சுடர் - 4

2K 76 8
                                    

"புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்.."

வானொலியில் ஒலித்த பாடல் அவள் மனநிலையை எடுத்துரைப்பது போல் தோன்ற, அதை முணுமுணுத்தவாறு பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் இளமதி.

ஒருவழியாக அந்த சிறையில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதாக உணர்ந்தாள். இருப்பினும் அவள் மாமாவை பிரிந்து வந்தது அவளுக்கு வருத்தமாகவே இருந்தது.

அவள் அந்த வீட்டை விட்டு சற்று தொலைவில் இருக்க வேண்டும் என்று எண்ணி, அவ்வாறு ஒரு கல்லூரியிலேயே விண்ணப்பித்து இருந்தாள். அவள் எண்ணியது போல், அதே கல்லூரியில் அவளுக்கு இடமும் கிடைத்தது.

அவள் கல்வி செலவுகளை அரசாங்கமே ஏற்று இருக்க, அது அவளுக்கு மேலும் நிம்மதியை கொடுத்தது.

இரவு அவளை வழியனுப்ப, மணிவாசகமும் ரகுபதியும் அவளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர்.

"இந்தா மா, இந்த காசை வச்சுக்கோ" என்று கூறி அவள் கையில் பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார் மணிவாசகம்.

"மாமா, இவ்வளவு பணம் எனக்கு எதுக்கு மாமா?" அவள் பதட்டத்துடன் கேட்க, "நல்ல பொண்ணு மா நீ, போற இடத்துல இந்த காசே பத்தாது. படிப்பு, தங்குற செலவு ரெண்டும் உனக்கு இல்ல. ஆனா நல்ல துணி கூட இல்லாம போற மா. காலேஜ் போற பொண்ணு இந்த மாதிரி வெளுத்து போன துணி எல்லாம் போட்டுட்டு போனா நல்லாவா இருக்கும்?

எதுவும் மறுப்பு சொல்லாம இத வாங்கிக்கோ" என்று கூறி அந்த பணத்தை அவள் கையில் கொடுத்தார். இளமதி வேறு எதுவும் சொல்லாமல் அதைப் பெற்றுக் கொண்டாள்.

"இது என்னுடைய கிஃப்ட்" என்று கூறி ரகுபதி ஒரு பையை கொடுக்க, "இது என்ன மாமா?" அவள் அதிர்ச்சியாக கேட்டாள்.

"இதுல நீ காலேஜ்க்கு எடுத்துட்டு போக பேக், ரூம்ல உனக்கு தேவை படுற பொருள் எல்லாம் இருக்கு இதையெல்லாம் வச்சுக்கோ" என்று பாசமாக கூறி அதை கொடுத்தான்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now