல ஆடட்டும்....ஆடுவான்....

ஜீவா : அண்ணி எப்படி இருக்கீங்க ..?

தனம் :நான் நல்ல இருக்கேன் டா மீனா எப்படி இருக்கிறா ...?

ஜீவா : அவள் கொலை காண்டில் இருக்கிறாள்...

மூர்த்தி : ஏன் டா...?

ஜீவா : அண்ணா அவளுக்கு இன்றைக்கு தான் ப்ரெசவத்திற்கு தேதி தந்து

இருந்தார்கள் ...அனால் இன்னும் வலி வராததால் நாளை பார்ப்போம் என்று

சொல்லி விட்டார்கள் ..

கண்ணா : ஐயோ குட்டி அண்ணி நான் தான் இந்த வீட்டின் முதல் வாரிசை

பெற்று தர போகிறேன்... என்று ரொம்ப சந்தோஷமா சொன்னங்க

..போச்சி...போங்க ஜீவா அண்ணா ...நீ செத்தா ..

ராஜா : அதுக்கு என்ன பண்ணுவது ...யாருக்கு ..எப்போ என்ன நடக்குமோ ...

அது அப்போ அப்போ நடந்தே ஆகும் ...

கண்ணா : யாருக்கு என்ன நடக்குதோ... எனக்கு தெரியாது... அனால் இப்போ

குட்டி அண்ணியோட ...குழந்தை தான்... நம் வீட்டில் குட்டி பிள்ளை ...இதை

வைத்து நான் இன்னும் அவர்களை களைத்து.... ஜீவா அண்ணணனை குட்டி

அண்ணியிடம் அடி வாங்க வைப்பேன் பாரு ...என்று கண்ணா சொல்ல

அனைவரும் சிரிக்க ..என்று சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டு

மகிழ்ச்சியுடன் இருக்க... செவிலியர் தனம் மூர்த்தியின் குழந்தையை

கொண்டு வந்து... தனம் கையில் கொடுக்க..

"தனம் தன் குழந்தையின் முகத்தைப் பார்த்தவள்"... "கண்ணீர் மல்கி

அந்தக்குழந்தையின் பாதத்தை" ..."தன் நெற்றியால் வணங்கி"... "இந்த

பிள்ளையை ...நான் பெற எனக்கு ...அருள் புரிந்த எல்லா கடவுளுக்கும்

நன்றி சொல்கிறேன்... என்று சொல்லி" ...""அந்த குழந்தையின் பாதத்தில்

முத்தமிட"....

தனம்: டேய் கதிர், ஜீவா,கண்ணா , இங்கே பாரு உங்கள் பிள்ளையை....

ராஜா : அப்போ நீங்க எல்லாம் சித்தப்பா ஆகி விட்டிர்களா?

மூர்த்தி : இல்லை ராஜா நம் வீட்டில் எத்தனை பிள்ளைகள் யாருக்கு

பிறந்தாலும் ...எல்லா பிள்ளைகளும் எல்லோரையும் அம்மா அப்பா என்று

தான் அழைக்க வேண்டும் ...

கண்ணா : அப்போ நான் இப்பவே அப்பா ஆகி விட்டேனா ..?

மூர்த்தி :கதிருக்கு முதன் முதலில் பிள்ளை பிறந்த உடனே நாம் அப்பா ஆகி

விட்டோம் ஆடா...

தனம் : மாமா இந்தாங்க உங்கள் பெண்ணை உங்கள் கைகளால் தூக்குங்க ...

..."குழந்தையின் கால்கள் மூர்த்தி அவர்களின் மேல் எட்டி உதைக்க"....

திடுக்கிட்டு எழுந்த அவர்....

பூர்வீக வீட்டில் தன் பெண் குழந்தை லதா பாண்டி ...தன் மேல் அமர்ந்து

இருப்பதையும் ... அவள் சலங்கையிட்ட காலால் ...தன்னை உதைத்துக்

கொண்டு இருந்ததை... உணர்ந்து மூர்த்தி அவளை அள்ளி கன்னத்தில்

முத்தமிட்டு ....

மூர்த்தி : ( தனக்குள்) ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்த கதையை நாம்

யோசித்துப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறோம் என்று நினைத்து

....அவன் யாராக இருக்கக்கூடும் அந்த வேங்கையனாக கத்தான்

இருப்பானோ... அப்பொழுது லதா பாண்டி நம்பிள்ளை இல்லையா...

நம்பிள்ளை ஆண்பிள்ளையா... என்ன இது புது குழப்பம்... இல்லை... லதா

பாண்டி என் குழந்தை தான் ...எனக்கும் தனத்திற்கும் பிறந்த என் வைரம்...

இந்த மாணிக்கத்தை யாருக்காகவும்... எதற்காகவும்... நான் விட்டுக்

கொடுக்க மாட்டேன்... மீண்டும் அவனிடம் இருந்து கைபேசி வாயிலாக

அழைப்பு வரட்டும்... நான் யார் என்பதை அவனுக்கு உணர்த்து கிறான்....

என்று சொல்ல தனம்

தனம் : என்ன ...மாமா.... மாமா மாமா... என்று எவ்வளவு நேரம்

கூப்பிடுகிறேன்... என்ன யோசனையில் இருக்கிறீர்கள்...?

மூர்த்தி: சொல்லு தனம் என்ன ஆச்சு...?

தனம் : என்ன ஆச்சா ....மணிய பார்த்தீங்களா... 9 மணிக்கு மேலாகிவிட்டது...

எல்லோரும் உங்களுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...

வாருங்கள் நாம் போய்... இரவு உணவை உண்ணுவோம் ...

என்று சொல்ல அனைவரும் இரவு உணவை... உண்ண... ஒன்றாக அமர்ந்து

இருக்கும் வேளையில்...

ஜீவா தான் எதையோ பறிகொடுத்தது போல் மீனாவின் அருகில்

அமைதியாக அமர்ந்திருக்க .....

மூர்த்தி நாளை விடிந்தால் தன் குழந்தையை யாரேனும் சொந்தம்

கொண்டாடி கொண்டு வருவார்களா என்று பயத்தில் பதறிப்போய் உறைந்து

இருக்க......

கண்ணா இத்தனை வருடம் கழித்து தன் மனைவியின் ராதாவின்

நினைவுகளை மனதில் சுமந்து இருக்க.....

விக்டரின் கையில் ஜீவா அண்ணனின் கைப்பேசி எப்படி போனது என்று

கதிர் யோசித்துக் கொண்டு இருக்க....தன் வீட்டு செல்வங்கள் ஆனஆறு

பிள்ளைகளும் சேட்டை செய்து கொண்டு இருப்பதை கூட கவனிக்காமல்...

ஒவ்வொருவரும் தான் தட்டில் போட்ட சாப்பாட்டை ...பிசைந்துகொண்டு

இருந்தார்கலே தவிர.... யாரும் சாப்பிடவில்லை... இதனைப் பார்த்த லட்சுமி

அம்மா

லட்சுமி : என்னங்கடா ஆனது உங்களுக்கு... சாப்பாடு போட்டு எவ்வளவு

நேரம் ஆகிவிட்டது ...இன்னும் பிசைந்து கொண்டே இருக்கிறீர்கள்

..சாப்பிடுங்கள் ...என்று சொல்ல அனைவரும் தன் சுயநினைவுக்கு வந்து...

சாப்பிட ஆரம்பித்தார்கள் ...அனைவரும் சாப்பிட்டுவிட்டு... சிறிது நேரம்

அமர்ந்திருக்க... வீடே அமைதியாக இருந்தது...

தனம் : முல்லை குழந்தைகள் எல்லாம் தூங்கப் போகிறார்கள் போல... நான்

போய் படுக்க வைத்து விட்டு வருகிறேன்...

முல்லை : அக்கா நான் எங்கள் அறைக்கு அழைத்துச் செல்கிறேன்...

பிள்ளைகள் 6 பேரும் நான் தனம் அம்மாவின் அறையில் தான் படுப்பேன்

என்று அடம்பிடிக்க... வேறு வழி இல்லாமல் தனம் சிரித்துக்கொண்டே...

குழந்தைகளை ஆசையோடும் அவள் அறைக்கு அழைத்து சென்றாள்....

தனம் :மாமா நீங்கள் இங்கு பேசிவிட்டு அப்புறம் வந்து படுங்க... நான்

பிள்ளைகளுக்கு கதை சொல்லி.. தூங்க வைக்கிறேன் ...எல்லோருக்கும்

இரவு வணக்கம் ...நாளை காலை பார்ப்போம்.... என்று சொல்லிவிட்டு.... 6

பிள்ளைகளுடன் தனம் தனது அறைக்குள் போக....

கதிர் : ( ஜீவாவிடம் )அண்ணா உன் கைபேசி காணோம் என்று முல்லை

சொன்னால் ...என்ன ஆனது ...?

ஜீவா : ?????????????????????????????????????

Continue Reading

You'll Also Like

27.9K 1.1K 17
இது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை.
3 1 1
some feeling's for my mom
6.4K 1.1K 23
காதலின் 💞தேடலில் நிகழும் தவிப்புகள்.....
88 0 13
மூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .