சுடர் - 45

1.6K 73 12
                                    

"அவ ஆதங்கத்துல என்னவோ பேசுறா, அதை பெருசா எடுத்துக்காத பா. தப்பு என்னுடையது! அதுக்கு அவ மேல நீ கோபப் படுறது எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு" என்றார் பாட்டி இடைமறித்து.

"உங்களுக்கு குற்ற உணர்ச்சி எல்லாம் இருக்கா பாட்டி? அப்போ நீங்க அதிகமா வருத்தப் பட வேண்டியது என் விஷயத்தை நினைச்சு தான். இத்தனை வருஷமா எனக்கு செஞ்ச துரோகத்தை நினைச்சு தான் நீங்க குற்ற உணர்வுல வருந்தணும்!

ஆனா குற்ற உணர்வு கூட இவளை மாதிரி குறுக்கு புத்தி இருக்க ஒருத்திக்காக தான் வருதுன்னு நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு" என்றான் ஏளனமாக.

"போதும் மாமா! சும்மா உங்க இஷ்டத்துக்கு குற்றச்சாட்டுகளை அடுக்கிட்டு போகாதீங்க! பாட்டி செஞ்ச தப்புக்கு நான் எந்த வகையில பொறுப்பாக முடியும்? அப்போ உங்கள மாதிரி நானும் சின்ன பொண்ணு தான். என்னவோ எட்டு வயசுல இருந்தே உங்க குடும்பத்தை கெடுக்க நான் திட்டம் போட்டு கொடுத்த மாதிரி பேசுறீங்க!" என்றாள் எரிச்சலாக.

"என் குடும்பத்தை கெடுக்குற வேலைய தான் தலைமுறை தலைமுறையா செஞ்சுக்கிட்டு இருக்கீங்களே! உன் கிட்ட வேற எப்படி பேசுறது? நீ சொன்ன மாதிரி அப்போ உனக்கு எட்டு வயசு தான். அந்த வயசுல நீ எதுவும் பண்ணல, ஆனா உன் அம்மா அப்போ அந்த வேலையை செஞ்சுட்டு இருந்தாங்க" என்றான் கோபமாக.

"பாட்டி... பாருங்க, என்ன இவ்வளவு நேரம் திட்டி பேசுனாரு, அதை நான் பொறுத்துக்கிட்டேன். இப்போ உயிரோடு இல்லாத என் அம்மா மேல பழி சொல்லி பேசுறாரு. இதையெல்லாம் கேட்டுட்டு என்னால சும்மா இருக்க முடியாது" என்றாள் பற்களை கடித்து கொண்டு.

"ஏன் பா, ஏன் சம்பந்தம் இல்லாம என்னென்னவோ பேசிட்டு இருக்க?" பாட்டி குழப்பமாக அவன் முகத்தை பார்த்தார்.

"நான் ஒன்னும் பொய் சொல்லல பாட்டி. உண்மையை தான் சொல்லுறேன். உங்களுக்கே தெரியாம, உங்க பின்னாடி இருந்து உங்களை தூண்டி விட்டு இந்த தப்பெல்லாம் செய்ய வச்சது இவ குடும்பம் தான்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now