சுடர் - 44

1.5K 75 11
                                    

அழகிய காலை பொழுதை ரசித்தவாறே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார் பாட்டி. "பாட்டி, மாமா எங்க இருக்காருனு எதாவது தெரிஞ்சுதா? அவர் இங்கிருந்து போய் நாலு நாள் ஆச்சு" என்றாள் நந்திதா வருத்தமாக.

"எங்க போயிட போறான்? எங்க போனாலும் இங்க தான் வரணும், நீ ஒன்னும் வருத்தப் படாதே. உன் அப்பாவும் தாத்தாவும் அவனை தேடி தானே போயிருக்காங்க, நிச்சயம் கண்டுபிடித்து கூட்டிட்டு வருவாங்க" என்றார் உறுதியாக.

"அப்புறம் பாட்டி.‌.." அவள் தயங்க, "என்ன மா?" அவர் குழப்பமாக கேட்டார். "நீங்க பாட்டுக்கு இளமதி கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்காமலே எனக்கும் மாமாவுக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணிட்டீங்க. இதனால எதுவும் பிரச்சனை வராதா? அந்த இளமதி எந்த பிரச்சனையும் செய்ய மாட்டாளா?" என்றாள்.

"பிரச்சினை செய்ய அவ யாரு? அப்படி எல்லாம் எந்த பிரச்சனையும் வர நான் அனுமதிக்க மாட்டேன், நீ அதையெல்லாம் நினைச்சு மனசை வருத்திக்காத" என்றார் அவளுக்கு நம்பிக்கை தரும் விதமாக, அவள் மனம் குளிர்ந்தது.

அவர்கள் பேசிக் கொண்டு இருந்த போது கார் ஒன்று அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தது. இருவரும் யார் என்று பார்த்தார்கள்.

அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அங்கு நின்றிருந்தவன் பரிதி. அவனை பார்த்ததும் நந்திதாவின் முகம் மலர்ந்தது. "பாட்டி, மாமா வந்துட்டாரு!" என்றாள் குதூகலமாக.

பாட்டியும் இன்முகத்துடன் அவனை வரவேற்றார். "எங்க டா கண்ணா போயிட்ட இவ்வளவு நாளா? உன்ன பார்க்காம நாங்க எல்லாரும் ரொம்ப துடிச்சு போயிட்டோம்" என்றார் கண்களில் கண்ணீரோடு.

"அதான் இப்போ வந்துட்டேனே பாட்டி, எதுவும் வருத்தப்படாதீங்க! வாங்க உள்ள போய் பேசலாம்" என்று கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

"சரி, இவ்வளவு நாள் எங்க இருந்த நீ?" என்றார் கரிசனமாக. "அப்பா வீட்டுல தான் இருந்தேன் பாட்டி" என்றான். அவருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது, "என்றும் இல்லாமல் இப்போது புதிதாக அப்பா என்று அழைக்கிறானே!" என்று தோன்றியது அவருக்கு.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now