சுடர் - 24

1.7K 70 7
                                    

அவர்கள் சென்ற பிறகும் அவன் முகத்தில் பதிந்திருந்த விழிகளை விளக்காமல் அவள் பார்த்துக் கொண்டு இருக்க, "இன்னிக்கு என் முகம் எதாவது வித்தியாசமா தெரியுதா?" என்றான் புருவத்தை உயர்த்தி.

"இல்ல.. இல்ல, முகத்தில் எதாவது காயம் இருக்கான்னு பார்த்தேன்" என்று கூறி அவள் மறுக்க, அவன் புன்னகைத்தான்.

"சரி! இப்போ வலி இல்லையே? நல்லா இருக்கீங்களா?" என்றாள் வருத்தத்துடன்.

"இப்போ வலி எதுவும் இல்லை. நீ கவலை படும் அளவுக்கு இது பெரிய காயமும் இல்ல. அதனால ரொம்பவும் மனசை வருத்திக்காதே" என்றான் அவன் மென்மையாக புன்னகைத்து.

"எப்படி ஆக்சிடன்ட் நடந்துச்சு? நீங்க ஏன் வண்டி ஓட்டிட்டு போனீங்க?" என்றாள். "அதெல்லாம் எப்பவும் ஓட்டுவது தான். ஆனா, இன்னிக்கு இப்படி நடக்க காரணம் நீ தான்" என்றான் அவளை முறைப்பது போல் பார்த்து.

"நானா? நான் என்ன செஞ்சேன்?" அவள் அதிர்ச்சியாக வினவ, "பின்ன, ஊர்ல இருந்து வந்ததில் இருந்து ரெண்டு பேரும் பேசிக்க கூட நேரம் கிடைக்கல. சரி தினமும் காலையில் உன் முகத்தை பார்த்துட்டு போனாலாவது நன்றாக இருக்கும்னு தான் தினமும் அதையே ஒரு பழக்கமா வைத்திருந்தேன்.

நீயோ இன்று நான் கிளம்பும் முன்னரே கிளம்பி விட்டாயே‌. அதான், அதே சோகத்தில் ஓட்டி வந்து மரத்தில் மோதி கொண்டேன். உன் முகத்தை பார்த்து விட்டு வந்திருந்தாள் அந்த நாள் முழுவதும் நன்றாக சென்றிக்கும். ஆனா இப்போ அது மாறிடுச்சு" என்றான் சோகமாக சொல்லவது போல்.

அவன் பேசியதை கேட்டு கொண்டு நின்றிருந்தவளின் விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது‌. அவன் விளையாட்டாக சொன்னதை தவறாக புரிந்து கொண்டு அழுகிறாளே என்று எண்ணி அவள் முகத்தை சோகமாக பார்த்தான் அவன்.

ஆனால் அவளோ இறந்து போன தந்தை அடிக்கடி சொல்வதை அவன் சொல்ல கேட்டு அதனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நின்றிருந்தாள்.

"சாரி மதி! நான் சும்மா உன்ன சிரிக்க வைக்க தான் அப்படி சொன்னேன்" என்றான் குரலில் மிகுந்த வருத்தத்துடன்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now