♥️

5.5K 86 9
                                    

இளமதி, பெயருக்கு ஏற்றவாறே சந்திரனை போல் மென்மையானவள். மதி மயக்கும் அவள் வதனம். அன்பு, அறிவு, ஆற்றல் என அனைத்து நற்பண்புகளையும் அவளுக்கு அளித்த கடவுள், அவள் வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் கொடுக்க ஏனோ தவறிவிட்டார்.

பல துன்பங்களை அவள் வாழ்வில் அவள் சந்தித்த பொழுதும், விதியின்  விளையாட்டை புன்னகையுடனே எதிர் கொண்டாள். என்ன நேர்ந்தாலும் அதை தைரியமாக சந்திக்கும் திறன் கொண்டிருந்தாள்.

அதிர்ஷ்டத்தை தனதாக்கி பிறந்தவள் இருப்பினும் அது சில நாட்களே நீடித்து இருக்க, அவள் வாழ்வில் நிகழ்ந்த அந்த துயர சம்பவத்திற்கு பிறகு அதிர்ஷ்டமானவள் என்று கூறி வாழ்தியவர்களே அவளை அதிர்ஷ்டம் கெட்டவள் என்று தூற்ற தொடங்கினர்.

அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல், அவள் மனதிற்கு சரி என்று தோன்றியதை செய்து கொண்டு அவள் வாழ்வை தொடர்ந்தாள்.

பிரகாசமான சந்திரனை கார்மேகங்கள் சூழ்ந்த பொழுதும், அது அதை தகர்த்து தனது சுடரொளியை பூமிக்கு கொடுப்பது போல், அவள் வாழ்வில் குறுக்கிட்ட அனைத்து துன்பங்களையும் அவள் நற்குணத்தினால் தகர்த்து, அவள் புன்னகையை மட்டுமே அனைவருக்கும் பரிசளித்தாள்.

பரிதி, அன்பு, பாசம், அரவணைப்பு என எதையும் வாழ்வில் உணராதவன். பெயருக்கு ஏற்றவாறு வீரமும் ரௌத்திரமும் அளவுக்கு அதிகமாகவே அவனிடம் இருந்தது.

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவை என மனிதன் கருதும் செல்வங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்த பொழுதும் அவனை அரவணைத்து பாசம் காட்ட ஒரு தாய் அவனுக்கு இல்லை.

அதுவே பிரகாசமாக இருக்க வேண்டிய அவன் வாழ்வை இருளடைய செய்தது. புன்னகை என்னும் சொல்லுக்கு பொருளே அறியாதவன் போல், தவறியும் அவன்  புன்னகைத்தது இல்லை.

அவனை சுற்றி இருந்தவர்கள் அவனை ஒரு பேயை பார்ப்பது போல தான் பார்த்தார்கள். மற்றவர் மனதை புண்பட செய்வது அவனுக்கு இயல்பான செயல். சிறு வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் பணத்தை பாதுகாப்பாக கொண்டு தவறான  பாதையில் வளர்ந்த அவன் மனதில் உறவுகள், உணர்வுகள் என எதுவும் தோன்றியதே இல்லை.

எடுத்த செயல் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது அவன் குறிக்கோள், அதில் வெற்றி பெற எந்த ஒரு எல்லையையும் அடைய அவன் தயங்கியது இல்லை. தோல்வி என்ற ஒன்றை அவன் வாழ்வில் ஒருமுறை கூட ஒப்புக் கொண்டதும் இல்லை.

வாழ்வை வணிகமாக எண்ணியே அவன் வாழ்ந்து வந்தான். அப்படி பட்ட வாழ்வில் அவன் சந்தித்த முதல் தோல்வி, அவன் மனதில் இருந்த காயத்தை மேலும் ரணமாக்கி இருந்தது.

சூரியன் என்று பெயரை வைத்துக் கொண்டு அவன் வாழ்வின் வெளிச்சத்தை மறைத்து, இருளில் வாழ்ந்து கொண்டு இருப்பவன்.

இப்படி தனி தனியாக இருவேறு திசையில் பயணித்து கொண்டு இருந்தவர்கள் விதியின் விளையாட்டால் ஏதோ ஒரு சூழலில், ஒரே திசையில் பயணிக்க நேர்ந்தால் அதன் விளைவுகள் என்ன??
.
.

வணக்கம் நண்பர்களே!

இது என்னுடைய மூன்றாவது நாவல். என்னுடைய முதல் இரண்டு நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை போல் இதையும் ஆதரியுங்கள். உங்களுடைய மதிப்புமிக்க கருத்துகளை பகிர்ந்து என் பிழைகளை திருத்திக் கொள்ள உதவுங்கள்.

-தோழி ஆர்த்தி😊

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now