சுடர் - 22

1.8K 74 7
                                    

அன்று பனி பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. இலைகள் எல்லாம் பனியால் மூடப்பட்டு இருந்ததை அவள் கவனித்தாள். அவள் உடலில் பெரிய ஸ்வெட்டர் அணிந்து, ஒரு தடிமனான கம்பளியை அவள் போர்த்தி இருந்த போதிலும் குளிராக இருந்ததை உணர்ந்தவள், அவன் இரவு உடையை மட்டும் அங்கு வந்ததை நினைத்து வருந்தினாள்.

விரைவாக அவனிடம் சென்றாள். யாரோ அவன் அருகில் வந்ததை உணர்ந்து, அவன் நிமிர்ந்து பார்த்தான்.

"உள்ள வந்துருங்க, இங்க குளிர் ரொம்ப அதிகமா இருக்கு" அவள் அக்கறையுடன் அவன் முகத்தை பார்த்து கூறினாள்.

"ஆமா! குளிர் அதிகமா இருக்கு, நீ உள்ள போ. நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன்" அவன் பதில் அளித்தான்.

"அது! நீங்களும்..." அவள் பேசி முடிப்பதற்குள், "உள்ள போன்னு சொன்னேன்" அவன் கடுமையான குரலில் அவள் முகத்தை பார்த்து கூறினான். அவளால் எதுவும் பேச முடியவில்லை.

"சரி! இதை இங்க வச்சுட்டு போறேன்" என்று கூறி அவள் போர்த்தி இருந்த கம்பளியை அவன் அருகில் வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அறைக்கு வந்தும் அவளுக்கு குழப்பமாக இருந்தது. "ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறான்? இந்த அளவுக்கு அம்மாவின் மீது அன்பு வைத்திருக்கிறானா?" என்று யோசித்தாள்.

இன்னொன்றும் அவள் மனதை குழம்ப செய்தது. "அந்த இடத்தில் இரண்டு கல்லறைகள் இருந்தனவே. இன்னொரு சமாதி யாருடையது?" என்று குழம்பினாள். அவளுக்கு தெரிந்து அவளின் மாமனாரின் சமாதி அவர்கள் ஊரில் தான் இருக்கிறது. அப்பொழுது இங்கு இருக்கும் இன்னொரு சமாதி யாருடையது? அதை எல்லாம் மனதில் அசைப் போட்டவாறே அன்று இரவு உறங்கினாள்.

காலை அவள் கண் விழித்த போது, பரிதி கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்தாள். எப்பொழுது வந்திருப்பான்? அவள் வெகு நேரம் விழித்து கொண்டு தான் இருந்தாள், ஆனால் அவன் அறைக்கு திரும்பி இருக்கவில்லை.

"பாவம்! வெகு நேரம் விழித்து இருக்கிறான். இப்பொழுதாவது உறங்கட்டும்" என்று எண்ணி அவள் எழுந்து வெளியே சென்றாள். பாட்டி சமையல் அறையில் இருந்தார்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now