சுடர் - 37

1.5K 71 3
                                    

"வேளாவேளைக்கு சரியா சாப்பிடுங்க‌. அங்க போயும் பிஸினஸ் மீட்டிங்னு இருந்துட்டு சாப்பிடாம இருக்காதிங்க‌.

இதுல உங்க டிரஸ் இருக்கு. மத்த ஃபைல்ஸ் எல்லாம் இந்த சூட்கேஸ்ல இருக்கு‌. அங்க போய் அவசரத்துல தேடிட்டு இருக்காதிங்க" என்று பேசியவாறே அவன் உடைமைக்ளை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் இளமதி‌.

அவை எதுவும் அவன் செவிகளை எட்டவில்லை. அடுத்த ஒரு வாரம் அவளை பார்க்க முடியாது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், அவனுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து பொறுப்பாக எடுத்து வைத்து கொண்டு இருந்தவளை பார்க்க மிகவும் அழகாக இருந்தது.

மனதை மயங்க செய்யும் அவள் மதி முகத்தை ரசித்தவாறே அவள் எதிரில் அமர்ந்திருந்தான்.

"நான் இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன், நீங்க எதுவும் பேசாம இருக்கீங்க?" என்றாள் முகத்தை கோபமாக வைத்து கொண்டு.

"என்ன ஒருவாரம் பிரிஞ்சு இருக்கணும்னு கவலை இல்லாதவங்க சொல்றதை எல்லாம் நான் எதுக்கு கேட்கணும்!" என்றான் தோள்களை குழுக்கி. அவள் எதுவும் பேசாமல் மௌனமாக அங்கிருந்து எழுந்து அவள் அறைக்கு சென்று விட்டாள்.

அவன் பிரிவை எண்ணி அவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது. அதை அவனிடம் காட்டி கொள்ள கூடாது என்று எண்ணியே மற்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்தினாள்.

ஆனால் அவன் மீண்டும் மீண்டும் அவர்கள் பிரிவதை பற்றியே பேசியதும் அவளாலும் அதை பொறுத்து கொள்ள முடியாமல் அவள் அறைக்கு வந்து விட்டாள்.

"இந்த பிரிவு நிரந்தரம் ஆயிட கூடாதுனு தான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன் பதி. உங்களுக்கு இது எதுவும் தெரியாது, எனக்கு உங்களை விட்டு பிரிந்து இருக்கிறதுல எந்த வருத்தமும் இல்லைனு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க, ஆனா நான் அதை வெளி காட்டிக்க கூட முடியாம தான் இப்படி தனி அறையில் புலம்பிட்டு இருக்கேன்" என்று எண்ணி கொண்டே கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now