சுடர் - 9

1.8K 70 5
                                    

ராசாத்தி அவளை அறைய போகிறாள் என்று தெரிந்தது இளமதிக்கு. முருகரை மனதில் எண்ணிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள் இளமதி.

ஒரு நிமிடம் காத்திருந்தவள், "என்ன வலிக்கவே இல்லை!" என்று எண்ணி கொண்டு மெதுவாக அவள் விழிகளை திறந்தாள்.

இளமதியை அடிக்க ஓங்கிய கரங்களை அவன் வலிய கரம் பற்றி இருந்தது. இளமதி நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அவன் கண்கள் சிவந்து அவன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன.

ராசாத்தி அதிர்ச்சியாக அவன் முகத்தை பார்த்தாள். "என்னவே தடுக்க உனக்கு எவ்வளவு தைரியம்? எங்க வீட்டு பொண்ண, சொத்துக்காக ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ என்னவே அடிக்க வரியா நீ நான் யாருன்னு தெரியுமா உனக்கு?" அவள் கோபமாக அவனை சாடினாள்.

"நீங்க யாரா வேண்டுமானாலும் இருங்க எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்ல. இவ என் மனைவி, என் கண் முன்னால இவளுக்கு ஒரு ஆபத்தும் வர நான் அனுமதிக்க மாட்டேன். அத நீங்க நினைவுல வச்சுக்கோங்க" என்று அலட்சியமாக கூறி அவள் கரத்தை உதறி விட்டு விட்டு அவன் இன்னொரு கரத்தால் இளமதியை பிடித்து அவளை அவனோடு அழைத்து சென்றான்.

ராசாத்தியின் முகம் அவமானத்தில் கறுத்தது. மணிவாசகம் மனம் நெகிழ்ந்தது. இப்படி ஒரு பாதுகாப்பு தான் இளமதிக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். இப்பொழுது அது கிடைத்திருக்க அவர் மனம் மகிழ்ந்தது.

அங்கே நின்றிருந்த ராசாத்தியை பார்த்தார், "இவளுக்கு இப்படி தான் வேணும்" என்று எண்ணி மனதில் சந்தோஷப் பட்டு கொண்டார்.

"அம்மா வா போகலாம்" ரம்யா அவள் கையை பிடித்து இழுத்து அங்கிருந்து அழைத்து சென்றாள். சுந்தரம் அனைத்தையும் ஏற்கனவே அறிந்திருந்தால் அவருக்கு ராசாத்தியின் நடவடிக்கைகள் எந்த ஒரு பதட்டத்தையும் கொடுக்கவில்லை.

"மா! அந்த மாப்பிள்ளை யார் தெரியுமா?" ரம்யா விழிகளை உருட்டி கேட்க, "அவன் யாரா இருந்தா என்ன, எவ்வளவு தைரியம் இருந்தா என் கைய பிடிச்சு தடுத்து அவளை காப்பாத்தி இருப்பான்" அவள் கோபத்தில் கனைத்தாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now