சுடர் - 32

1.7K 72 6
                                    

"என்ன மாமா! நான் இவ்வளவு பேசிட்டு இருக்கேன், நீங்க எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்? பேசாம இங்கு இருந்து கிளம்பி வாங்க, நான்..." அவள் பேசி முடிப்பதற்குள், "இல்ல மா அது முடியாது. அப்படி ஒரேயடியா வர முடியாது. அம்மா மேல கோபம் இருந்தாலும் அவுங்கள இந்த நிலையில தனியா விட்டுட்டு வர முடியாது" என்று அவன் கூற இளமதிக்கு கோபம் அதிகரித்தது.

"நீங்க செய்யுற எதுவும் நியாயமே இல்ல மாமா. நான் கிளம்புறேன்" என்று கண்ணீருடன் கூறி எழுந்து வேகமாக நடக்க தொடங்கியவள், யாரோ அவள் வழியை இடைமறித்து நிற்பதை உணர்ந்து கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள், பரிதி அங்கு நின்றிருந்தான்.

அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. "எழுந்துட்டீங்களா? எதாவது சாப்பிடுறீங்களா?" என்றாள் அக்கறையுடன்.

"செய்யுறதை எல்லாம் செஞ்சுட்டு, இப்போ எதுவுமே நடக்காத மாதிரி பேசுறியா?" என்று ஏளனமாக வந்த பெண் குரல் ராகவி உடையது தான் என்று உணர்ந்த இளமதிக்கு குழப்பமாக இருந்தது.

"என்ன?" என்றாள் அதே குழப்பத்துடன்.

"அடடா! என்ன ஒரு நடிப்பு. இவ்வளவு நேரம் நீ பேசின எதையும் நாங்க கேட்கலைனு நினைச்சுட்டு இருக்காத. நாங்க இங்க வந்து பத்து நிமிடம் ஆச்சு.

நீ காதலின் இலக்கணத்தை சொல்லி என் அண்ணன் மனச மாத்த முயற்சி செஞ்சு எல்லாவற்றையும் உன் கணவன் பார்த்துட்டு தான் இருந்தாரு" என்றாள் ஏளனமாக.

"அதுக்கு என்ன இப்போ? நான் உண்மைய தான் சொன்னேன். உன் அண்ணன் மாதிரி தைரியம் இல்லாத ஒருவன் காதலிக்கவே கூடாது" என்றாள் இளமதி கோபமாக.

"பாருங்க பரிதி! உங்க முன்னாடியே எவ்வளவு தைரியமா பேசுறா! நான் தான் சொன்னேனே, சின்ன வயசுல இருந்தே இவளுக்கு என் அண்ணன் மேல காதல் ஆனா அவர் என் அம்மாவுக்கு பயந்து ஒத்துகலைனு. இப்போ அதிகாரம் எல்லாம் அவ கையில இருக்கிறதால என் அம்மா இவளை ஏத்துப்பாங்கனு நினைச்சு இப்படி பேசிட்டு இருக்கா.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now