சுடர் - 28

1.7K 66 17
                                    

"சார்! நீங்களே இவ கிட்ட சொல்லுங்க, என்னுடைய அப்பா பேர்ல இருந்த சொத்து மொத்தமும் இப்ப யார் பேர்ல இருக்கு?" என்றான் அருகில் அமர்ந்திருந்த அவர்களின் குடும்ப வக்கீலை பார்த்து.

"அதுல எழுபது சதவீதம் உங்க பேர்லயும், முப்பது சதவீதம் மிஸஸ் வெற்றிமாறன் பேர்லயும் இருக்கு. உங்களுடைய பங்குகளை நீங்க விற்கவோ விரிவு படுத்தவோ நினைச்சா அதுக்கு அவுங்களும் ஒத்துழைச்சா மட்டும் தான் செய்ய முடியும்.

மற்ற சொத்து விவரங்கள் வேணும்னா நான் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து எந்த ப்ராப்பர்ட்டி எல்லாம் உங்க பேர்ல இருக்குனு விளக்கமா சொல்லுறேன்" என்றார்.

பரிதி இளமதியை திரும்பி புரிகிறதா என்பது போல் பார்த்தான். இளமதி அதை யெல்லாம் கண்டு கொள்ளாமல், "நான் தருகிற டாக்குமெண்ட்ட படிச்சு உங்களால விளக்கம் சொல்ல முடியாமா சார்?" என்றாள் அவரை பார்த்து.

"ஸ்யூர்!" அவர் ஒப்புதல் அளித்ததும் உள்ளே சென்று ஒரு பெட்டியை எடுத்து வந்தாள்.

அதில் இருந்த பத்திரங்களை எடுத்து அவரிடம் கொடுத்து அதை விளக்கி கூற சொல்லி கேட்டுக் கொண்டாள்.

அதை வாங்கி பார்த்தவர் புருவங்கள் சுருங்கியது. "அவுங்க தன் பேர்ல இருந்த சொத்து மொத்தமும் உங்க பேருக்கு மாத்தி எழுதிருக்காங்க சார்.

சொத்து மேல தனக்கு எந்த உரிமையும் இல்ல, இனி எல்லாம் உங்க நிர்வாகத்தில் தான் இருக்கும். இந்த சொத்துக்களை நீங்க விற்கவும் புதுப்பிக்கவும் எந்த ஆட்சேபனையும் தனக்கு இல்லைனு இருக்கு" என்று அவர் கூறியதைக் கேட்டு பரிதி அதிர்ந்து போனான்.

"இருக்காது!" அவன் மனம் அவனை எச்சரித்தது. "எந்த டேட்டில இத ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க?" அவன் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் கேட்க, "போன வருடம் ஜுலை மாதம் இத ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க சார்" இதை கேட்டவன் விழிகள் மேலும் விரிந்தன.

அவன் தந்தை உயில் படி அவனுக்கு சொத்துக்கள் வந்து சேர வேண்டிய தினத்தில் தான் அவர் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்றி எழுதி இருக்கிறார் என்று உணர்ந்தவன் மேலும் குழம்பி போனான்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now